கேள்வி :
பரஸ்பர நிதி (Mutual fund) என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை? கொஞ்சம் விளக்கமாக பதிலளிக்கவும்.
என் பதில் :
ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற தத்துவத்தின் கட்டமைப்பில்
உருவானதுதான் பரஸ்பர நிதி. பரஸ்பர நிதியை பற்றி பார்க்கும் முன் இதனின் ஆதியை பார்ப்போம்.
Massachusetts investors. trust என்பது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் தொடங்கப்பட்ட உலகின் முதல் பரஸ்பர நிதி நிறுவனம்.
50,000 டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் முதல் ஆண்டின் முடிவில் 3 லட்சத்து 90 ஆயிரம் டாலரை வைத்திருந்தது.
இந்தியாவின் முதல் பரஸ்பர நிதி நிறுவனம் ரிசர்வ் வங்கி மற்றும் அரசாங்கத்தால்
1963இல் தொடங்கப்பட்டது. இது யூடிஐ என்ற நிறுவனம்.
நீண்ட இடைவேளைக்கு பின்பு
1987இல் எஸ்பிஐ பரஸ்பர நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.
பரஸ்பர நிதி கூட்டமைப்பின் மூலம் இன்று இந்தியாவில் 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமாக சேர்ந்து கொடுப்பது
2500 விதமான முதலீடுகள் (Schemes).
இன்றைய பங்கு சந்தை முடிவடையும் பொழுது ஒரு எம் ஆர் எஃப் பங்கின் விலை
71406 ரூபாய். Eicher மோட்டார்ஸின் பங்கு விலை இன்றைய பங்கு சந்தை முடிவடையும் பொழுது 18 ஆயிரத்து 975
ரூபாய்.
மேலே குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுமே மிகச்சிறந்த நிறுவனங்கள். ஆனால் ஒரு சாமானியன் ஆல் இந்த இரண்டு நிறுவனத்தின் ஒரு பங்கை வாங்க முடியுமா? வாங்க முடியாது!. இந்த இடத்தில்தான் ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற அனைவரும் சிறு சிறு தொகையாக பங்களித்து அதை மிகப் பெரிய தொகையை ஆக்கி லாபம் சம்பாதிக்க முடியும்.
ஒரு தனி மனிதனுக்கு பங்குசந்தையின் சூட்சமங்கள் தெரியாது. தெரிந்து இருந்தாலும் அவன் நூறு பேரிடம் சென்று நீங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுங்கள். நான் பங்கு சந்தையில் முதலீடு செய்து உங்களுக்கு சிறிய லாபத்தை கொடுக்கிறேன் என்றால் எவரும் ஒத்துக்கொள்ள மாட்டார். ஏனெனில் யாரும் தனிமனிதனை நம்ப மாட்டார் . ஆனால் ஒரு நிறுவனத்தின் மேல் நம்பிக்கை இருக்கும். அதில் சிறிதளவு தொகை போட தயங்க மாட்டார்கள். அந்த நிறுவனம்தான் மியூச்சுவல் ஃபண்ட். வாகன துறையில் முதலீடு செய்யும் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் 90 பேர் மாதம்
1000 ரூபாய் கொடுத்தால் அவர்களால் ஒரு எம் ஆர் எஃப் மற்றுமொரு ஈச்சர் மோட்டார்ஸ் பங்குகளை வாங்க முடியும். எம்ஆர்எப் பங்குகள் 75 ஆயிரம் ரூபாய்க்கு செல்லும்பொழுது அதை விற்றால் அவர்களுக்கு கிடைக்கும் தோராய லாபம் 4 ஆயிரம் ரூபாய். அவ்வாறு ஈசர் மோட்டார்ஸ் பங்குகள் 25 ஆயிரம் ரூபாய் சொல்லும்போது அவர்கள் விற்றால் அவர்களுக்கு ஏறக்குறைய
6000 ரூபாய் லாபம் கிடைக்கும். 90 ஆயிரம் முதலீட்டில் பத்தாயிரம் ரூபாய் லாபம். இந்த பரஸ்பர நிதியை நடத்தும் நிறுவனம் இந்த லாபத்தில் இரண்டு சதவீதத்தை எடுத்துக் கொள்ளும் அதாவது 200
ரூபாய் எடுத்துக் கொள்ளும். பாக்கி இருப்பது 9800 ரூபாய். இதை 90 ஆல் வகுத்தால் வருவது100.88 உங்கள் ஆயிரம் ரூபாய் முதலீட்டிற்கு உங்களுக்கு கிடைத்த லாபம்100.88.
