என் கேள்வி : சொந்தமாக ஒரு வீடு அல்லது கட்டிடம் கட்டும் நடுத்தர வர்க்கத்தினர், செய்யும் மிகப்பெரிய தவறு என்ன?

 

என் கேள்வி :


சொந்தமாக ஒரு வீடு அல்லது கட்டிடம் கட்டும் நடுத்தர வர்க்கத்தினர், செய்யும் மிகப்பெரிய தவறு என்ன?

 

 இனிய நண்பர் கட்டிடப்பொறியாளர் ராஜேஷ் அவர்களின் பதில் :


சொந்தமாக மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீடு கட்டும் நடுத்தர மக்களுக்கு நான் ஏதாவது ஒரு பயனுள்ள தகவல் தர வேண்டும். அது மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் இன்று இல்லாவிட்டாலும் நாளைக்கு வீடு கட்டுவதற்கு நான் சொல்வது மிகவும் உதவிகரமாக இருக்கும். அதனால் தயவு செய்து எல்லோரும் தொடர்பு படியுங்கள். வாருங்கள் பதிலுக்கு போகலாம்!!

 

வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப்பார்!! , என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல்யாணம் செய்வது எவ்வளவு கடினம் என்று, 90's kids 2K kids கேட்டால் கூட சொல்லி விடுவார்கள். ஆனால் இன்றைய நிலவரப்படி வீடு கட்டுவது அதைவிட கடினம். அது எவ்வளவு கடினம் என்று அவ்வளவு எளிதாக சொல்ல முடியாது. என்னைப் போல் ஒரு அனுபவஸ்தன் மட்டுமே சொல்ல முடியும்.

 

என்னைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. நான் 1990 முதல், வீடு கட்டுவதற்கு வரைபடங்கள் மற்றும் அது சம்பந்தமான படிப்பு, கணக்கு போன்றவற்றை செய்கிறேன். அப்போது பேப்பர் பென்சில் கொண்டு செய்தேன். இப்போது கம்ப்யூட்டர் கொண்டு செய்கிறேன். அது ஒன்றுதான் வித்தியாசம்.

வீடு கட்டும் கட்டுமான பொருட்கள், மனையின் விலை மற்றும் கட்டுவதற்கு கூலி போன்றவற்றையும் பல வருடங்களாக நான் கவனித்து வந்துள்ளேன். வீடு கட்டுவதற்கு, வெறும் வரைபடம் போட்டால் மட்டும் ஒரு இன்ஜினியர் திறமைசாலி என்று சொல்ல முடியாது. தன்னுடைய விரல் நுனிகளில், ஒரு வீட்டிற்கு தேவையான பொருட்கள் எவ்வளவு என்று சொல்லத் தெரிய வேண்டும். ஏற்கனவே இது சம்பந்தமாக நான் சில பதில்கள் எழுதினாலும், மீண்டும் நான் உங்களுக்கு சில விஷயங்கள் சொல்கிறேன்.

நான் கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் கட்டிடங்களுக்கு வரைபடம் போட்டு உள்ளேன். அதில் நிறைய பேர், எஸ்டிமேட் மற்றும் approval போன்ற விஷயங்களையும் என்னையே கவனிக்க சொல்லுவார்கள். இன்னும் சில பேர் கட்டிடம் கட்ட, கான்ட்ராக்டர் நிர்ணயம் செய்வது முதல் வீடு கட்டி முடியும் வரை முழு பொறுப்பை மேற்பார்வை செய்ய கேட்டுக் கொள்வார்கள்.

அப்படி பல கட்டிடங்கள் நான் கடைசி வரை இருந்து கட்டி முடித்த அனுபவத்தில், ஒரு சில விஷயங்கள் மாறாமல் நம் நாட்டில் தொடர்வதை கண்டேன். அங்கேதான், நமக்கு அறிவு தேவை. இந்த இடத்தில் நீங்கள் ஜெயித்து விட்டால், உங்கள் கனவு இல்லத்தை அழகாக கட்டி முடிக்கலாம்.

அப்படி என்ன விஷயங்கள் அவ்வளவு பொதுவானதாக கட்டுமான துறையில் உள்ளது?

