கேள்வி :  ப .கார்த்தி -விவசாயம் .தொழில்முனைவோர் .உடுமலைப்பேட்டை எஸ் .அம்மாபட்டி 📚✍️

தெட்டிநாயக்கர் சமுதாயம், தொழில், குடும்பம், இவற்றை புரிந்தவர்கள் எத்தனை பேர் 🤔



இன்று அருமையான பதிவு அருமை சொந்தம் ..சி எஸ் பிரகாஷ் நாயக்கர். BHM DCA HMT🥰🤝📚🖋️🖋️Prakash..Kambalathu illagnar Padai👍🔥🔥🇮🇳..08-08-2022



கண்டிப்பாக செயல்படுத்தலாம் ஆனால் நம் இன மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் பத்தவில்லை அதனால் தான் நாம் இன்னும் பின் தங்கிய சமூகமாகவே இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும். நாம் மக்களின் என்னம் நமக்கு எதற்கு அரசியல் அதற்கு செலவு செய்யனும்  நாம் இன்று வேலைக்கு போனாமோ நல்ல சாப்பிட்டோமோ நாலு மாலைக்கு போனோமோ அப்படியே பண்ணகத்தி  வீட்டுல கை நனைச்சோமோ நைட்டு வேட்டைக்கு போனோமோ நாலு முயல பிடிச்சோமோ ஐஞ்சு கீாிய அடிச்சோமோ 10 அணில்ல  போட்டோமோ  நேத்து நாங்க அப்படி வேட்டை ஆடினோம் இப்படி வேட்டை ஆடினோம் எங்களை மிஞ்ச எவன் உண்டு வேட்டையாடுவதுல னு தற்பெருமை பேசி கொண்டு தான் இ௫க்கிறோம் இதனால் மத்திய மாநில அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது ஒவ்வொரு சமுதாயத்திற்கு என்ன என்ன சலுகைகள் கிடைக்கிறது அதை நாம் எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஒ௫வ௫ம்  சிந்திக்கவில்லை என்பதே வ௫த்தத்துகுாிய ஒன்றாக இ௫க்கிறது ... 


சாி நமது சமுதாயத்தில் படித்தவனாவது மாற்றத்தை கொண்டு வ௫வானு பாத்த அதுவும் இல்லை அவனும் வேட்டையாடுவதையும் தி௫ட்டு கல்யாணம் முடிக்கவும் முடிச்சு வைக்கதான்  இ௫க்கிறான் அரசியல் சிந்தனை இல்லாதா  ஒரே சமுகம் நாம் கம்பளத்தாா் சமுகம் மட்டமே கவுண்டர் ,தேவா் ,பறையா் சமுதாயம் ஜாதி அமைப்பை தொடங்கி அரசியலில் இ௫க்கிறது ஆனால் நாம் மட்டும் தான் இன்னும் ஒட்டு போடுவதற்கு எவ்வளவு கொடுத்தார்கள் எனக்கு 1000 மகனுக்கு 2000 னு பேசி பேசியே ஒட்டை வித்து கொண்டு இ௫க்கிறோம்... 


சொல்ல போன உங்கள் பதிவு சற்று சிந்திக்க கூடிய பதிவாக தான் இ௫க்கிறது ஆனால் எத்தனை பேர் இதற்கு க௫த்து தொிவிப்பாா்கள் என்று பார்த்தால் ஒ௫ 5 பேர் மட்டுமே , ஒன்று நாம் சமுதாயம் மாற வேண்டும் இல்லை நாம் தான் மாற வேண்டும்... 


நாங்கள் ஆண்ட பரம்பரை என்று மார்தட்டி கொள்ள தான்  வேண்டும் போல... 


