இந்த 2022 ல் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயற்பாடுகள்
இந்த 2022 ல் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயற்பாடுகள்
சனவரி 4 ஆம் தேதி கோயிற் கலை ஆய்வாளர் முனைவர் சசிகலா உடுமலை ஜிவிஜி கல்லூரி வரலாற்றுத் துறையில் உரை
போளரப்பட்டி மந்திரக்கல்,
கடத்தூர் கொங்க விடங்கீஸ்வரர் கோயில், மருதீசர் கோயில் ஆய்வுப்பணிகள் உடன் முனைவர் விஜயலட்சுமி, வி.கே.சிவகுமார்
சுனவரி 5 பேரூர் திருப்பெருந்திரு மருதாசல அடிகளார் அவர்களுக்கு உடுமலை வரலாறு மற்றும் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிப்பு
சனவரி 8 நஞ்சேகவுண்டன்புதூர் உச்சிமாகாளியம்மன் கும்மி ஆட்டக்குழுவினர் பிப்ரவரி நிகழ்வுக்காக
படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
சனவரி 10 ஆம்நாள் கோவை மாவட்ட அருங்காட்சியக
மண்டல அலுவலர் திரு. நந்தகுமார் போளரப்பட்டி
மந்திரக்கல் ஆய்வுக்கு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்தல்
சனவரி 15 ஆம் நாள் திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருநாள் நிகழ்வு
சனவரி 21 ஆம் நாள் உடுமலை வரலாற்று நூலை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் வழங்குதல்
சனவரி 24 ஆம் நாள் திருவள்ளுவர் திருக்கோட்டத்திற்கு உடுமலை ரோட்டரி சங்கத்தினரால் மேற்கூரை அமைக்கப்பட்டு
மாண்புமிகு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் மூலம் திருவள்ளுவர் திருக்கோட்டத்திற்கு ஒப்படைக்கப்படும் நிகழ்வு
சனவரி 28 வெற்றி ( டிராவலிங் தமிழா சேனல்) கரைவழிநாட்டு குழுமூர் நூல் பரிசளிப்பு
சனவரி 30 ஆம் நாள் புளியம்பட்டி மால கோயில் ஆய்வு உடன் முனைவர் விஜயலட்சுமி, வழக்கறிஞர் சத்தியவாணி,
அன்று மாலை கோவை வனத்துறைக்கல்லூரி பேராசிரியர்களுடன் உடுமலை வரலாறு நூல் பரிசளிப்பு
பிப்ரவரி 8 உடுமலை வரலாற்று துணைத்தலைவர் திரு.வி.கே.செல்வராஜ் புதல்வன் திரு.வி.கே.எஸ். பிரபாகரன் திருமண வரவேற்புக்கு பதாகை வைத்தது (பர்வீன் சுல்தானா வருகை)
பிப்ரவரி 10 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன்
அவர்களுக்கு உடுமலை வரலாறு தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிப்பு
தோழர் அப்துல் கய்யும் வார்டு உறுப்பினராக
வெற்றி பெற்றமைக்கு
வாழ்த்து தெரிவித்தல்
பிப்ரவரி 27 சென்னை புத்தகக்கண்காட்சியில் அமைச்சர் ரகுபதி மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களால் உடுமலை வரலாற்று நடுவத்தின் வெளீயிடான தென்கொங்கின் தொன்மங்கள் சென்னை புத்தகக்கண்காட்சியில் வெளியிடப்பெற்றது.
மார்ச் 2 ஆம் நாள் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு தென்கொங்கின்
தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.
மார்ச் 3 நகர மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு மு. மத்தீன் அவர்களுக்கு மலர்கீரிடம்
வழங்கி சால்வை அணிவிக்கப்பட்டது
மார்ச் 5 ல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
மார்ச் 6 ல் உடுமலை அமிர்தநேயன் அவர்களுக்கு
நூல் வழங்கப்பட்டது.
மார்ச் 7 ல் திராவிட இயக்கத் தமிழர் அமைப்புச்செயலாளர் திரு.கா.சு. நாகராசன் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.