1.      முதலில் Cost எனப்படும் கட்டுமான பொருட்கள் விலை. டெக்னிக்கல் விஷயங்களை விட, பைனான்ஸ் அதாவது பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை நான் முதலில் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. கட்டுமான துறை பற்றி, நான் சொல்வதை அப்படியே கேட்கும் வீடு கட்டுபவர்கள், பண விஷயத்தில் கேட்பதில்லை. இதில்தான் பல பிரச்சினைகள் உருவாகின்றன.

2.      கட்டுமான மேலாண்மை என்றால் கட்டிடம் கட்டும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, Project Flow, Time and Cost Management தான் கட்டுமான துறையில் ரொம்ப முக்கியம்.

3.      இப்பொழுது பெரும்பாலான கல்லூரிகளில், இந்தப் படிப்பை சரியாக சொல்லிக் கொடுப்பது இல்லை. அதனால் இப்பொழுது இருக்கும் இன்ஜினியர்களுக்கு, ஒரு கட்டிடத்தை கட்டி முடிக்க, Project மேனேஜ்மென்ட் செய்வதற்கான அடிப்படை இன்ஜினியரிங் அறிவு கூட, இப்போது படித்து முடித்த மாணவர்களிடம் இல்லை. வெறும் பட்டப் படிப்பை வைத்துக்கொண்டு, நீங்கள் நல்ல கட்டிடம் கட்ட முடியாது. அறிவு மற்றும் திறமையை குறிப்பாக கணித திறமை இல்லாதவர்கள் இன்ஜினியரிங் படிப்பது அர்த்த மற்ற செயல்.

4.      இந்தக் கணக்கு போடும் திறமை, நீங்கள் கட்டுமான பொருட்கள் வாங்குவதற்கும், அந்தக் கட்டிடம் கட்டி முடிப்பதற்கான நேர மேலாண்மை மற்றும் பொருளாதார விலைவாசி நிலவரம் போன்றவற்றை கணிக்க உதவும்.

5.      ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் சில கல்லூரிகளுக்கு, Parryware கம்பெனி சார்பாக, Sanitary மற்றும் Electrical பற்றி 3D பற்றி seminar எடுக்கச் சென்றபோது, இப்போது உள்ள கல்லூரி மாணவர்கள் பலருக்கும், இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட அடிப்படை கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. சாதாரணமாக ஒரு கன அடி தண்ணீர் எவ்வளவு லிட்டர்? ஒரு ஏக்கர் என்பது எவ்வளவு சென்டுகள் வீட்டின் உள்ளே மின்சார விளக்குகள் ஒளி யின் அளவு Lumens என்றால் என்ன? நாம் ஏன் குறிப்பிட்ட கம்பிகளை (Tor steel Fe415 ) கட்டுமானத்தில் பயன்படுத்துகிறோம்? Sanitation and open space போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு கூட இந்த காலத்து மாணவர்களுக்கு பதில் தெரியவில்லை.

6.      பல விஷயங்கள், நம் பாடத் திட்டத்தில் கற்றுக் கொடுக்கப்படுவது இல்லை. குறிப்பாக கணிதம் மற்றும் விஞ்ஞானம் போன்றவற்றில் இப்போதுள்ள மாணவர்களின் அறிவு மிகவும் பின் தங்கி உள்ளது. பணத்திற்காக படிப்பதால், இப்பொழுது உள்ள மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை இல்லை. நல்ல வேலை கிடைத்தால் போதும் என்றுதான் இப்பொழுது நினைக்கிறார்கள். ஆனால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பவர்தான் இன்ஜினியர். ஒரு இன்ஜினியரிங் வேலை செய்வதற்கு, கணித அறிவு மிக மிக அடிப்படை. இப்பொழுது கம்ப்யூட்டர் கால்குலேட்டர் கொண்டு மிகவும் தவறாக கணக்குகள் போட்டு கட்டிடம் கட்டுகிறார்கள்.

7.      எனவே கணித அறிவு கட்டிடம் கட்டி முடிப்பதற்கு மிக மிக அவசியம். இந்த கணித அறிவு உங்களிடம் இல்லாவிட்டால், நீங்கள் எத்தனை டிகிரி வாங்கி வைத்தாலும் உங்களால் ஒரு கட்டிடம் கட்ட முடியாது.