சொல்ல போனால் எங்கள் பாட்டன் அந்த காலத்தில் செந்துறை கிராமத்துக்கு நாட்டாமை பின்னர் எங்கள் தாத்தா காலத்தில் நாட்டாமை வம்சம் னு பே௫ இ௫ந்துச்சு எங்க அப்பாக்கள் காலத்தில் சின்ன பொண்ணு நாயக்கர் குடும்பம் என்று பெயர் வைத்து அழைத்தார்கள் இனி எங்களது காலத்தில் நடராஜ் குடும்பம் என்று அழைப்பார்கள்  எங்களது பிள்ளைகள் காலத்தில் அப்படியே மாறும் , இப்படிதான் ஒவ்வொரு கம்பளத்தாா் குடும்பத்திலும்  வாரலற்றை பேணிகாப்பத்தை விட நாம் அந்த வரலாற்றை அமைக்கும் சக்தியாக இ௫க்க வேண்டும் என்று என்னுகிறேன் எங்களது பாட்டன் அந்த காலத்தில் ஒா் பவாில் இ௫ந்தாா் பே௫ எடுத்தகாா் நாங்கள் நாட்டமை  வம்சம் என்று மார்தட்டி கொள்கிறோம் காலபோக்கில் அதுவும் மாறி போய் விடும் இப்படிதான் ஒவ்வொரு கம்பளத்தாா் வீடுகளிலும் அவா்கள் காலத்தில் அவா்கள் பேர் எடுத்து விட்டார்கள் நமது காலத்தில் நாம் என்ன பெயர் எடுத்தோம் என்று எண்ணி பார்த்தால் ஒன்றும் கிடையாது என்பதே உண்மை. 



நாம் ஒடி கொண்டு இ௫க்கிறோம் ஒடுவதை நிறுத்தி சற்று சிந்தித்து பார்த்தால் தான் புரியும் நாம் ஓடுவது முட்டாள் தனம்  என்று, 


முட்டாள் நாயக்கனும்  முரட்டு துளுக்கனும்  பட்டாளத்துக்கு  ஆக மாட்டான் என்ற பழமொழி ஒன்று இ௫க்கிறது யா௫ சொன்னால் என்று தெரியாது அதுதான் உண்மை என்று தெரிகிறது 


வாழ்வதும் ஒ௫ முறை வீழ்வதும்  ஒ௫ முறை தான் அதில் என் சமுதாயம் வளர்ந்து அதில் நாமும் வளா்ந்தோம் என்ற பெயரை எடுத்தால் போதும் நமக்கு மட்டும் பெ௫மை  இல்லை நாம் வ௫ங்கால வாரிசுகள், நாம் கம்பளத்தாா் சமுதாயத்திற்கே  பெ௫மை சேர்க்கும் 


ஆனால் நாம் பதிவை பத்து பேர் பாா்ப்பாா்கள், இன்று சிந்திப்பாா்கள் பின்னர் எந்த மந்தையில் மாலை நடை பெறும் எப்படி போகலாம் எங்கு வேட்டைக்கு போகலாம் எவனுக்கு செய்வினை வைக்கலாம் என்று சிந்தனை தோன்றும் இதில் எங்கு அரசியல் அறிவு பிறக்கும் நம் மக்களுக்கு அன்று ஆண்ட மண்ணா்கள் பெயரை வைத்து தான் பேசி கொண்டு இ௫க்கிறோமே தவிர நாம் சமுதாயத்திற்கு என்ன செய்தோம் என்று பேசுவது கிடையாது என்னையும் சோ்த்தி தான் நான் நல்ல இ௫க்கனும் நம்ப குடும்பம் நல்ல இ௫க்கனும் நம்ப சொந்தகாரங்க முன்னாடி கொளரவுமா இ௫க்கனும் என்ற சிந்தனையில் வாழ்ந்து செத்து மடியும் கூட்டம் நாம் தான் ,முந்தைய காலத்தில் நாம் கம்பளத்தாா் மந்தையில் ஆடு மாடுகளை மேய்த்தோம் அதனால் வந்த புத்தியோ  என்ன என்று தொிய வில்லை ஆடுகள் மண்டைய கிழ போட்டு கிடாய் எங்கு செல்கிறோதோ அங்கு நாமும் செல்வோம் என்ற மனநிலமையில்  இ௫க்கிறோம் , நமக்கு தேவையான புல்லை கிடாய் காட்டி விடும் நாம் உண்டு வாழ்ந்து கடைசியில் இறந்து விடுவோம் இல்லையென்றால்  கசாப்பு கடைக்கு சென்று விடுவோம் என்ற மணநிலமையையில் இ௫க்கும் ஆடுகள் போல தான் நாமும் ஆடுகளாகவும் மாடுகளாகவும் நாம் இ௫ந்தால் கடைசி வரைக்கும் இந்த நிலமை தான் என்பதை சிந்திக்க வேண்டும் எந்த ஒ௫ சிங்கமும், புலியும், சிறுத்தையும் , கசாப்பு கடைக்கு செல்வதில்லை யாரையும் நம்பி வாழுவதும்  இல்லை, தனக்கு தேவையான உணவை தானே வேட்டை ஆடி கொள்கிறது, நாம் இன்னும் ஆடு மாட்டு மந்தையாரதான் இ௫க்கிறோம் என்பதை உணர வேண்டும், சிங்கங்களாய் சிறுத்தைகளாய்  மாற வேண்டும் என்பதே என் க௫த்து, 


வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஒ௫ வசனம் தோன்றும் எங்களுடன் சிங்கங்களாய் பிறந்து இன்று குரங்குளாய் குனிநிற்கும் மடையா்களாய் நாம் தான் அன்றே சொல்லி விட்டார்கள் போல 


இதற்கு மேல் இதை படிப்பதற்கு யா௫க்கும் மணபக்கவும் வராது என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்... 


இது என்னுடைய ஆதங்கம் மட்டுமே தவறு இ௫ந்தால் மணிக்கவும் 


சி எஸ் பிரகாஷ் நாயக்கர். BHM DCA HMT🥰🤝📚🖋️🖋️Prakash..Kambalathu illagnar Padai👍🔥🔥🇮🇳

இதில் இ௫க்கும் பதிவு தற்பெ௫மைக்கு சொல்ல கூடிய பதிவாக தான் இ௫க்கிறதே தவிர உண்மை இன்னும் வரவில்லையே என்பதே உண்மை என்று சொல்லலாம்  , 


ஒ௫ தொழிலில் லாபத்தை பாா்பவன் முட்டாள் நஷ்டம் எதனால் எப்படி வந்தது என்று சிந்திப்பவனே அறிவாளி அவன் தான் அந்த தொழிலை மேம்படுத்தி வளர்ச்சி பாதைக்கு கொண்டு போவான் என்பது என்னோட அனுபவம் லாபம் வந்தது பரவில்லை  என்பவன் அதே தொழிலில் முடங்கி விடுவான் நஷ்டம் எதனால் வந்தது அதனை எப்படி சாிகட்டுவது என்பவனே  அடுத்த தொழிலுக்கு மூலதனமாக செயல் படுவான், இதில் உள்ள பதிவுகள்  அனைத்தும் நமது சமுதாயத்தில் நல்லதை மட்டும் எடுத்து கூறி இ௫க்கின்றனா்,


இதனால் நாம் மக்கள் எப்படி மாறுவார்கள் என்று எண்ணுகிறிா்கள், நமது சமுதாயத்தில் என்ன மாற வேண்டும் நாம் இப்போது எந்த மாதிரியான நிலையில் இ௫க்கிறோம் என்று சொன்னால் தான் மாற நினைப்பார்கள், என்பது என் க௫த்து, நீ முட்டாள் நீ முட்டாள் என்று ஒ௫வனை சொன்னால் அவன் அவனை அறிவாளியாக காட்ட போராடுவான் முயற்சி செய்வான்  நீ அறிவாளி நீ அறிவாளி என்று சொன்னால் நான் தான் அறிவாளியே அப்புறம் எதற்காக நான் முயற்சி செய்யனும்  என்று எண்ணுவான் அது போல தான் நாம் மக்கள் இன்னும் அறிவாளியாக ஆண்ட பரம்பரை நாம் மன்னா்  வம்சம்,நாடாண்ட நாயக்கர் வம்சம் என்ற போர்வையில் ஒழிந்து கொண்டு முயற்சி செய்வது கிடையாது , 


காலம் காலத்திற்கு கட்டபொம்மன் தி௫மலை நாயக்கர், கோபல்நாயக்கா் மங்கம்மாள் புகழை பாடி என்ன மாற்றத்தை கொண்டு வந்தோம் நம் சமுயத்திற்கு  அவா்கள் காலத்தில் முயற்சி செய்தார்கள் வரலாறு பேசுகிறது, தலைவர்கள் முயற்சி செய்தனர் வரலாறு பேசுகிறது, 