மார்ச்10 ல் மாவட்ட ஆளுநர் முனைவர் நித்தியானந்தம் தாளாளர் ஸ்ரீ ராமு கலை அறிவியல் கல்லூரி அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிப்பு
மார்ச் 15 ல் ஸ்ரீ ஜிவிஜி கல்லூரி செயலாளர் திருமதி சுமதி கிருஷ்ணபிரசாத் அவர்களுக்கு தென்கொங்கின்
தொன்மங்கள் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
மார்ச் 15 ல் கரட்டுமடம் பரமேஸ்வரன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டுநூல் பரிசளிக்கப்பட்டது.
மார்ச் 19 ல் திருப்பூர் மணிவண்ணன் அவர்களுடன் தமிழ் மரபு அறக்கட்டளை ஏப்ரல் பயணத்திற்கு முன்னோட்டமாக
இடங்கள் சென்று பார்க்கப்பட்டது.
மார்ச் 27 ல் ஆச்சிபட்டி நிகழ்வில் கதை சொல்லி பவா செல்லதுரை அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.
மார்ச் 28 தென்கொங்கின்
தொன்மங்கள் நிகழ்வு முதல் அழைப்பிதழ் திரு. முத்துக்குமாரசாமி அவர்களுக்கு
வழங்கப்பட்டது.
மார்ச் 30 ல் திரு.சுபாஸ் கிருஷ்ணசாமி
அவர்களுக்கு தென்கொங்கின்
தொன்மங்கள் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
ஏப்ரல் 16 ல் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் மூன்றாம் வெளியீடான தென்கொங்கின் தொன்மங்கள் எனும் தொல்லியல் சமூகவியல் சார்ந்த நூல் வெளியிடப்பெற்றது.
தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி, திமுக சுற்றுச்சூழல் மாநில அணி செயலாளர் திரு.கார்த்திகேய சிவசேனாதிபதி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. கு.சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை
தமிழ் மரபு அறக்கட்டளையுடன் மறையூர் மரபுநடை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு
சுமார் 70 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் 18 திங்கட்கிழமை
காலை பழனி கல்லூரியிலும், நண்பகல் ஜிவிஜி கல்லூரியிலும் ஒரே நாளில் இரண்டு கருத்தரங்குகள் நடத்தப்பெற்றது.
மே 2 உடுமலை நகர மன்றத்தலைவர் அவர்களுக்கு
திருவள்ளுவர் சிலை மற்றும் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிப்பு
மே 13 கிணத்துக்கடவு
ஈஸ்வர் கலை அறிவியல் கல்லூரிக்கு முனைவர் பர்வீன் சுல்தானா வருகை. கல்லூரிக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிப்பு
மே 14 உடுமலை உடுமலை நகராட்சி ஆணையாளருக்கு உடுமலை வரலாறு நூல் மற்றும் தென்கொங்கின்
தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.
மே 15 பேருந்து வழங்கிய பொள்ளாச்சி பி,ஏ. கல்லூரிக்கு தென்கொங்கின்
தொன்மங்கள் நூல் வழங்கி சால்வை அணிவிக்கப்பட்டது.
மே 17 ல் திரு. அமர்ந்hத் அவர்களுக்கு தென்கொங்கின் தொன்மங்கள் நூல் வழங்கி திருவள்ளுவர்
சிலை பரிசளிக்கப்பட்டது.
மே 28 ல் புதுக்கோட்டை சுற்றியுள்ள கோயில்கள் சித்தன்ன வாசல், குடுமியான் மலை, விஜயாலய சோழீஸ்வரம் மரபு நடையில் பங்கேற்பு
சூன் 1 ஆம் நாள் மடத்துக்குளம் வந்த முனைவர் சுந்தரவள்ளி அவர்களுக்கு
உடுமலை வரலாறு மற்றும் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.
