என் கேள்வி : எந்த ஒரு கோவிலின் எந்த ஒரு விஷயம் உங்களை வியப்பில் ஆழ்த்தியது?
பதில் : பரத்குமார் தம்பியின் ஆன்மீக பயணம் ...
கடந்த
ஒரு
மாதமாகவே இந்த
பதிவை
எழுத
நினைத்தேன்.அதற்கான நேரமும் சந்தர்ப்பமும் அமையவில்லை என்றே
கூறவேண்டும்.
நேரடியாக அந்த
அதிசயத்தை கூறுவதை விட
சற்று
விளக்கமாக கூறினால் பலருக்கும் உபயோகமாக இருக்கும், செல்லவேண்டும் என்ற
எண்ணம்
வரும்
என்ற
நம்பிக்கையில்,
பர்வதமலைக்கு பயணிக்கலாம் வாருங்கள் !!
பர்வதம் என்றால் மலை,பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம்
மலை.கிட்டத்தட்ட 4560 அடி உயரம் !!
நான்கு
மாதங்களுக்கு முன்பு
என்
தம்பி,பர்வதமலை பற்றிய ஒரு காணொளியை அனுப்பினான்.தீவிர
சிவ
பக்தர்களாகிய எங்களுக்கு,காணொளியை பார்த்ததுமே ஏதோ
ஒரு
ஈர்ப்பு,கண்டிப்பாக மல்லிகார்ஜுனரை பார்த்தே ஆகவேண்டும் என்ற
எண்ணம்
வந்துவிட்டது.
இம்முறை விடுமுறைக்கு இந்தியா வந்ததும் பர்வதமலை செல்வதற்கான திட்டம் போடப்பட்டு,சென்ற
மாதம்
பர்வதமலைக்கு சென்றோம்.
நான்,என் தம்பிகள் இரண்டு
பேர்
மற்றும் அவர்களது அலுவலக
நண்பர்கள் நான்கு
பேர்
என
மொத்தம் 7 பேர்
மலையேற
தயாரானோம்.
மல்லிகார்ஜுனரை தரிசிக்க இரண்டு
வழிகளில் செல்லலாம்.
1) கடலாடி
கிராமத்தில் இருந்து காட்டு
வழியாக
பயணித்து பிறகு
மலைப்பாதைகள் வழியாக
செல்லலாம்.
2)தென்பாதிமங்கலம் கிராமத்தில் இருந்து 1.7 கிலோமீட்டர் சிமெண்ட் ரோட்டு,அதற்கு பிறகு 1263 படிகளை
கடந்து,ஒன்றரை கிலோமீட்டர் மலைப்பாறை ஏற்றம்
வழியாகவும் செல்லலாம்.
இந்த
இரண்டு
வழிகளும் சந்திக்கும் இடம் கடப்பாறை
மலை.கடப்பாறை மலையை
பற்றி
பின்னர் தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக,பொது
மக்கள்
மற்றும் டூரிஸ்ட்கள் தென்பாதிமங்கலம் வழியாகவே பயணிப்பார்கள்.சிமெண்ட் ரோடு,படிக்கட்டுகள்
என
கடலாடி
வழியை
காட்டிலும் இந்த
வழி
சற்று
எளிது.
நாங்கள் ஏறும்போது கடலாடி
வழியாகவும்,இறங்கும்போது தென்பாதிமங்கலம் வழியாக
இறங்கிவிடலாம் என
முடிவு
செய்து,
சாப்பிட்டால் மலை
ஏறுவது
சிரமம்
என்பதால் சாப்பிடாமல்,பயணத்திற்கு தேவையான தண்ணீர் பாட்டில்கள்,குளுக்கோஸ் என
அனைத்தையும் வாங்கி,
அதிகாலை 04:30 மணிக்கெல்லாம் திருவண்ணாமலையில் இருந்து பேருந்தை பிடித்து 05:30 கடலாடி கிராமத்திற்கு வந்துவிட்டோம்.
ஒன்றரை
கிலோமீட்டர் கிராமத்தை கடந்து
மலை
பாதைக்கு வந்தோம்.
மலை
ஏற
தேவையான சக்தியை தாருமைய்யா என்று
அடிவாரத்தில் இருந்த
விநாயகரை வணங்கி
பயணத்தை தொடங்கினோம்.