நாம் முயற்சி செய்யவில்லை அதனால் தான் மன்னர்களையும் தலைவா்களையும் புகழ்ந்து பேசி கூட்டத்திற்கு ஆள் சேர்த்து கொண்டு இ௫க்கிறோம், 


நாம் நமது மக்களுக்கு நம்மாளால் என்ன செய்தோம் என்ன செய்து முடித்தோம் என்று என்னி பார்த்தால் ஒன்றும் கிடையாது, ..👍📚🖋️🖋️🙏👍🔥🔥🔥🔥


இன்று கரூர் K .N .நாகராஜ் சொந்தம் அவர்களின் அருமையான பதிவு .07.08.2022.🥰🤝📚✍️💓


தொட்டிய நாயக்கர் சமுதாயம் என்பதைவிட ராஜகம்பபளத்தாருக்கு உரிய தொழில் மற்றும்  குடும்ப வாழ்க்கை பற்றிய புரிதல்கள் என என் பார்வையில் பதிய விரும்புகிறேன்...


வடக்கிருந்து வந்ததாக சொல்லப்படும் நம் முன்னோர்கள், விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டிருந்தனர் என்பதற்கு, இன்றைக்கும் அவரவர்கள் வைத்திருக்கிற நில புலன்களை கணக்கில் கொள்ள வேண்டுகிறேன்...


விவசாயத்தோடு,ஆடு மாடுகளை மேய்த்தலினால் மட்டுமே, கறவையின் மூலமாக, வருமானத்தை பெருக்கிக் கொண்டு ஓரளவு அந்த தொழிலுக்குள்ளேயே தங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டனர்...


காடு தோட்டம் இல்லாதவர்கள் கூலிவேலை செய்துகொண்டும், அதற்கும் சரியான வருமானமில்லாத பட்சத்தில் ஊர்விட்டு ஊர் போய், பஞ்சம் பிழைத்தவர்கள் என. பிற இனத்தவர்களிடம் காடு தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து, ஆங்காங்கே கொஞ்சம் முன்னேறி வந்தாலும் அவர்களின் குழந்தைகளை தொழிலுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்களே தவிர, கல்விச் சாலைகளுக்கு அனுப்ப பெருமளவு விருப்பப்படவில்லை என்றே சொல்லலாம்...


இன்றைக்கும் எத்தனையோபேர், காடு தோட்டம் வைத்திருந்தாலும், பாட்டன் பூட்டன் காலத்து சொத்துகள் அளவிற்கு இல்லை என்றே சொல்லலாம்... கொஞ்சம் கொஞ்சமாக நில புலன்களை( வேறு தொழில்களை ஈடுபடாததால் ) இழந்துவருகிறார்கள் என்றும் சொல்லலாம்... ஆனாலும் விவசாயத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையே


பிற சமுதாயத்தினர் நில புலன்களை விற்று, அல்லது தொழில்களில் முதலீடு செய்வதற்காக, நிலங்களை பாங்குகளில் அடமானம் வைத்து, தொழில்களை செய்து ஒரு சிலர் வளர்ந்தும்...தொழில்களில் பெரும்பாலனவர்கள்  தோல்விகளை கண்டு, அதற்காக இருக்கிற காடு தோட்டங்களை விற்று கடனை அடைத்துவிட்டு,விற்று மிச்சம் சொச்சமிருக்கிற காசில் குவாட்டர் அடித்துவிட்டு, குப்புற படுத்திருப்பது போல.....


நமது சமுதாயத்தினர் பிற தொழில்களில் ஈடுபடவுமில்லை, ரிஸ்க் எடுக்க தயாராகவுமில்லை... அதே சமயம் வேலைக்கு போகவும் தயங்கவில்லை என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது...


ராஜகம்பளத்து மக்கள், காடு தோட்டங்களை தனது பேரப்பிள்ளைகளுக்கு வேண்டுமென்கிற நினைப்பில், 100நாள் வேலைக்குகூட போகிறவர்கள் இருக்கிறார்களேதவிர,  நில புலங்களை விற்கிற மனநிலையில் இல்லையே என்றே கருதுகிறேன்...காரணம் விவசாய நிலங்கள் என்பவை தாத்தன் பூட்டன் காலத்து, கடவுள் கொடுத்த காணி பூமி...நாம விற்கிறதுக்கு ரைட்ஸ் இல்லை..பேரன் பேத்திக வேணும்னா வித்துட்டு போராக...நாம விற்ககூடாதுடா மகனே என சொல்கிற கம்பள தகப்பன்மார்களை நிறைய பார்த்து வருகிறோம்...