சூன் 7 ஆம் நாள் கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி தொல்லியல் கருத்தரங்கில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் அறிமுகப்படுத்தி சிறப்புரை
சூன் 6 இந்திய ஆட்சிப்பணித்தேர்வில் வெற்றி பெற்ற உடுமலை எஸ்வி.புரம் சந்தோஷ்குமார் அவர்களுக்கு
உடுமலை வரலாற்று ஆய்வுநடுவத்தின் சார்பில் உடுமலை வரலாறு நூல் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
சூன் 4 ல் கண்ணாடிப்புத்தூர் திரு. கணபதி செல்வராஜ் அவர்களிடம் கண்ணாடிப்புத்தூர் கல்வெட்டு கோயில்கள் குறித்து நேரடி கள ஆய்வு
சூன் 5 ல் திருப்பூர் முத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உடுமலை வரலாறு வெளியிட்டமைக்கு
திருப்பூர் முத்தமிழ்ச்சங்கத்தின் விருது பெறப்பட்டது
உடுமலை வனச்சரக அலுவலர் திரு. கணேஷ்ராம் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.
சூன் 9 ல் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் மதிப்புறு தலைவர் முனைவர் விஜயலட்சுமி அவர்களின் திருமகள் அனு - சூர்யா அவர்களுக்கு திருமண வாழ்த்து வழங்கப்பட்டது.
சூன் 10 ல் இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற திரு .சந்தோஷ்குமார் அவர்களுக்கு மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கு.சண்முகசுந்தரம் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார்.
முனைவர் விஜயலட்சுமி
அவர்களின் அன்புமகள் சூர்யா-அனு அவர்களின் திருமணம் கொரோனோ காலத்தில் யாரும் இல்லாமல் நடந்ததால் மீண்டும் அவர்கள் வெளிநாடு சென்று திரும்பி வந்த பொழுது வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் மணமக்களுக்கு வாழ்த்து மடல் வழங்கப்பட்டது.
சூன் 16 ல் உடுமலை வரலாறு இரண்டாம் பதிப்பு முதல் பிரதி உடுமலை நகர மன்றத் தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சூன் 19, 20 சென்னையில் தலைமைச்செயலகத்தில் அருங்காட்சியகத்தில் ஆய்வுப்பணி
சூன் 23 திருமிகு வேலுசாமி அவர்களுக்கு தென்கொங்கின்
தொன்மங்கள், உடுமலை வரலாறு இரண்டாம் பதிப்பு வழங்கப்பட்டது.
சூன் 26 ல் உடுமலை காரத்தொழுவு கூட்டத்திற்கு
வருகை தந்த சொல்லின் செல்வர் திரு. நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு
உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.
சூலை 1 ஆம் நாள் கொழுமம் வீரசோழீஸ்வரர்
திருக்கோயிலில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கற்பகம் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் கரைவழி நாட்டுக் குழுமூர் புத்தகத்தை மாதிரி வெளியீட்டு நிகழ்வு
சூலை 10 ல் சூலூர் வரலாறு தொகுத்த புலவர் செந்தலை கௌதமன் அவர்களுக்கும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. ராசா அவர்களுக்கும் உடுமலை வரலாறு நூல் சூலூர் நிகழ்வில் வழங்கப்பட்டது.
சூலை 11 ல் கடத்தூர் பழம்பெரும் ஆசிரியர் திரு.பலராமன் அவர்களுக்கு
உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.
சூலை 15 காமராசர் பிறந்த நாள் விழா மற்றும் கல்விப்பரிசளிப்பு விழா மலையாண்டிபட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
சூலை 16 ஆம் நாள் புதுக்கோட்டையில் நடைபெற்ற தொல்லியல் கழக மாநாட்டில் உடுமலை வரலாற்றின் சார்பில் வெளியிடப்பெற்ற தென்கொங்கின் தொன்மங்கள் நூல் வெளியிடப்பெற்றது.
சூலை 17 பொற்பனை கோட்டை இருந்த இடம் சென்று பார்க்கப்பட்டது.
சூலை 17 தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள்
ஆய்வு செய்யப்பட்டது.
சூலை 19 ல் சென்னை அருங்காட்சிய பொறுப்பாளர்
திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு உடுமலை வரலாறு மற்றும் தென்கொங்கின்
தொன்மங்கள் நூல் வழங்கப்பட்டது.
சூலை 20 ல் ஆவின் பால் துறையில் பணியாற்றும் உடுமலை மற்றும் தாராபுரம் சரகத்தின் வட்டார அதிகாரியாகப் பணியாற்றும் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு தென்கொங்கின்
தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.
