குடும்ப ஆதிக்கத்தால் குலைந்து போன நாயக்கர் ஆட்சி!

- பொ.வேல்சாமி

 

சோழ ராச்சியத்தை ஆண்ட நாயக்கர் ஆட்சி ஒரே இரவில் கவிழ்ந்து, மராட்டியர் கைவசம் போன  வரலாறு இன்றைக்கும் ஒரு படிப்பினை தான்! திறமையாளர்களையும், விசுவாசமானவர் களையும் புறக்கணித்து, வாரிசுகளை பட்டத்துக்கு கொண்டு வந்ததால், தஞ்சை நாயக்கர்கள் ஆட்சியை இழந்தது கவனத்திற்குரியது!

தென்னிந்தியாவை ஆண்ட நாயக்கர் அரசர்களுக்குள் ஒற்றுமையின்றி பல போர்கள் நடைபெற்று இவர்களுடைய பலம் குறைந்து கொண்டே வந்துள்ளதாகப் பல நிகழ்வுகளை நாயக்கர் வரலாறுகளில் பார்க்க முடிகின்றது. அப்படியான நிகழ்வுகளில் நாயக்கர் அரசுகளுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கிய நிகழ்வாக ஒருநிகழ்ச்சி 1675 இல்நடைபெறுகின்றது.

மதுரை நாயக்கர் அரசுக்கும், தஞ்சைநாயக்கர் அரசுக்கும் தொடர்ந்து பல புகைச்சல்கள் இருந்ததாகவும் அதன் அடிப்படையில் சிலபல போர்கள் நிகழ்ந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.அப்படி நிகழ்ந்த போர்கள் சிலவற்றில் மதுரை நாயக்கரும் வேறு சிலவற்றில் தஞ்சை நாயக்கரும் வெற்றி பெற்றதாகவும் செய்திகள் உள்ளன.

தஞ்சை நாயக்கர் அரண்மனை

ஒரு கட்டத்தில் மதுரை அரசர் சொக்கநாத நாயக்கர்( 1659 -1682 ) தஞ்சை அரசர் விஜயராகவ நாயக்கரின் (1631 – 1675 ) மகளை பெண் கேட்டதாகவும் அதனை தஞ்சை அரசர் மறுத்து விட்டார் என்றும் அதனால் மதுரை அரசர் தஞ்சை மீது படையெடுத்து வந்து தஞ்சையை முற்றுகையிட்டு அச்சப்படுத்திக் கொண்டிருந்தார். எனவே, இந்தப் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கு தஞ்சை அரசர் பீஜபூர்சுல்தானிடம் படை உதவி கேட்டு இராயசம் வெங்கண்ணா ( இராயசம் என்பதை முதலமைச்சர் பதவி என்று கூறுகிறார்கள்) என்பவரை அனுப்பி வைத்தார்.

அங்கு சென்று  திறம்படப் பேசி, உதவி கேட்ட வெங்கண்ணாவின் வேண்டுகோளை ஏற்று பீஜபூர் அரசன் அல்லிய தில்ஷாகலாஸ்கான், அப்துல்ஹலீம் என்ற இருவருடன் தன்படைகளையும் சத்ரபதி சிவாஜியின் அண்ணன் ஏகோஜியின் படைகளையும் சேர்த்து தஞ்சையைக் காப்பாற்றி விஜயராக வநாயக்கரிடம் ஒப்படைக்கும்படி அனுப்பிவிட்டார். ( இப்படிப் படைகளை அனுப்புவதற்கு குறிப்பிட்ட தொகையை பேரமாக பேசி வாங்கிக் கொள்ளும் வழக்கம் அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது )

நாயக்கர்களை சித்தரிக்கும் ஓவியம்

அவ்வாறு ஏகோஜியின் தலைமையில் தஞ்சை வந்தடைந்த படைகள், தஞ்சையை முற்றுகையிட்டிருந்த மதுரை படைகளை அடித்து விரட்டி விட்டு தஞ்சை அரசர் விஜயராகவநாயக்கரிடம் அதற்கான தொகையைக் கேட்டனர். அந்தத் தொகையை முழுமையாகக் கொடுக்க முடியதாதிருந்த தஞ்சை அரசர் பாதிதொகையை ஏகோஜியிடம் கொடுத்துவிட்டு மீதிதொகையை பாமினி சுல்தானின் ஆட்களிடம் சிலநாட்கள் கழித்து கொடுத்து விடுவதாக வேண்டிக் கொண்டு அவர்களுடைய ஆட்களையும் தஞ்சையில் நிறுத்திக் கொண்டதாகத் தகவல்கள் உள்ளன.

தான் பெற்றுக் கொண்ட தொகையுடன் புறப்பட்டு சென்ற ஏகோஜி கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திருமழபாடியில் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் தஞ்சையில் பலவிதமான குளறுபாடியான நடவடிக்கைகள் நடந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. அதில் ஒரு வகையான தகவலின்படி தஞ்சை அரசன் விஜயராகவநாயக்கர் தன்னுடைய வீட்டார் மற்றும் உறவினர்கள் பேச்சைக் கேட்டு இராயசம் வெங்கண்ணாவின் பதவியைக் குறைத்து, அவர் பதவியைவிட மேம்பட்ட பதவி ஒன்றை உதவாக்ககரையாக இருந்த தம்பிக்கு தந்து, அவருக்கு கீழ் வெங்கண்ணாவை செயல்படும்படியான நிலையை உருவாக்கிவிட்டார். இதனால் வெங்கண்ணா வெறுப்பும் கோவமும் அடைந்து விட்டதாகவும் செய்திகள் பதிவாகியுள்ளன. மன்னருக்கு நாம் ஆபத்து காலத்தில் எல்லாம் திறமையாக உடனுக்குடன் செயல்பட்டு, விசுவாசமாக இருந்ததற்கு இதுவா பரிசு? என மனம் வெதும்பினார் வெங்கண்ணா!.

