சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று நமது பொள்ளாச்சி நிலப்பகுதியில் 2300 ஆண்டுகளுக்கும் முன்பாக வசித்த, வாழ்ந்த மக்கள் கோவை மாவட்டம், பொள் ளாச்சி வட்டத்தில் கோவை செல்லும் பிரதான சாலையில் பொள்ளாச்சியில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஆச்சிப்பட்டி பிரிவி லிருந்து கிழக்கே 1 கி.மீ தொலைவில் குரும்பபாளையம் கிராமம் உள்ளது. இங்கு சங்க காலத்தைச் சேர்ந்த நெடுங்கல் ஒன்று கல் வட்டத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குரும்பபாளையத்தில் கிடைத் துள்ள நெடுங்கல் 14 அடி உயரமும், அதன் கீழ்ப்பகுதி 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த நெடுங் கல்லுக்கு முன்பாக 20 அடிச் சுற்ற ளவும் 55 செ.மீ உயரமும் கொண்ட ஒரு கல் வட்டமும் காணப்படுகிறது.. பெருங்கற்காலத்தில் தான் (கி.மு.1000 முதல் கி.பி. 100 வரை) மக்கள் தம் குடியிருப்புகளுக்கு வெளியே சற்றுத் தொலைவில் தனி யாக வேளாண்மை மற்றும் குடியி ருப்புக்கு பயன்படாத ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு இறந்த வர்களை அடக்கம் செய்யும் முறையை மேற்கொண்டனர். இவர்கள் இறந்தவர்களைப் புதைப் பதற்குப் பெருங்கற்களைப் பயன் படுத்திக் கல்லறைகளை ஏற்படுத்தி யதால் இக்காலம் பெருங்கற்காலம...
கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார் ? அவர்களின் வரலாறு என்ன ? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர் / தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம் . இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம் , ( கர்நாடகா இல்லை ) ( மெட்ராஸ் , ஆற்காடு , கடலோர ஆந்திரா , கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர் , கோலார் , தென் ஒரிஸ்ஸா , பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும் , மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது . மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது . ஏலம் எடுத்த கான் சாஹிப் , தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம் " கிஸ்தி " வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர் . மீதத்தை தாம் எடுத்து கொண்டனர் . அவர்கள் வரியை வச...
மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰 கடவுளின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் உள்ளது மலப்புழா. கேரளாவின் அழகான பெண்களைப்போல பச்சை பசேல் என்ற தென்னமரங்கள், பாக்குமரங்கள், தோப்புகள் சூழந்த பகுதி மலப்புழா என்ற சின்னஞ்சிறய நகரம். அந்நகரத்தில் உள்ளது கம்பீரமான மழப்புழா டேம். கேளராவின் இரண்டாவது பெரிய ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது இந்த மலப்புழா அணை. கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இந்த அணை கட்டுமானப்பணி 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆறே ஆண்டுகளில் அதாவது 1955ல் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா காணப்பட்டது. இந்த அணையின் நீளம் 2,069 மீட்டர், உயரம் 115 மீட்டர். 2 கால்வாய்களை கொண்டது. இதன் மூலம் 42 ஆயிரம் ஹெக்டர் நீர் தேக்க பரப்பளவு கொண்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதி 145 சதுர கிலோ மீட்டர், கொள்ளளவு 236 கன மீட்டர். 1955ல் மெட்ராஸ் ஸ்டேட் முதல்வராக இருந்த பேரறிஞர் காமராஜர் இந்த அணையை திறந்துவைத்துள்ளார். அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பக்தவச்சலம் காலத்தில் அவரின் மேற்பார்வையில் இந்த ...
Comments
Post a Comment