10 சதவீதத்திற்கும் அதிகமாக உங்களுக்கு லாபம் கிடைத்துள்ளது. நீங்கள் முதலில் போட்ட ஆயிரம் ரூபாய் மற்றும் இந்த 10 சதவீத லாபத்தை கூட்டி உங்களுக்கு யூனிட் என்று கொடுப்பார்கள். ஒரு யூனிட்டுக்கு இத்தனை நெட் ஆசெட் வேல்யூ என்று கூறுவார்கள் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகளில் பத்து ரூபாய் என்பது ஒரு யூனிட். நீங்கள் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் உங்களுக்கு 100
யூனிட் ஒதுக்கப்படும். அடுத்த மாதம் இதுவே இந்த 10%
லாபத்துடன் சேர்ந்து 110 யூனிட் ஆகும்.
இவ்வாறு தான் பரஸ்பர நிதி நிறுவனங்கள் செயல்படுகிறது. குறைந்தபட்ச தொகையாக நீங்கள் 500
ரூபாய் கூட முதலீடு செய்யலாம் ஒவ்வொரு மாதமும்,இதற்கு எஸ்ஐபி என்று கூறுவார்கள் Simple investment plan. மொத்தமாகவும் ஒரே தவணையில் முதலீடு செய்யலாம் ஆனால் அது அந்தளவுக்கு லாபத்தைக் கொடுக்காது.
இன்றைய தினம் நீங்கள் மாத தவணையில் (RD) வங்கியில் பணம் போட்டால் அவர்கள் உங்களுக்கு 6.25 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள். பரஸ்பர நிதியில் இதைவிட நிச்சயமாக லாபம் ஈட்ட முடியும். நமக்கு வருடத்திற்கு
7.25 சதவிகிதம் வந்தாலும் ஒரு சதவீதம் கூடுதலாக கிடைக்கிறது. ஒவ்வொரு பரஸ்பர நிதி நிறுவனத்தையும் நிர்வாகம் செய்ய பங்கு மேலாளர் இருப்பார். அவரை ஃபண்ட் மேனேஜர் என்று சொல்லுவார். இன்றைய தினம் அனைத்து பரஸ்பர நிதிகளின் அசையா சொத்து எவ்வளவு தெரியுமா!?28.18
லட்சம் கோடிகள்.
பரஸ்பர நிதிகளில் பலதரப்பட்ட பரஸ்பர நிதி திட்டங்கள் உள்ளது. லார்ஜ் கேப் ஃபண்ட், மிட் கேப் ஃபண்ட், ஸ்மால் கேப் ஃபண்ட், நிப்டி சார்ந்த ஃபண்டு வங்கிகள், கட்டுமானத்துறை, நுகர்வோர் துறை, வாகனம், வாகனம் உதிரி, இன்னும் எத்தனையோ ஃபண்ட உள்ளது. இதில் அதிகமான லாபம், மற்றும் ஆபத்தும் உள்ள ஃபண்ட் மீடியம், ஸ்மால், மற்றும் மைக்ரோ, துறைகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள் ஆகும் லாபம் வந்தால் ஓஹோவென்று இருக்கும். நஷ்டமும் அவ்வாறு அதிகமாக இருக்கும். நிஃப்டி சார்ந்த ஃபண்டுகள் மற்றும் லார்ஜ் கேப் ஃபண்டுகள் ஓரளவுக்கு லாபத்தை கொடுக்கும். கட்டுமானத் துறையை சார்ந்த நிதிகள் அந்தளவுக்கு லாபத்தை கொடுக்காது.
Debt fund என்று ஒன்று இருக்கிறது. இதில் லாபம் குறைவு, நஷ்டமும் குறைவு,. இவர்கள் 70 சதவிகித பணத்தை அரசாங்கம் கொடுக்கும் பாண்டுகளில் Debenture களில் மற்றும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்கிறார்கள். 30
சதவிகித பணத்தை மட்டுமே பங்குசந்தையில் முதலீடு செய்கிறார்கள். இப் பரஸ்பர நிதிகளில் ரிஸ்க் சற்று குறைவுதான்.
பரிந்துரைக்கும் பரஸ்பர நிதி ஸ்கிம்ஸ் பின்வருமாறு. இப் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய முன் உங்கள் பரஸ்பர நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்டபின் செய்வது உத்தமம்.
1)HDFC small cap fund
2)L&t mid cap fund.
3)L&t India value fund.
4)Kotak emerging equity scheme
5)L&t hybrid equity fund.
6)Icici equity and debt fund
7).Dspbr equity and bond scheme.
8)Icici Pru blue chip fund.
9)Dspbr equity opportunities fund.
மறுபடியும் கூறுகிறேன் உங்கள் நிதி ஆலோசகரின் பரிந்துரையை ஏற்று அந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
நன்றி ..
சிவக்குமார் VK
நிதி ஆலோசகர்
வீட்டுக்கடன் நிதி ஆலோசகர்
Comments
Post a Comment