'தமிழக நடுகல் மரபு'கண்காட்சி-மதுரை திருமலை நாயக்கர் மஹால்
உலக மரபு வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்று வந்த நமது 'தமிழக நடுகல் மரபு'கண்காட்சி இன்றுடன் வெற்றிகரமாக முடிந்தது. நிறைவு விழாவில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளரும் மூத்த வரலாற்றாளருமான முனைவர் சொ.சாந்தலிங்கம் ஐயா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரது ஆக்கமும் ஊக்கமும் தான் மதுரையில் இக்கண்காட்சியினை வெற்றிகரமாக நடத்த காரணமாக அமைந்தது.
திருமலை நாயக்கர் மஹாலில் நடத்த அனுமதி அளித்து அதற்குறிய உட்கட்டமைப்பு வசதிகளை முன்னின்று செய்து தந்து உதவிய மாண்புமிகு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அமைச்சர் பெருமகனார் திரு தங்கம் தென்னரசு அவர்களுக்கும் மற்றும் ஆணையர் (மு.கூ.பொ) முனைவர் இரா.சிவானந்தம் அவர்களுக்கும் எங்களின் நன்றியினை உரித்தாக்குகிறோம். சென்னையிலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையிலும் தற்போது மதுரையிலும் இக்கண்காட்சியினை எங்களுடன் இணைந்து நடத்திய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனர் திரு சுந்தர் கணேசன் அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சிறப்புரை நிகழ்வுகளையும் கண்காட்சி தொடர்பான நிகழ்வுகளையும் முன்னின்று செய்து தந்த பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்திற்கும் எங்களின் நன்றியினை நல்குகிறோம்.
கண்காட்சியின் துவக்க நாள் முதல் இறுதிவரை காலை முதல் மாலை வரையில் எங்களுடன் இணைந்து தன்னார்வ பங்களிப்பு செய்த மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் வரலாற்று துறை மாணவர்களுக்கும், அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுரையில் எங்களுக்கு பெருந்திரளான ஆதரவினை நல்கிய பள்ளி/ கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் ஊடகத்தாருக்கும் நண்பர்களுக்கும் பொது மக்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
வழமைப்போல் தமிழ்நாட்டில் எங்கு நிகழ்ச்சி நடத்தினாலும் ஓடோடி வந்து அன்பையும் ஆதரவையும் அள்ளித்தரும் நூற்றுக்கணக்கான யாக்கை தன்னார்வலர்களுக்கு நன்றிகள் பல.
யாக்கை குழு ....
Comments
Post a Comment