கேள்வி : இரவில் ஏன் சாதம் சாப்பிடக்கூடாது?
என் பதில் : 🥰📚✍️
சமீப காலமாக இதை சாப்பிடக்கூடாது அதை சாப்பிட கூடாது இதைதான் சாப்பிட வேண்டும் என பலர் மருத்துவ குறிப்பு எழுதுவதை காண்கிறேன். பல மருத்துவ ஆய்வுகள் மேலைநாடுகளில் நடைபெறுகின்றன, அவை நம்நாட்டின் சூழலுக்கு எவ்வளவு பொருந்தும் என்பது சந்தேகம்.
தமிழ்நாட்டில் நான் பார்த்த கிராமங்களில் மற்றும் சிறு நகரங்களில் இன்னும் மக்கள் இரவு நேரத்தில் சாதம் சாப்பிடுவதை பரவலாக பார்கிறேன். மேலும் அவர்கள் பகல் நேரத்தில் வேலைக்கு செல்வதால் இரவிலேயே அதிக உணவு எடுத்து கொள்கின்றனர்.
அதே போல் கர்நாடகாவில் வாழும் மக்களின் பிரதான உணவு சாதம் தான், அவர்கள் மூன்று வேளையும் சாதம் சாப்பிடுவதை பார்த்து இருக்கிறேன். இரவு 8 மணிக்குள் இரவு உணவை உண்பது நல்லது.🥰📚✍️
Comments
Post a Comment