சூலை 31 அன்று தேவனூர்புதூர் அன்பு செல்வம் அவர்களுக்கு காந்தி நகர் தலைவர் திரு. குமாரராஜா அவர்களது இல்லத்தில் உடுமலை வரலாறு மற்றும் தென்கொங்கின்
தொன்மங்கள் நூல் நினைவுப்பரிசளிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 15 ல் உடுமலை அமுதப்பெருவிழாவில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தளி எத்தலப்பர் அலங்கார ஊர்தி உடுமலையில் நகர் வலம் வந்தது.
செப்டம்பர் 3 ல் மடத்துக்குளம் மயானத்தில் திப்பு சுல்தான் காலத்தில் வாழ்ந்த ஒருவரின் இறப்பு உருது எழுத்துக்களால் கல்வெட்டாகப்பதிவு செய்யப்பட்டது.
ஆய்வு செய்யப்பட்டது.
உடன் முனைவர் விஜயலட்சுமி. திரு. வி.கே.செல்வராஜ்.
செப்டம்பர் 6 ல் நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி நர்மதா அவர்களுக்கு
உடுமலை வரலாற்றின் சார்பில் உடுமலை வரலாறு நூல் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. உடன் ஆர்.ஜி.எம்.கார்த்தி, எஸ்.கே.பி. அன்பரசு ஆசிரியர் , முனைவர் விஜயலட்சுமி. திரு. வி.கே.செல்வராஜ்
செப்டம்பர் 9 ல் கொழுமம் வீரசோழீஸ்வரர் திருக்கோயில்
பாலாலய நிகழ்வு கலந்துகொண்டு கரை வழி நாட்டுக்குழுமூர் நூல் வெளியிட அனுமதி பெறப்பட்டது.
செப்டம்பர் 10 ல் நஞ்சேகவுண்டன்புதூர் வள்ளிக்கும்மியின் 100 ஆவது நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுப்பரிசு
வழங்கப்பட்டது. உடன் முனைவர் விஜயலட்சுமி, திரு. வி.கே.செல்வராஜ், வழக்கறிஞர் சத்தியவாணி
நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி கலாமணி ஆசிரியர் அவர்களுக்கும் முனைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும்
உடுமலை வரலாறு நூல் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. உடன் முனைவர் விஜயலட்சுமி. திரு. வி.கே.செல்வராஜ்
செப்டம்பர் 11 ல் சோழமாதேவி திரு. சாகுல் அமிது அவர்கள் வீட்டில் கரைவழி நாட்டு சோழமாதேவி குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு ஆகஸ்ட் 15 விடுதலை நாள் மலர் வழங்கப்பட்டது.
செப்டம்பர் 15 ஆம்நாள் அண்ணா தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்வு உடுமலை கிளை எண் 2 நூலகத்தில் கலந்து கொள்ளப்பட்டது.
உடன் முனைவர் விஜயலட்சுமி,
துணைத்தலைவர்கள் திரு. வி.கே.செல்வராஜ், திரு. ராஜசுந்தரம்.
செப்டம்பர் 17 உடுமலை தொழிற்பயிற்சிக்கல்லூரியில் கலந்து கொண்டு தந்தை பெரியார் குறித்து சிறப்புரையாகப்பேசப்பட்டது. உடன் வி.கே.செல்வராஜ்.
செப்டம்பர் 18 கொழுமம் கல் மண்டபம் ஆய்வு செய்யப்பட்டது தினமலரில் செய்தியாக வெளியிடப்பெற்றது.
செப்டம்பர் 25 உடுமலை நாராயணகவி பிறந்த நாளுக்கு 30 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பதாகை வைக்கப்பட்டது.
செப்டம்பர் 20 ல் உடுமலை புத்தகத்திருவிழாவில் உடுமலை வரலாறு 15 புத்தகங்களும் தென்கொங்கின்
தொன்மங்கள் 10 புத்தகங்களும்
விற்பனைஆயின.