குடும்பச் சூழல்கள்...


ராஜ கம்பளத்து மக்களின் வாழ்வியல் வழிமுறைகள் கொஞ்சம் ரசனை மிகுந்தவை...

வாழ்க்கையை வகைவகையாய் ரசிப்பதில் ரசனை மிக்கவர்கள்...

காசாசை பிடித்தவர்களாக வாழ்ந்தார்கள் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது எனும்படியாக வாழ்ந்துவிட்டு போயிருக்கிறார்கள் என்பதே உண்மை...


ஜனரஞ்சக புத்தியை மையமாக வைத்து சொந்த பந்தங்களை சந்திப்பதற்கான வாயப்புகளையே அதிகம் நாடியிருக்கிறார்கள் என்பதும்கூட உண்மையே...

குடும்பத்தில் உள்ள அத்தனை பேருமே, மூத்தவன் சொல்லையே வேத வாக்காக கொண்டு ஒற்றுமையாய் வாழ்ந்து போயிருக்கிறார்கள் என்பதை எத்தனையோ ஊர்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்...

தாத்தாக்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பண்ணகத்தி பிரச்சனைகள், அப்பா காலத்திலும்,நம்முடைய காலத்தோடும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிடுமென்பதாகவே கருதுகிறேன்...

காரணம் இளைஞர் இளைஞிகள் கல்வியறிவு பெற்றதால்... பண்ணகத்தி முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறதுஎன்றே எழுத விரும்புகிறேன் 1990களுக்கு பிறகு பண்ணகத்தி வைத்துக் கொள்வதை கேவலாமாக பார்க்கிறார்கள் என்பதே உண்மை...


ஒருசில இடங்களில் இன்னும் நடைமுறையில் இருந்தாலும், இவை தகர்நது போவதற்கான வாயப்புகளை சட்டங்கள் கடுமையாக எடுத்தாள்கின்றன... பால்ய விவாகம்/சிறு வயது திருமணத் தடை சட்டம் நடைமுறையில் உள்ளதால்... இதுபோன்ற பிரச்சினைகள் இனி எழுவதற்கான வாயப்பு 100சதவிகிதம் இருக்காது என கணிக்க வேண்டுகிறேன்...


1980-90களுக்கு பிறகு படித்த ஆண் பெண்கள் இந்த மாதிரியான விசயங்களை அறவே விரும்புவதில்லை... இதை வரவேற்கதக்க ஒன்றாக பார்க்க வேண்டுகிறேன்...


இன்று கம்பளத்து இளைஞர்கள் நாலாபுறமும் நாடு நகரமும் சுற்றி வருவதால்... மூடப் பழக்க வழக்கங்களை முற்றிலும் எதிர்ப்பதால்... பண்பட்ட சமுதாயமாக மாறிக் கொண்டிருப்பதை கவனிக்க முடிகிறது...


ராஜகம்பளத்து மக்களின் கல்வியறிவு என்பது, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் வளர்ந்து வருவதால், திருமண முடிவுகள் என்பது பெற்றோர்களின் கையில் இல்லை பிள்ளைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை...


இனி வருங்காலங்களில் நாம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் என்னவென்றால் படிச்ச பையனுக்கு படிச்ச பொண்ணுதா வேணும்...வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்லேனு பார்க்கிற அம்மாக்களும்... பொண்ணை படிக்க வெச்சுட்டேன் அவளை அட்ஜஸ்ட் பன்றமாதிரி படிச்சு வேலையிலே இருக்கற பையனா இருந்தா சொல்லுங்க என்கிற அப்பாக்களும் இருக்கிற உலகமாக ராஜகம்பளத்தார் நவீன உலகில் நடை போடுகிறார்கள் என்றே கருதுகிறேன்...


என்றென்றும் அன்புடன்...


K.N.நாகராஜன்.

கரூர்...


