உடுமலையில் தமிழுக்கும் தமிழிசைக்கும் உயிர் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்
உடுமலை தமிழிசைச்சங்கம்
தொடக்கவிழா கலந்தாய்வுக்கூட்டம்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்
என்றே சங்கே முழங்கு
எனும் பாவேந்தரின்
வரிகளுக்கேற்ப உடுமலையில் தமிழுணர்வுக்கும், தமிழிசைக்கும் உணர்வூட்டும்
வகையில் தமிழாசிரியப்பெருமக்கள், தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நமது பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றிருக்கிறார்.
திருமதி.ஜெ. கண்ணம்மாள் கணித ஆசிரியர், திரு.பாலகிருஷ்ணன் முதுகலை ஆசிரியர், கணபதி அறிவியல்ஆசிரியர்,
சேஷநாராயணன் தமிழாசிரியர்,
கார்த்திகேயன் வேளாண்மைத்துறை
உடுமலை அமிர்தநேயன்,
ஆசிரியர் கண்ணபிரான், ஆசிரியர் சதீஷ்குமார், ஆசிரியர் ஜவஹர், ரமேஷ்குமார் உதவிப்பேராசிரியர், கால்நடை ஆய்வாளர் அப்துல்கலாம். இவர்களுடன் செ. மூர்த்தி தாளாளர் விவேகானந்த வித்யலாயா , திருவாசக மாணவி உமா நந்தினி, மாணவர் பிரகதீஸ்வரன் என 30 க்கும் மேற்பட்ட ஆளுமைகள் கலந்து கொண்ட இந்த உடுமலை தமிழிசைச் சங்க தொடக்க விழா கலந்தாய்வுக் கூட்டத்திற்கு
பாராளுமன்ற உறுப்பினர் வரலாற்று நாயகர் திரு. கு. சண்முகசுந்தரம் தொடக்க உரையும் நிறைவுரையும் பேசினார்.
உடுமலை தமிழிசைச்சங்கத்திற்கு வாராவாரம் கூட்டம் நடத்தவும் அடுத்த கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு உடுமலை வணிகக்குழு கட்டிடத்தில் (உடுமலை சேம்பர்) நடைபெறும் எனவும் பேசப்பட்டது.
நிகழ்வின் ஒவ்வொரு ஆளுமைகளும் தத்தமது கருத்துக்களை
பதிவு செய்தனர். அனைவருடைய கருத்துக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் வரலாற்று நாயகர் திரு. கு. சண்முகசுந்தரம்
பதில் கூறும் வகையில் பேசினார்.
இதில் தற்காலிகமாக
பல்வேறு ஒருங்கிணைப்புக்குழுக்களும், அதற்கான பொறுப்பாளர்களும
நிகழ்வின் இறுதியில் பேசப்பட்டது.
ஆலோசனைக்குழுவிற்கு திரு. வஞ்சிமுத்து. திரு. ஆறுமுகம், திரு. செ.மூர்த்தி. திரு. ஜெய்சிங் லிங்க வாசகம், தன்னார்வ ஒருங்கிணைப்புக்குழு திரு. அமிர்தநேயன்,
தொடக்கப்பள்ளி ஒருங்கிணைப்புக்குழு விற்கு திரு. கண்ணபிரான் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி
ஒருங்கிணைப்பிற்கு திரு. வே.சின்னராசு திரு. ராஜேந்திரன், திரு. நராயணன், திரு. மருதமுத்து திரு. சரவணன் கல்லூரி தமிழ்த்துறை
மாணவர்கள் ஆராய்ச்சி மாணவர்கள், துறைத்தலைவர்கள் என பல்வேறு குழுக்கள் நியமித்து பணிகள் தொடங்கிட பேசப்பட்டது.
நிகழ்வில் தமிழார்வலர்களையும் தமிழுணர்வாளர்களையும் பெருமளவில் ஒருங்கிணைக்க அனைவரும் ஒத்துழைப்பு
நல்க வேண்டும் எனவும் இது முழுமையான தமிழ் உணர்வு மட்டுமே வளர்த்தெடுக்கும் பணியே உடுமலை தமிழிசைச்சங்கம், எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுப் பேசினார்.
நீண்ட நெடுநாட்களாக
உடுமலையில் உறங்கிக்கிடந்த
தமிழுணர்வாளர்களின் உணர்வுத்துடிப்பு
இன்று நமது பாராளுமன்ற உறுப்பினர் வழியாக மீண்டும் உயிர்த்தெழ வைத்தமைக்கு
நன்றி கூறுவோம்.
நிகழ்வில் வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவர்
திரு. வி.கே.செல்வராஜ் இணைச்செயலாளர்
வரலாற்று ஆசிரியர் திரு. ராபின் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அவரது அயராத சமூகப்பணியோடு தமிழ்ப்பணியும் சிறந்திட அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்போம்.
Comments
Post a Comment