கேள்வி :
என் பதில் :
நான் சொல்ல போகிற விஷயத்தில்.. அனுபவம் குறைவுதான். ஆனாலும் அறிந்ததை சொல்கிறேன்.
உங்களுக்கு வேண்டியவர்கள்
யாராவது.. நேர்மையானவர்,
நல்ல மனிதர், உழைக்க கூடியவர், (ஆனால் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள்)
என்று தெரிந்தால்.. அவர்களை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு எந்த தொழில் தெரியுமோ.. அதில் குறைந்த அளவு முதலீடு போட்டு அதே தொழிலை நீங்கள் நடத்துங்கள். அதற்கு முன்பாக அந்த தொழிலில் இருக்கின்ற நல்லது கெட்டது கொஞ்சமாக நீங்களும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.(அதற்கு ஒரு வார பயிற்சி போதும்)
இதுபோல திக்கற்றவர்களாய்
இருக்கிறவர்கள் (குறைந்தது) 20 பேரை இணைத்துக்கொள்ளுங்கள். 50000 முதலீட்டில்
தினசரி 500 ரூபாய் (அதுவே போதும்) (சில தொழில்களில் தினசரி ஆயிரம் ரூபாய் கூட கிடைக்கும்)கிடைக்கிறதா? அவர்களுக்கு 250 ரூபாய் சம்பளம். உங்களுக்கு லாபம் 250 ரூபாய்.
20*250=5000 ஒரு நாளைக்கு.5000*30=1,50,000 ஒரு மாதத்திற்குஉங்களுக்கு லாபம் நிச்சயம் தானே!
வயதான மாமனார், வயதான மாமியார், ஊரைச் சுற்றும் தம்பி, தினமும் புலம்பும் எதிர் வீட்டுக்காரன்_நண்பன், சொந்தம் சுற்றம், அனைவருக்கும் ஆதரவு கொடுங்கள். நான் சொல்வது சுயநலம் போல தோன்றும்.. அதுவே நாளடைவில் பொதுநலமாக மாறிவிடும்!
முதலீடு எதுவும் செய்வதற்கு வசதிகள்உங்களிடம் இல்லையா? அங்கிட்டு வாங்கி இங்கிட்டு.. ஒவ்வொருவரிடமும் கொடுத்துவிட்டு.. வருகிற கலெக்ஷனை இங்கிட்டு வாங்கி அங்கிட்டு கொடுத்துவிடுங்கள்! உதாரணமாக.. 250 வடை மொத்த வியாபாரியிடம்
வாங்கி தள்ளுவண்டியில்
வியாபாரம் செய்வது! 250 ரூபாய்க்குகீர கட்டு வாங்கி வியாபாரம் செய்தால் கூட 200 ரூபாய் நிச்சயம். காய்கறி மொத்த வியாபாரிகளிடம்.. அதிகாலையில்
சரக்கு வாங்கி.. மாலை 7 மணிக்கு பணம் செட்டில்மெண்ட் செய்யலாம் சார். கோயில் வாசலில் செருப்பு காண்ட்ராக்ட் எடுத்தால் கூட.. தினசரி 500 ரூபாய் சம்பாதிக்கலாம்
சார். 250 ரூபாய்க்கு இட்லி மாவு வாங்கி.. தோசை இட்லி வியாபாரம் செய்தால் கூட.. 500 ரூபாய் சம்பாதிக்கலாம் சார். நான் சொல்வதெல்லாம் 8 மணி நேர டூட்டி இல்லை. ஆறு மணி நேர டூட்டியே போதும்!
வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்.. ஆழக் கடலும் சோலையாவும்.. ஆசையிருந்தால் நீந்தி வா!
இன்னும் விவரங்கள் தேவை என்றால் கேளுங்கள். சொல்கிறேன்.நன்றி.
Comments
Post a Comment