ஆரம்பத்தில் சமநில
பயணமாக
எளிதாகவே இருந்தது,போக
போக
பாதை
கற்களும்,பாறைகளுமாக,ஒற்றையடி பாதையாக ஒரு
காலை
ஊனி
நடப்பதற்கே சிரமமாக இருந்தது.
மலைப்பாதை முழுக்க வெள்ளை
நிற
பெயிண்டில் அம்புக்குறிகள் இருந்தது.அம்புக்குறிகளை தவறவிட்டால் கண்டிப்பாக பாதை
மறந்து
தொலைந்து விடுவது உறுதி.
அதிசயம் ஆரம்பம் ஆகும்
அந்த
நேரம்
வந்தது.
பாதை
சமநிலத்தை தாண்டி
சற்று
கடுமையாக மாறுவதற்கு முன்பே,
எங்களை
மேலே
அழைத்து செல்ல பைரவர்கள் வந்துவிட்டார்கள்.
இரண்டு
பைரவர்கள்,ஒருவர்
முன்னாடியும் மற்றொருவர் பின்னாடியும் எங்களை
வழிநடத்தி அழைத்துச்சென்றனர்.
ஒவ்வொரு கால்மணிநேரத்துக்கு ஐந்து
நிமிடம் ரெஸ்ட்
என்கிற
அடிப்படையில் பயணித்தோம்.
நம்பமாட்டீர்கள்,ஆனால்
உண்மை.
நாங்கள் எங்கெல்லாம் அயர்ச்சி காரணமாக அமர்ந்தோமோ அங்கெல்லாம் பைரவர்களும் அமர்ந்தார்கள்,எங்களுக்காக காத்திருந்தார்கள்.
கூட்டத்தில் கடைசி
ஆள்
எழும்
வரை
பின்னாடி எஸ்கார்ட் செய்யும் பைரவர்
எழும்பவே இல்லை.
எங்களுக்கு மட்டும் தான்
துணை
வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை.
மேலிருந்து கீழே
ஒருவர்
இறங்கி
வந்தார் அவருக்கும் துணையாக ஒரு
பைரவர்
இருந்தார்.
அப்போது தான்
அவரிடம் கேட்டோம்.
எப்படிங்க இந்த
நாய்கள் நம்ப
கூடவே
வருது
?
"தம்பி இவங்கல்லாம்
சித்தர்கள்னு நம்புறோம்.தினமும் மேல இருக்குற கோயிலுக்கு அன்னதான அரிசி எடுத்துட்டு போறேன்,எப்போதும் எனக்கு துணையாக இவங்க வந்துவிடுவார்கள்,வழியில் தேனீக்கள்,விஷ வண்டுகள் எதுவும் இருந்தால் முன்கூட்டியே உணர்ந்து,வேறு பாதையில் அழைத்து செல்வார்கள்" என்றார்.
அவர்
கூறியது போல்,நாங்கள் ரெஸ்ட் எடுத்து கொண்டிருக்கும் போது
எங்களுக்கு பின்னால் இன்னும் இருவர்
ஏறி
வந்தனர் அவர்களுக்கு துணையாகவும் பைரவர்கள் இருந்தார்கள்.
சிறிது
தூரம்
ஏறிய
பின்பு,அதுவரை அமைதியாக வந்த
பைரவர்கள் குரைக்க தொடங்கினர்.என்னவென்று பார்த்தால் குரங்கு கூட்டம் ஒன்று
அந்த
பாதையை
கடந்தது.
குரங்கு கூட்டம் கடக்கும் வரை
முன்
சென்ற
பைரவர்கள் நகரக்கூட இல்லை,குரங்கு கூட்டம் சென்றவுடன் தான் எங்களை அழைத்து சென்றனர்.
அதே
போல்
ஒரு
குறிப்பிட்ட எல்லையை கடந்த
பின்
எங்களை
வழிநடத்திய பைரவர்கள் வேறு
இரு
பைரவர்களிடம் எங்களை
Hand over மீண்டும் கீழே
சென்றுவிட்டனர் (கீழிருந்து வருபவர்களை அழைத்து வர).
கடப்பாறை மலை வரை
துணை
வந்தவர்கள்,அதற்கு
பின்
திடீரென காணாமல் போய்விட்டனர்.எப்போது சென்றனர் என்பதை
நாங்கள் கவனிக்கவே இல்லை.
