கேள்வி : மரண சாலை என்று அழைக்கப்படும் தொப்பூர் கணவாய் சாலையில் பயணித்த அனுபவம் உண்டா?

 

கேள்வி : மரண சாலை என்று அழைக்கப்படும் தொப்பூர் கணவாய் சாலையில் பயணித்த அனுபவம் உண்டா?

 

 என் பதில் :

 

தோப்பூர் கணவாய் - எனக்கு மிக மிக பிடித்த இடம்.

தமிழ்நாடு - தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் அழகிய மலை கிராமம்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு செல்லும் அனைவரும் கடந்து செல்லும் ஒரு பாதை.

 

இந்த கேள்வியை பார்த்த உடன் எனக்கு சற்று புரியாத ஒன்று இதை ஏன் மரண சாலை என்று கூறுகிறார்கள் என்று தான்.

 

எனக்கு தெரிந்து , நான் ஒவ்வொரு முறையும் மாருதி 800  காரில் கோவையில் இருந்து வியாபார சம்பந்தமாக  பெங்களூரு  கலாசிபாளையம்  செல்லும் போதும், சேலத்தில் வங்கியில் பணிபுரியும் போது வரும் போதும் எனக்கு மிகவும் பிடித்த இடத்தில இதுவும் ஒன்று.

 

90 சதவிகிதம் இங்கு வேகமாக செல்ல முடியாது.. ஏன் என்றால் முதல் முறை வரும் வெளி மாநில ஆசாமிகள் தாறுமாறாக ஓட்டி ஏதாவது மலைக்குள் சொருகி கொன்று நிற்பார்கள்.. அதனால் பெரும்பாலும் ஜாம் ஆகி தான் இருக்கும்.

அதையும் மீறி.. கோ ஸ்லொவ் .. கோ ஸ்லொவ் என்று ஒரு குரல் வேறு கேட்டு கொண்டே இருக்கும்

முதலில் பெங்களுருவில் இருந்து சேலம் -கோவை போகும் போது இது சற்றே இறக்கத்தில் செல்வது போல இருக்கும்..

முதல் இரண்டு, மூன்று முறை ஏதோ விளையாட்டாய் ஒரு த்ரில்லுக்காக வேகமாக இறங்கி விட்டேன்..

பிறகு தான் அங்கு பல விபத்துகள் நடந்ததை எண்ணி சற்று எச்சரிக்கையாக ஓட்ட ஆரம்பித்தேன்..

ஆனால் மிகவும் த்ரில்லிங்கான இடம் தான் அது.. வளைவு, இறக்கம் இரண்டு கலந்த ஒரு சாலை..சேலத்தில் இருந்து தருமபுரி இரண்டு முறை பைக்கில் சென்று இருக்கிறேன் ..பைக்கில் செல்லும்பொழுது பாதுகாப்பாக சென்று இருக்கிறேன் ..

 

ஆனால் காரில் செல்லும்பொழுது  சிரமம் என்ன வென்றால்,. நான் வைத்து இருந்தது மாருதி 800 அதனால் பெரிதாக கியர் மாற்றி ஓட்ட முடியாது.. ஆனால் மெதுவாக ஓட்ட ஆரம்பித்தேன்..

ஆனால் மேலே ஓட்டும் பொது தான் மாருதி  காரில் சிரமம் தெரியும்.. கொஞ்சம் விட்டாலும் பின்னால் வரும் வாகனம் நம்மை இடித்து விடும்.. முன்னாள் வேகம் குடுத்தால் , முன் செல்லும் வாகனத்தில் இடித்து விடுவோம்..

இதில் பெரிய பெரிய சரக்கு லார்ரி கள் வேறு .. மிக பெரிய சுமையை தூக்கி கொண்டு யானை நகருவதை போல் நகருவார்கள்..

மேலே செல்லும் போது கிடைக்கும் லேன் கலீல் எல்லாம் புகுந்து புகுந்து சென்று விடுவேன். அது தவறு தான் என்றாலும்.. சற்று ஜாக்கிரதையாக இருப்பேன்..

என்னை பொறுத்த வரை.. பொறுமையை கையாண்டால். அது ஒரு மந்திர சாலை..

தோப்பூர் பற்றி இன்டர்நெட் அல்லது யூடூப்பில் தேடினால், பெரும்பாலும் நெகடிவ் ஆன செய்திகளே வருகிறது மிகவும் வருத்தமான விஷயம்.

அதிலும் குறிப்பாக இந்த ஒன்றையநா யூடூப்பில் வீடியோ போடும் பைத்தியங்கள் எல்லாம் இந்த இடத்தை ஏதோ பேய் படம் அளவுக்கு வீடியோ செய்து தப்பான தகவல் பரப்புகிறார்கள்.

மற்ற நாடுகளில் எல்லாம் இப்படி இடம் இருந்தால் அதை அழகான சுற்றுலா இடமாக மாற்றிவிடுவார்கள்...நமது மக்களுக்கு அருமை புரியாது ...

இனிய பயணங்கள் .....மலரும் நினைவுகளுடன் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 






Comments