இத் தருணத்தில் பீஜபூர் மீது ஔரங்கசீப் படையெடுத்து வந்து, அந்த மன்னனைக் கொன்று விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்தத் தகவலைஅறிந்த ஏகோஜி தான் எங்கு செல்வது என்று குழம்பி நின்றதாகவும் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றால்  ஔரங்கசீப்பின் படைகளை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கலங்கியதாகவும் கூறப்படுகின்றன. இதே செய்திகள் இராயசம் வெங்கண்ணாவுக்கும் கிடைக்கின்றது. இத்தகைய ஒருவாய்ப்பை இராயசம் வெங்கண்ணா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

 

அதாவது மேற்படி குடும்ப ஆதிக்க நிகழ்வுகளால் கலங்கி நின்ற வெங்கண்ணா ஏகோஜியிடம் சென்று எங்கே போவது எனக் குழம்பி நின்ற ஏகோஜியை திருமழபாடியில் சந்தித்தார்! வெங்கண்ணாவைக் கண்ட ஏகோஜி, தன்னுடைய நிலையைச் சொல்லி என்னசெய்வது என்று புரியாமல் தவித்ததை கண்ட வெங்கண்ணா, ஏகோஜியிடம், ”நீங்களே தஞ்சையின் அரசராகி விடுங்கள்என்று ஆலோசனைக் கூறுகிறார். ”அது எப்படி முடியும்?” என்று ஏகோஜி கேட்டதாகவும், ”மதுரை நாயக்கரிடமிருந்து தஞ்சையைக் காப்பாற்றிய நீங்களே ஏன் தஞ்சையை ஆளக்கூடாது?” என்று கேட்டதாகவும் செய்திகள் உள்ளன. இப்படியான ஒருசெய்தியை ஏகோஜியின் கனவில் தோன்றி அவருடைய குலதெய்வம் கூறியதாகவும்போன்ஸ்லே வம்ச சரித்திரம்என்ற நூலிலும் பதிவாகி உள்ளது.

சரி அப்படியே தஞ்சையைக் கைப்பற்றி கொண்டாலும், அதனை எப்படி ஆட்சி செய்வது ? எனக்கு இந்தப் பகுதிகளைப் பற்றியும், இந்த மக்களைப் பற்றியும், இங்கு பேசப்படும் மொழியாகிய தமிழைப் பற்றியும் எதுவும் தெரியாமல் எப்படி ஆட்சி செய்வது ..? என்று தயங்கிநின்றதாகவும் அதற்கு இராயசம் வெங்கண்ணா, ”என்னை முதலமைச்சராக்கி விடுங்கள் நான் பார்த்து கொள்கிறேன்என்று கூறியதாகவும் செய்திகள் உள்ளன. இதன்படி வெங்ண்ணாவை முதலமைச்சராக ஆக்கிவிட்டதாக போன்ஸ்லே வம்ச சரித்திரநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சை மராட்டியர் அரண்மனை

இவருடைய யோசனையை ஏற்றுக் கொண்ட ஏகோஜி படைகளுடன் நடுஇரவில் தஞ்சை வருகிறார்.கி.பி.1675 பிப்ரவரி 3 ஆம் நாளில் தஞ்சை இராஜகோபாலசாமி கோயிலருகே நடந்த கடும் போரில் தஞ்சை நாயக்க மன்னன் விஜயராகவ நாயக்கர் சிவாஜியின் அண்ணனான ஏகோஜியால் கொல்லப்பட்டதாகதஞ்சைநாயக்கர்வரலாறுஎன்ற நூலில் அதன் ஆசிரியர்குடவாயில்பாலசுப்ரமணியன்குறிப்பிடுகின்றார்.

 

அடுத்த நாள் காலையில் தஞ்சாவூரில் நாயக்கர்அரசு மறைந்து மராட்டிய அரசு நிலைபெற்றுவிட்டது. இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு சிலபல புனைவான செய்திகளும் கூறப்படுகின்றன. எப்படியோ ஒரே நாளில் சுமார் 135 ஆண்டு காலம் ஆட்சி செலுத்திய நாயக்கர் ஆட்சி துடைத்து எறியப்பட்டுவிட்டது. அதற்கு பிறகு வந்த மராத்தியர்கள் ஆட்சி தஞ்சையை 165 ஆண்டுகள் ஆண்டது!

அதாவது, இது போல நாயக்கர் அரசு நொறுக்கி தூக்கி எறியப்படும் நிகழ்ச்சி எந்தவகையான மோசமான வெளி எதிரிகளாலும் செயல் படுத்தப்படவில்லை. உடன் இருந்த திறமையான நிர்வாகியை உதாசீனப்படுத்தி குடும்பத்தினர் வேண்டுகோளை நிறைவேற்ற விழைந்ததால் ஏற்பட்ட விளைவே இது! இது போன்ற நிகழ்வுகள் இன்றைய அரசியலிலும் சாத்தியமாகக் கூடியவையே!

கட்டுரையாளர்பொ.வேல்சாமி

 

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