செப்டம்பர் 27 ல் உடுமலை வருகை தந்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூலும், தென்கொங்கின் தொன்மங்கள் நூலும் பரிசளிக்கப்பட்டது.
செப்டம்பர் 30 ல் தி.மு.க.வின் முதுபெரும் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. விடுதலை விரும்பி அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.
அக்டோபர் 2 ல் உடுமலை மக்கள் பேரவையின் சார்பில் உடுமலை வரலாறு நூல் தொகுத்தமைக்காக தலைவர் திரு. குமாரராஜா அவர்களின் பரிந்துரையில் நினைவுப்பரிசும் சால்வையும் வழங்கப்பட்டது.
04.10. ல் திருவண்ணாமலை
வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொறுப்பாளர் திரு.சுப்பிரமணியம் உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.
05.10. ல் காவல் துறை அதிகாரி திரு. செந்திலின் நண்பர் அவர்களுக்கு
உடுமலை வரலாறு தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.
07.10. ல் கொழுமம் வீரசோழீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் திருமதி சங்கீதா அவர்களுக்கு தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.
09.10. ல் பொதுவுடைமைப்போராளி வரலாற்றில் திருவண்ணாமலை
நூல் தொகுத்த திரு. த.மா. பிரகாஷ் அவர்களுக்கு சால்வை அணிவித்து உடுமலை வரலாறு , தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிக்கப்பட்டது.
அக்டோபர் 15 சனிக்கிழமை பழனி ஆண்டவர் பண்பாட்டுக்கல்லூரி மாணவர்கள் 35 பேர் மற்றும் பேராசிரியப்பெருமக்கள் சித்ரா, அலமேலு ஆகியோருடன் ஐவர்மலை, மதகடிபுதூர் பாறை ஓவியங்கள், கொழுமம் வீரசோழீஸ்வரர் திருக்கோயில்,
கணியூர் சிவன்கோயில்,
கடத்தூர் கொங்க விடங்கீஸ்வரர் கோயில், மருதீசர் கோயில் வரலாற்று சான்றுகளோடு
முனைவர் மதியழகன், முனைவர் விஜயலட்சுமி, வழக்கறிஞர் சத்தியவாணி ஆகியோருடன் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
நவம்பர் 20 ல் முண்டுவேலாம்பட்டி பல்லாக்குத்திருக்கோயில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு
ஆவணப்படுத்தப்பட்டது.
டிசம்பர் 4 ல் பொன்னாலம்மன் கோயில் கொற்றவை வழிபாட்டுக்கான சிலை ஆவணப்படுத்தப்பட்டு செய்தி வெளியிடப்பெற்றது.
உடன் பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் முனியப்பன், பேரா. செ.ராபின், முனைவர் விஜயலட்சுமி. (பத்திரிகை செய்தி)
டிசம்பர் 18 வீரசோழியம்மன்
கோயில் ஆவணப்படுத்தப்பட்டு செய்தியாக்கப்பட்டது. உடன் பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி
தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் முனியப்பன், பேரா. செ.ராபின், முனைவர் விஜயலட்சுமி(பத்திரிகை செய்தி)
19.12. உடுமலை தி.மு.க.வின் முதுபெரும் ஆளுமை திரு. பருவதகண்ணன் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிப்பு
டிசம் 25 பொம்மநாயக்கன்பட்டி மாலைகோயில் ஆவணப்படுத்தப்பட்டது. உடன் பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் முனியப்பன், பேரா. செ.ராபின், முனைவர் விஜயலட்சுமி (பத்திரிகை செய்தி)
டிசம்பர் 26 ல் 800 ஆண்டு கால பழமையான வீரசோழன் வழிபட்ட வீரசோழியம்மன்
திருக்கோயில் சமயம் தொலைக்காட்சி பதிவு
டிசம்பர் 29 சமயம் தொலைக்காட்சியில் பொம்ம நாயக்கன்பட்டி
நானூறு ஆண்டு மாலகோயில்கள் ஆவணப்பதிவு இதற்கு ஒத்துழைப்பு
கொடுத்த அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கும், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொறுப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த
நன்றி.
உடுமலை வரலாறு 29.12.2022



Comments
Post a Comment