8.      குறிப்பாக இந்த கணித அறிவு, ஒரு கட்டிடம் கட்டி முடிப்பதற்கு PERT / CPM போன்ற கணக்குகள் மட்டும் அல்ல, எவ்வளவு பணம் பொருட்களுக்கு செலவு செய்ய வேண்டும், எவ்வளவு பணம் வேலையாட்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை ஒரு இன்ஜினியர் துல்லியமாக சொல்ல வேண்டும்.

9.      ஒரு இன்ஜினியர் இந்த கணக்கு பண விவாகரத்தை துல்லியமாக சொல்ல முடியாத காரணத்தால், கட்டிடம் கட்டும் மேஸ்திரி கொத்தனார் மற்றும் பெயிண்டர் போன்றவர்களிடம் வீடு கட்டுபவர்கள் விலை பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதன் விளைவாக, நிலத்திற்கு கூடுதல் விலை மட்டுமல்லாமல், கட்டுமான பொருள்களுக்கும் கூடுதல் விலை கொடுத்து, வேலை செய்வதற்கான கூலி மிக அதிகம் கொடுத்து கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை விரயம் செய்கிறார்கள்.

10.  இப்பொழுது படித்தவர்கள், கட்டுமான பொருட்கள் மற்றும் வேலைக்கு ஆகும் செலவை, அந்த வேலை செய்யும் கொத்தனார் பிளம்பர் மற்றும் கட்டிட வேலை செய்யும் மேஸ்திரியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். வீடு கட்டுபவர்கள், கேட்டால் கூட பரவாயில்லை. இப்பொழுது படித்த இன்ஜினியர்கள் கூட, கொத்தனாரிடம் கணக்கு கேட்கிறார்கள். கொத்தனார் சொல்லும் கணக்கை வைத்துக்கொண்டு, நீங்கள் கட்டிடம் கட்டுவதற்கு, உங்களுக்கு எதற்கு இன்ஜினியரிங் என்ற படிப்பு தேவை? இன்ஜினியரிங் படிப்பது என்பது வேலை செய்து பணம் சம்பாதிக்க அல்ல, நல்ல கட்டிடம் கட்டி திறமையாக வேலையை முடிப்பது தான்.

இங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம், குறை மாணவர்களிடம் இல்லை. ஆனால் ஆசிரியர்களிடம் அவர்கள் எடுத்துச் செல்லும் பாடத்திட்டத்தில் கண்டிப்பாக இருக்கிறது.

இந்தக் குறை ஏன் தென்படவில்லை?

காரணம் என் பையனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தால் போதும், கல்வியின் தரம் பற்றி நான் கவலைப்படவில்லை என்று சில பெற்றோர்கள் அந்தக் கல்வியை, அதன் தரத்தை மாற்றி விட்டார்கள்.

Campus இன்டெர்வியூ நடத்தும் நிறுவனங்கள், புகழ் பெற்ற கல்லூரிகளில் இருக்கும் மாணவர்கள் தான் எடுத்துக் கொள்வார்கள். கொடுமை என்னவென்றால், ஒரு மாணவனின் திறமையை கல்லூரியை வைத்து தான் இன்று எடை போடுகிறார்கள். இது தவறான போக்கு. அதனால்தான் சொல்கிறேன் புகழ்பெற்ற கல்லூரி, பட்டப்படிப்பு எல்லாம் "மாப்பிள்ளை என்ன படிச்சிருக்கார்?" என்ற பெண் பார்க்கும் கேள்விக்கு பதில் சொல்ல மட்டும் தான் உதவி செய்யும். ஆனால் ஒரு திறமையான இன்ஜினியருக்கு அது அளவுகோல் அல்ல!!

இன்று எல்லா கல்லூரிகளும், "Industrial standard " என்ன என்று தெரியாமல், ஏதோ கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள்.கல்லூரிகளில் சொல்லிக் கொடுப்பது, மீட்டர் களில். ஆனால் நம் அன்றாட வாழ்வில் கட்டிடம் கட்டுவது அடி கணக்கில்!! 1 அங்குலம் என்பது, 25.4 மில்லி மீட்டர். ஒரு சுவற்றின் அளவு 9 அங்குலம், அல்லது 4.5 அங்குலம். இந்த 4.5 அங்குலம் என்பதை எப்படி எழுத வேண்டும் தெரியுமா? 0.375!

