காதணி விழா -பொன்னலம்மன் சோலை ..-உடுமலைப்பேட்டை
காதணி விழா -பொன்னலம்மன் சோலை ..-உடுமலைப்பேட்டை
காதணி விழா என்பது தமிழர்களிடையே காணப்படும் ஒரு சடங்காகும். இந்த சடங்கில் குழந்தைகளுக்கு காதில் துளையிட்டு தங்கக் காதணி அணிவிக்கப்படுகிறது. இச்சடங்கின் முறைகள் சாதி சமயத்திற்கு தக்கவாறு மாறுபடுகிறது. நல்ல நாள் மற்றும் நேரத்தினை கணக்கிட்டு காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர்.
காது குத்தி மூன்றிலை கொண்டவரே (பசு, பதி, பாசம்) 1.உயிர் 2. இறை, 3. தளை என்று மூன்றையும் துய்த்து உய்வு பெறமுடியும்” என்று மூன்றையும் துய்த்து உய்வு பெற முடியும்” .. .. குருபாரம்பரியம் குறிக்கின்றது.
காதணிகள் அணிவது அழகுக்காக மட்டுமன்றி அதில் உடல் நலம் சார்ந்த பல விஷயங்களும் அடங்கி உள்ளது.
·
பெண்குழந்தைகளுக்கு காதணி அணிவிப்பதன் மூலம் அவர்கள் வயதிற்கு வந்த பின் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும் என ஆயுர்வேத மருத்துவத்தின் படி நம்பப்டுகின்றது.
·
மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு காது மடலி்ன் மையப்பகுதி முக்கிய பங்காற்றுகிறது. அதில் அழுத்தம் கொடுக்கும் போது செயல்பாடுகள்
ஆரோக்யமான முறையில் வளர்ச்சி அடைகிறது.
·
உடலின் ஆற்றல் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
·
பார்வை திறனை மேம்படுத்துகிறது.
·
காது குத்தும் பகுதியில் இரண்டு முக்கிய அக்குபிரசர் புள்ளிகள் உள்ளன. அது குழந்தையின் கேட்கும் தன்மையை மேம்படுத்துகிறது.
·
செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
மாப்பிளை வீட்டை சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் அவரது தோட்டத்து சாலையில் இருக்கும் அவரது இல்லத்திற்கு சென்று கலந்து கொண்டு ..எனது தாத்தா ..பாட்டி ..அப்பா ,அம்மாவின் சொந்தங்களை சந்தித்து வந்தது இன்றைய ஞாயிறு இனிதாக அமைந்தது ..
அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681






Comments
Post a Comment