கேள்வி :
திருமணத்திற்குப் பிறகு உங்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன?
என் பதில் :
1.
அழகான மாநிறம் என் மாதிரியே படித்த
பெண்
தான்
வேண்டும் என்று
நினைத்தேன். அப்படி
தான்
கிடைத்தது. ஆனால்
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக நாம்
வாழ
குணமும் புரிந்த நல்ல
மனமும்
போதுமானது என்ற
உண்மையை திருமணத்திற்கு பிறகே
புரிகிறது. அழகை
விட
அறிவை
விட
அன்பு
ஒன்றே
பிரதானம்.
2.
திருமணத்திற்கு பிறகே
சமையலை
கொஞ்சம் கற்றுக்கொண்டேன். சாமான்கள் தேய்க்கவும் கற்று
கொண்டேன். திருமணத்திற்கு பிறகு
அவ்வளவு முன்னேற்றம் மட்டுமே.
3.
சிக்கனமாகி விட்டேன். திருமணத்திற்கு முன்பு
சினிமாவிற்கு அதிகம்
செல்வேன். திருமணமான புதிதில் மனைவியுடன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
படத்திற்கு பிறகு
இன்று
வரை
சினிமா
பார்க்க தியேட்டர் செல்வதில்லை.
4.
தேவையில்லாமல் பேசுவதை குறைத்து கொண்டேன். நாம்
விளையாட்டாக பேசினாலும் அதை
தவறாக
புரிந்து கொள்ளும் மனிதர்கள் நிறைய
பேர்.
மனிதரில் எத்தனை
நிறங்கள்?
5.
திருமணம் ஆன
பிறகு
திட்டமிடல் மிக
அவசியமானது. நேரத்தையும் பணத்தையும் உழைப்பையும் மிச்ச
படுத்தலாம். திட்டமிடப்பட்ட வாழ்க்கை சிறந்த
கட்டமைப்பு!!
6.
திருமணமான சமயத்தில் தான்
வேலை
போனது.
உடனே
மேற்படிப்பு மேற்கொண்டதால் பொழுதுபோக்கிற்காக கோயிலுக்கு மட்டும் செல்வேன். அதனால்
கோயில்களின் வரலாறு,
தலசிறப்புகள், தலபெருமைகள், தேவாரப் பாடல்
பெற்ற
தலங்கள், ஜோதிர்
லிங்க
தலங்கள், திவ்ய
தேசங்கள் பற்றிய
தகவல்களை படித்து அறிந்து கொண்டேன்.
7.
வாழ்க்கையில் யாரையும் எளிதில் கண்மூடித்தனமாக நம்ப
கூடாது.
நன்றாக
பேசுபவர்கள் எல்லாரும் நல்லவர்கள் கிடையாது. கோபமாக
பேசுபவர்கள் எல்லாரும் கேட்டவர்கள் கிடையாது என்பதை
திருமணத்திற்கு பிறகு
அனுபவம் கற்று
கொடுத்த பாலபாடம்.
8.
துரோகிகளை ஒரு
போதும்
மன்னிக்க கூடாது.
அப்படி
மன்னிதாலும் துரோகிகளை சற்று
தள்ளியே வைக்க
வேண்டும். கசப்பு
சுவையின் இயல்பு
குணம்
என்றும் மாறாது.
9.
தாயிக்கு பின்
தாரம்.
ஆனால்
தந்தைக்கு பின்
தந்தை
மட்டுமே. அவர்
இடத்தை
வேறு
ஒருவர்
நிரப்ப
முடியாது. தந்தையின் அருமை
பெருமை
எல்லாம் நாம்
வளரும்
போது
தெரியாது. தந்தையார் உயிரோடு இருக்கும் போதும்
தெரியாது. தந்தையார் தான்
நமக்கான சிறந்த
பாதுகாப்பு. குடும்ப தலைவர்
எப்பவும் கெத்து
தான்
என்று
திருமணத்திற்கு பிறகே
புரியும்.
10.
வாழ்க்கையில் நிதானமாக இருப்பது மிக
பெரிய
சவுகரியம். ஆனால்
நிதானமாக இருப்பது தான்
பெரிய
சவாலாகவே இருக்கிறது!!
அழகு நிறைவான இல்லம் ..வாழ்த்துக்கள் ...
Comments
Post a Comment