எப்படி
இவர்களுக்கு வழி
தெரிகிறது? எப்படி
இவர்கள் ஏறும்
அனைவருக்கும் வழிநடத்தியாக இருக்கிறார்கள் ? pheromones என்ற அறிவியல் காரணம்
சொல்லப்பட்டாலும்,எப்படி
நாம்
ரெஸ்ட்
எடுக்கும் நேரமெல்லாம் அவர்களும் வெயிட்
செய்து
நம்மை
அழைத்து வருகிறார்கள் என்பது
அதிசயமே.
இதெல்லாம் நடக்கும்போது கூட
எங்களுக்கு அதிசயமாக தெரியவில்லை,சாதாரணமாக கடந்துவிட்டோம் பயணத்தை முடித்து வீடு
திரும்பியவுடன் நினைத்து பார்க்கும் போது
தான்
அதிசயமாக தெரிந்தது.
சரி
கடப்பாறை மலையில் இருந்து பயணத்தை தொடருவோம் வாருங்கள்.
கடப்பாறை மலை :
மிகவும் செங்குத்தான மலை.மலைகளில் பாதிக்கப்பட்ட
இரும்பு கம்பிகளை பிடித்து கொண்டு,காலில் பாதி பாதம்
படியும் அளவிற்கு மட்டுமே பாறையில் குடைய
பட்ட
சிறு
துவாரத்தில் பேலன்ஸ் செய்து
மேலே
ஏறவேண்டும்.
![]()
கிட்டத்தட்ட தவழ்ந்து கொண்டு
தான்
ஏறும்
நிலை.ஏறும் போது எக்காரணம் கொண்டும் கீழே
பார்க்கவே கூடாது.பல்லாயிரம் அடி பள்ளம்,சிறிது
ஸ்லிப்
ஆனாலும் சிதறி
விடுவோம்.
அதைத்தாண்டிய பின்
கிபி
மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குறுநில மன்னனின் சிறு
மணிமண்டபம் ஒன்று
இருந்தது.
மண்டப நுழைவு வாயிலில்
இருந்து க்ளிக்கியது
அங்கே
அமர்ந்து சற்று
ஓய்வு
எடுத்த
பின்
மீண்டும் கடைசி
படிகளில் ஏறி
கோயிலை
அடைந்தோம்.
இந்த
கோயிலின் மிகப்பெரிய சிறப்பு.
மல்லிகார்ஜுனருக்கு நாமே
அபிஷேகம்,பூஜைகள் செய்யலாம்.மேலே
சென்றதும் கும்
இருட்டான கோயிலுக்கு சென்று
அகல்விளக்குகள் ஒளியில் மிளிரும் மல்லிகார்ஜுனரை தரிசித்தோம்.
அதுவரை
இருந்த
அயர்ச்சி அனைத்தும் அவரை
கண்டதும் காணாமல் போனது.அப்படி ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன்,அதை
அனுபவித்தால் மட்டுமே விளங்கும்.
பிறகு
பிரமராம்பிகை தேவியை
வழிபட்டு,அருகில் இருந்த
அன்னதான மடத்திற்கு சென்றோம்.அங்கே
இருந்த
பெரியவரிடம் பேசிய
போது,
சஞ்சீவி மலையை
அனுமன்
தூக்கிச்சென்ற போது
அதிலிருந்து விழுந்த சிறு
துண்டு
தான்
இந்த
மலை
என்ற
ஐதீகம்
இருப்பதாக சொன்னார்.அதனால்
இந்த
மலையில் நிறைய
மூலிகை
செடி
இருப்பதால் ஒரு
முறை
ஏறினாலே உடல்
purify ஆகிவிடுமாம்.
ஏறுவதற்கே சிரமமாக இருக்கிறதே இங்கு
எப்படி
இரும்பு கம்பிகள்,படிக்கட்டுகள்,கோயில்
கட்டுமானம் எல்லாம் என்று
கேட்டபோது.
இந்த
கோயிலின் வரலாறு
பல்லாயிரம் வருடங்கள் பழமையானது.ஆரம்பகாலத்தில் இங்கும் ஏறும்
வசதிகள் மிகவும் கடினம்,பிறகு மல்லிகார்ஜுனரை தரிசிக்க வருபவர்கள் அவர்களால் முடிந்த கம்பிகள்,சிமெண்ட் மூட்டைகள் போன்ற
கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வந்தனர்.