இந்த கணக்குகள் எல்லாம் பாடத்திட்டத்தில் கிடையாது. ஆனால் நீங்கள் கணக்கு போட இதெல்லாம் தேவை. இவை அனுபவத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

தஞ்சாவூர் கோவில் கட்டும்போது இந்த அங்குலம் கூட கிடையாது. ஆனால் எனக்கு ஒரு ஸ்தபதி, கோவில் கட்டும் சாத்திரம் கற்றுக் கொடுத்தால், நான் ஒரு மாணவனை போல் கற்றுக்கொண்டு, கோவில் வரைபடம் போடுவேன். தஞ்சாவூர் கோவிலில் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று கேட்பது மேற்கத்திய கல்வி !! தஞ்சாவூர் கோவிலை பற்றி கற்றுக்கொள்ள இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது என்பது என்னுடைய வாதம்!

எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அமெரிக்கா சென்று அடுக்குமாடி கட்டிடத்தை கற்றுக் கொள்வதை விட, தஞ்சாவூர் கோவில் பற்றிய கல்வியை கற்றுக் கொள்வதில் தான் ஆர்வம் காட்டுவேன். இன்றைய கல்விமுறை, தவறான பாதையில் பயணிக்கிறது.

இப்போது இந்த பதில் நமது கல்வி அல்லது பாடத்திட்டத்தை பற்றி இல்லை. வீடு கட்டுபவர்கள் செய்யும் தவறை பற்றியும், அதை எப்படி சரி செய்வது என்பது பற்றி!!

அளவுகள் மட்டுமல்ல, பணத்தை எப்படி கையாள்வது என்று எந்த சிவில் இன்ஜினியருக்கும் கல்லூரிகளில் சொல்லித் தருவதில்லை. இதையும் நாம் அனுபவத்தில் தான் கற்றுக் கொள்ள முடியும்!

இங்கேதான் நான் மிக முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன்சொந்தமாக வீடு கட்டுபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, பேசிய தொகையை விட அதிகமாக பணம் கொடுத்து கட்டிடத்தை கட்டி முடிப்பது!! அதாவது கட்டிடம் கட்டும் கான்ட்ராக்டர், எப்படியாவது உங்களிடம் அதிகமாக பணத்தை, கடைசியில் வசூலித்து விடுவார்.

இங்கே தான் நான் மிக முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன்.

நீங்கள் ஒரு கட்டுமான ஒப்பந்தம், Construction Agreement போடுவது எதற்காககுறிப்பிட்ட பணத்தில் குறிப்பிட்ட காலகட்டத்தில் உங்கள் வீட்டை கட்டி முடிப்பதற்காகத்தானே?

ஒரு காண்ட்ராக்டர் 2000 ரூபாயில் நான் வீடு கட்டுகிறேன் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தால், அது அவருடைய லாபம் சேர்த்துதான். அதுவும் தவிர, முதலிலேயே Centering Scofolding போன்ற சார கொம்புகள் வாங்குவதற்கு construction equipments போன்ற பல வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து தான் 2000/-.

ஆனால் இப்படி இருக்க, சில காண்ட்ராக்டர்கள், உங்களிடம் அதிகம் பணம் பறிப்பதற்கு, "ஜல்லி போடுவதற்கு பலகை வாங்க வேண்டும், Advance ஒரு லட்ச ரூபாய் கொடுங்க!" என்று கேட்பார்.

அக்ரீமெண்ட் என்பது படிக்காதவர்கள் மத்தியில், ஒரு சீரியஸான விஷயமே இல்லை. அக்ரிமெண்டில் பத்து லட்சம் என்று சொல்லிவிட்டு, கூசாமல் மேலே 5 லட்சம் கேட்பார்கள்.

இப்படி இருக்கும் போது இடையில் திடீரென்று, ஒரு லட்ச ரூபாய் அதிகம் கேட்டால், என்ன ஆகும்?

இப்போது நீங்கள் தான் வீடு கட்டுபவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். வீடு கட்டும் மேஸ்திரி திடீரென்று ஒரு லட்ச ரூபாய் கேட்கிறார்பலகை வாங்க வேண்டும். இப்போது உங்களுக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடல் இப்படித்தான் இருக்கும்!

