மருத்துவர் பி.சி.ராஜ் அவர்களுக்கு உடுமலைவரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகள்
மருத்துவர் பி.சி.ராஜ் அவர்களுக்கு உடுமலைவரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகள்
தோன்றிற் புகழோடு தோன்றுக அகதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
எனும் குறளுக்கேற்ப
மருத்துவத் துறையில் கோவை மருத்துவக்கல்லூரியில் நீண்ட நாட்களாக மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தவர். நமது ஊர் மனித நேய மருத்துவர் அய்யா சிவசண்முகம் அவர்களுக்கும் மருத்துவர் பத்மினிஅவர்களுக்கும் மருத்துவ ஆசிரியராக இருந்தவர். ஏராளமான பொது அறுவை சிகிச்சைகளை செய்தவர்.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக அவரிடம் கேட்டபொழுது தன்னுடைய காசோலையில் கையெழுத்திட்டு தொகை எழுதாமல் கொடுத்த வள்ளல் பெருந்தகை.
கோவை மற்றும் திருப்பூர், கோபி செட்டிபாளையம்
போன்ற பகுதிகளில் பணியாற்றும் ஏராளமான மருத்துவர்கள்
இவரிடம் பயின்ற மருத்துவர்களே.
இவருக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த ஆண்டு அவரது இல்லம் சென்று வாழ்த்துகள் தெரிவித்து உடுமலை வரலாறு நூலும் தென்கொங்கின்
தொன்மங்கள் நூலும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேலும், கடந்த டிசம்பர் 5 ஆம் நாள் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் திரு. குமாரராஜா அவர்களின் என் வாழ்க்கைப்பாதையில் பதிந்த சுவடுகள் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு நேரில் வந்து வாழ்த்தினார்.
தன்னுடைய பேத்தியின் திருமணத்திற்காக கோபியில் ஒரு திருமண மண்டபத்தைக் கட்டி அதில் கிராமியத்திருவிழாவாக நடத்தியவர். ஒரு கிராமத்தில் இருக்கும் அனைத்தும் நிகழ்வுகளையும் பெட்டிக்கடை
முதல் பனை மரம், ஆலமரம், குடிசைத்தொழில்கள் செய்யப்படும் அனைத்து வகையான கைவினைப்பொருள்களையும் காட்சிப்படுத்தி
ஒரு கிராமியத் திருவிழாவாக நடத்திய இயற்கையின் நேசன்
இன்று அவரது பிறந்த நாளில் அவரை வாழ்த்தி இன்னும் நீண்ட நாட்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோம்.
நல்லாரைக் காண்பதுவும்
நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும்
நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும்
நன்று.
1960 க்கு முன்பே இங்கிலாந்து சென்று எப்.ஆர்.சி.எஸ். எனும் மருத்துவப்படிப்பை படித்தவர். படித்து முடித்து வரும்போது அப்போது மிகப்பிரபலமான போர்டு ஹார்டினா எனும் அப்போதைய அதி நவீன வாகனத்தை தனிக் கப்பலில் வாங்கி வந்தவர். 2008 தனது பேத்தியின் திருமணத்திற்காக கோவை கொடிசியா அரங்கில் தனியாக ஒரு கிராமத்தையே உருவாக்கியவர், அந்த அரங்கில் கிராமத்தில் இருக்கும் அனைத்து இயற்கை வளங்களையும்
கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.
அந்த அற்புதமான அரங்கினை உருவாக்கிட சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு அழகான ஆலமரத்தினையும்,
அழகழகான பனை மரங்களையும், பழங்காலத்து பஞ்சு மிட்டாய் முதல் பாம்பே மிட்டாய் எனும் சொல்லப்படும்
மிட்டாய் வகைகளையும் திரைத்துறைசார்ந்த கலைவல்லுநர்களை
வைத்து மிகச்சிறப்பாக
வடிவமைத்தவர்.
தனது பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக
கோபியில் ஒரு மண்டபத்தையே கட்டியவர். கலை நுணுக்கப்பிரியர், இயற்கை ஆர்வலர், மிகப்பெரிய மனித நேய மருத்துவர், கோவை அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் திறம்பட செய்து ஆயிரக்கணக்கான மனிதர்களை வாழவைத்தவர்.
மரணத்தோடு போரிட்ட ஏராளமான மனிதர்களைக் காப்பாற்றிய
கண்ணுக்குத் தெரிந்த கடவுள்,
கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவத்துறையில் பேராசிரியராகவும்.
பொது மருத்துவராகவும்
பணியாற்றியவர். தற்போதைய கோவையில் பிரபலமான அனைத்து மருத்துவர்களும் இவரிடம் பயின்றுள்ளனர்.
தமிழ் மொழிப் பண்பாட்டையும் வரலாற்றையும் நேசிக்கும் மிகப்பெரிய மனிதர்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் குமாரராஜாவின் மிக நெருக்கமான அணுக்கமான 40 ஆண்டு கால நண்பர்.
உடுமலை வரலாறு நூலை மனிதநேய மருத்துவர்களில்
ஒருவரான பி.சி.ஆருக்குக் கொடுத்தது மிகப்பெரிய பெருமையைத் தருகின்றது.
கோபி அரசு கலைக்கல்லூரியில் பணி நிறைவு பெற்ற கணிதத்துறைப் பேராசிரியர்
முனைவர் செங்கோட்டுவேல்
அவர்களுடன் உடுமலை வரலாறு நூல் வழங்கப்பெற்றது.
மிகச் சிறந்த பண்பாளர், மனித நேயத்தை மதிக்கும் மருத்துவர் பி.சி. ஆருக்கு உடுமலை வரலாறு நூல் கொடுத்தது உண்மையில் பெருமைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
உடுமலை வரலாறு 25.12.2022




Comments
Post a Comment