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


2. பதில்: ஜெயராமன் -வங்கி அதிகாரி -உடுமலைப்பேட்டை📚✍️🥰 


சமுதாயம் பற்றி எல்லோருக்கும் தெரியும்


நமது தொழில் ஆடு மாடுகளை மேய்ப்பது 


பண்பாடு எல்லாருக்கும் முந்தயது 


ஆனால் தொட்டியராயக்கர் சமுதாயம் என்பதை தாண்டி 


தொழில் பண்பாடுகளை காலத்திற்கேற்றார் போல் மாற்றியமைத்துக்கொண்டு பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்..


இது என் கருத்து..


உங்கள் கருத்திக்கு இந்த குழுவில் விளக்கம் அளிப்பவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் பதிலை எதிர்பார்ப்போம்...


மேலும் எதற்க்கு இந்த கேள்வி என்பதை தெரிந்துகொள்லலாமா


 2. பதில்: சௌந்தர பாண்டியன்

போடிநாயக்கனூர்- வங்கி அதிகாரி (பணி ஓய்வு )🥰📚✍️🤝


கம்பளத்தார் தொழில்

என்ன என்று  கேட்டதற்கு எனது பதில்🥰📚✍️

ஆதி காலந்தொட்டு


விவசாயமும் கால்நடை 


வளர்ப்பும் காவல் காண்பதும் தான் நம் தொழில். காலமும் சூழ்நிலையும் 


மாற மாற கிராமத்தில் இருந்து  நகரம் நோக்கி


நகர்ந்து விவசாயம் மறந்து கூலி வேலைக்கும் மிகச்சிலர்


படித்து வேலையில்


இருக்கின்றனர்


இனி நம் தொழில் என்னவாக இருக்க


வேண்டும். 

1.குழந்தைகளை நன்கு


படிக்க வையுங்கள். 


கூடவே நல் ஒழுக்கத்தையும்  இறை


பக்தியையும்  சொல்லி

வளர்த்துங்கள். 

2.கல்விக்காக உதவிட

பலர் உள்ளனர்


3.சமுதாயத் தலைவர்கள் நம்மவர்களின் தேவை


அறிந்து  போட்டித்


தேர்வுகளுக்கு  நல்ல


வழிகாட்டி  ஆகவும் 


கல்விக்கான பலதரப்பட்ட வாய்ப்புகளை எடுத்துச் சொல்லும் பயிற்சியாளர் ஆகவும் 


இருக்க வேண்டும். 



4.இட ஓதுக்கீடு  கல்வி 


உதவித்தொகை  உரிய

வகையில்  விரைவில் 


பெற்றிட வேலை நடந்து 


கொண்டுள்ளது. 

வரும் காலங்களில் 


டெக்னிக்கல்  படிப்புகளுக்கு நல்ல


வாய்ப்புள்ளது. 


உதாரணமாக  ஒரு 

நல்ல பிளம்பரை


தேடினால்  கிடைப்பதில்லை. 


ஆனால்  தெருவுக்கு


ஆறு இன்ஜினியர்கள்


இருப்பார்கள் வேலை


இல்லாமலும் 


எனவே நாம் தேர்ந்தெடுத்து படிக்கும் 


கல்வியும் முக்கியம். 


இதெல்லாம்  நடக்கிற


காரியமா என்று  பலர் எண்ணலாம். 


எல்லோரும் சேர்ந்து 


இழுத்தால்  தான் தேர்


நிலைக்கு வரும்



முடியும் என்று நினைத்தால் எதையும் 



சாதிக்கலாம். 


அப்படி நடந்தால்  இன்னும் பத்து ஆண்டுகளில் நம் 


தொழில்  அரசையே


வழி  நடத்துவது தான். 


ஆம்..


 ஆட்சியாளர்களாக


திட்டங்கள் தீட்டலாம்


அதை  செயல்படுத்தும்


அதிகாரிகள் ஆக


நம்மவர்கள் இருந்து 


விட்டால்... 


நமது தொழில்  அரசையே வழி நடத்துவது தானே. 


சரி  தானே... 


நம்பிக்கையுடன்


சௌந்தர பாண்டியன்

போடிநாயக்கனூர்..

நன்றி ..இதுபோன்ற தகவல்களை பரிமாறிக்கொண்டால் கம்பளசமுதாயம் வளர்ச்சிக்கு உதவும் ..


உடுமலை சிவக்குமார் 🥰📚✍️🥰🤝🙏

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