கேள்வி : உங்களுடைய சம்பளத்தால் நீங்கள் அடைந்தது என்ன?
அது
ஒரு
கனாக்காலம்
ஒரு
கம்பெனியில் வேலை.
காலை
கீழே
வைக்கவில்லை. எங்கே
போனாலும் கேப்
(cab). ரயிலா
இரண்டாம் வகுப்பு (ஏசி)தான். சீக்கிரம் போக
வரணுமா
புக்
பண்ணு
ஃப்ளைட். வெளிய
வந்தியா? வீடு
வரைக்கும் cabதான்.
சம்பளம்? ம்ம்
அது
முக்கால் சதம்.
ராஜயோகம் தான். மனைவியின் நிறுவனம் ..என்று
இது 6 வருட
வாழ்க்கை. அப்புறம் ? ஆனா
அன்னிக்கு தெரியாது. அடுத்து என்ன
நடக்கும்னு.
சனி
பகவான்
வந்தால் ஒரு
ஏழரை
வருடங்கள் தான்.
ஆமாம்.
சொர்க்கத்திற்கு பிறகு
நரகம்
தானே.
ஒரு
வருடம்
அல்ல
இரண்டு
வருடங்கள் அல்ல.
ஏழு
வருடங்கள். படாத
பாடு
படுத்திவிட்டார்.
எந்த
வேலையும் கிடைக்கவில்லை. கிடைத்த வேலை
மூன்று
மாதம்
அ
ஆறு
மாதங்கள். வீட்டில் வேறு
பிரச்சினைகள். சண்டை
சச்சரவு எல்லாம் நடந்தது. வாழ்க்கையின் விளிம்பிற்கே வந்து
விட்டேன். எழுதக்
கூட
முடியாத வெவ்வேறு எண்ணங்கள்.
நிற்க.
இதற்கு
பிறகு
நல்லதே
நடந்தது. பல
வருட
போராட்டங்களுக்கு பிறகு
வாங்கிய அந்த
முதல்
சம்பளம் அதன்
மதிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒரே
வார்த்தையில் சொல்வதானால்
👉(மறுபடி)முதல் சம்பளம் — மீண்ட
சொர்க்கம் 👈
🙏பொறுமையாக படித்தமைக்கு நன்றி 🙏
Comments
Post a Comment