அவர்களை தூக்க
முடிந்த தூரம்
வரை
எடுத்து வைத்துவிடுவர்.அவர்களுக்கு பின்னால் வருபவர்கள் அங்கிருந்து மேலே
கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவந்து கட்டுமானம் நடந்தாக கூறினார்.
மேலும்
மலையை
சுற்றி
நிறைய
சித்தர்கள் இருப்பதாகவும் அவர்களின் ஜீவ
சமாதிகளும் இருப்பதாக கூறினார்.(நாங்கள் கீழே இறங்கும் போது சித்தர் ஜீவ சமாதியை கடந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது).
இவ்வளவு கடினமாக பாதை
இருந்தாலும்,இதுவரை
மலையேற்றத்தில் மல்லிகைஜுனரை தரிசிக்க வந்தவர்களில் ஒருவருக்கு கூட
மரணம்
நிகழவில்லை என்று
கூறப்படுகிறது.
மதியஉணவாக சுடச்சுட தயிர்சாதமும் ஊறுகாயும் தந்தார்.எங்களுக்கு அது
அமிர்தம் போலவே
இருந்தது.
அவரிடம் பேசி
கீழே
இறங்க
ஆரம்பித்தோம்.
இம்முறை இரும்பு படிக்கட்டுகள்.ஓரிரு
நட்
போல்ட்டுகள் பதிய
பட்ட
செங்குத்தான இரும்பு படிகளில் பொறுமையாக அடிமேல் அடி
வைத்து
கீழே
இறங்கினோம்.
கடப்பாறை மலையில் இருந்து கீழே
வந்ததும்,மேலே
சொன்னது போல்,தென்பாதிமங்கலம்
வழியாக
பயணத்தை தொடர்ந்தோம்.
கடும்
பாறைகள்,பிடித்து கொள்ள
இரும்பு ஹாண்டில் கம்பிகள் என
இறங்குவதற்கு எளிதாக
இருந்தாலும்,கீழே
இறங்கும் force,எங்களை நாங்கள் நினைத்ததை விட
வேகமாக
கீழே
தள்ளியது.
பாறைகளை தாண்டியதும் 1263 படிக்கட்டுகள்.எங்களை
வரவேற்க குரங்கு கூட்டங்கள் இருந்தது.
இம்முறை பைரவர்களை துணை
இல்லை.குரங்கிற்கு பயந்து எடுத்தோம் ஓட்டம்.10
நிமிடங்களில் 1263 படிகளை
கடந்து
சிமெண்ட் பாதைக்கு வந்தடைந்தோம்.
1.7 கிலோமீட்டர் சிமெண்ட் ரோடு
பாதையை
கடந்ததும் இடது
புறத்தில் அகோர
வீரபத்திரத்திரர் கோவில்
இருந்தது.
அவரை
தரிசித்து 24 மணி
நேர
அன்னதான கூடத்தில் சுடச்சுட சாம்பார் சாதமும் உப்பு
மாங்காய் பட்டையும் சாப்பிட்டு மீண்டும் 1 கிலோமீட்டர் நடந்து
கிராமத்தின் பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தோம்.
மறக்கமுடியாத அனுபவம்.
இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது,எப்படி
நான்
இந்த
பயணத்தை முடித்தேன் என்று.
எல்லாம் ஈசனின் செயல் !!
மீண்டும் இங்கே
செல்லவேண்டும் என்ற
ஆர்வம்
தொற்றிக்கொண்டது.
ஈசனின்
அழைப்பில் மீண்டும் அவரை
தரிசிப்போம் என
நம்புகிறேன்.
மலை ஏற எடுத்துக்கொண்ட நேரம் : 4 மணி நேரம்.
மலை இறங்க எடுத்து கொண்ட நேரம் : 2.5 மணி நேரம்.
நீங்களும் கண்டிப்பாக மல்லிகார்ஜுனரை தரிசியுங்கள்.ஈசனை
உணருங்கள்.
ஓம் நம சிவாய !!
நன்றி
!!பரத்குமார்
ABK
Comments
Post a Comment