என்ன மேஸ்திரி ? முதல் மாடி வருவதற்கு முன்பு, 15 லட்ச ரூபாய் வாங்கி விட்டீர்கள். ஆனால் ஒப்பந்தப்படி பத்து லட்சம் தான் வாங்க வேண்டும். இப்போது திடீரென்று மேலும் ஒரு லட்சம் ரூபாய் கேட்கிறீர்கள்!! நான் எப்படி கொடுப்பது?

சார் மொத்த அமௌன்ட் எவ்ளோ?

25 லட்சம்!!!

இன்னும் பத்து லட்சம் பாக்கி இருக்கு. நான் அந்த பத்து லட்சத்தில் தான் கேட்கிறேன்!! பலகை வாடகைக்கு கொடுப்பவர், பணம் கொடுத்தால்தான் பலகை எடுக்க விடுவார்!! உங்களுக்கு தளம் போட வேண்டுமென்றால், நீங்கள் கொடுத்து தான் ஆக வேண்டும்.

நீங்கள் இப்போது கையை பிசைந்து கொண்டு யோசிப்பீர்கள்.

உடனே முக்கியமான ஒரு விஷயம் சொல்லுவார்!!

நான் இதுக்கு முன்னாடி டாக்டர் வீடு கட்டினேன். அதற்கு முன்பு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீடு கூட கட்டி உள்ளேன். எல்லோருமே, தண்ணீர் குடிக்க காசு, டீ குடிக்க காசு என்று தனியாக 10,000 ரூபாய் கொடுப்பார்கள். சில Builder கள் தளம் போடும் பொழுது, நூறு பேருக்கு சரவணபவனில் சாப்பாடு வாங்கி கொடுப்பார். நான் அப்படியெல்லாமா உங்களிடம் கேட்கிறேன்?? இது எல்லோரும் கொடுக்கும் வழக்கம்!!!

மனதுக்குள் நீங்கள் " எல்லோரும் கொடுப்பார்களா?? அப்ப நாமும் கொடுத்து தான் ஆக வேண்டும்!!" என்று முடிவை கட்டி விடுவீர்கள்.

செக் இல்லையே!!

பரவாயில்லை சார், பக்கத்துல தான் ஏடிஎம் இருக்கு. ஏடிஎம்ல எடுத்து குடுங்க!! ( எந்த ஏடிஎம்மில் பணம் இருக்கும், எந்த ஏடிஎம் வாரி வாரி கொடுக்கும் என்று அவருக்கு நன்றாக தெரியும் )

நீங்களும் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுத்து விடுவீர்கள்!!

இப்படி நைசாக பேசி பேசி வாங்கி கட்டிடம் பூசு வேலை நடந்து முடிக்கும் பொழுது, 24 லட்சம் வாங்கி இருப்பார்.

அப்போதுதான் என்னிடம் வருவீர்கள்.

ராஜேஷ், இதுவரை கட்டிடம் கட்ட எவ்வளவு ஆகியிருக்க வேண்டும்??

என்ன சார், கரெக்டாக சொன்னால், 16 லட்ச ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும். நீங்க கொஞ்சம் தாராள மனசு, 18 லட்சம் கொடுத்து இருப்பீங்க!!

அதுதான் இல்லை!! 24 லட்சம் வாங்கிவிட்டார் கான்ட்ராக்ட்ர்!!

என்ன சொல்றீங்க?? இன்னும் பாத்ரூம் போடவில்லை, பெயிண்டிங் நடக்கவில்லை, எலக்ட்ரிக்கல் வேலை உள்ளது, மொட்டை மாடியில் வெதர் இன் கோஸ் போட வேண்டும், டைல்ஸ் போட வேண்டும், வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும்!! இதைத் தவிர கதவு ஜன்னல்!! இன்னும் ஏழு லட்சம் பத்தாது. போன வருடத்தை விட இந்த வருடம் மரம் விலை ஏறி விட்டது. அனேகமாக இன்னும் பத்து லட்சம் ஆகும், நீங்கள் பேசின மொத்த பணத்தையும் இப்போதே கொடுத்து விட்டீர்கள். மீதி ஒரு லட்சத்தில் இதையெல்லாம் செய்ய முடியாது!!!

இல்லை வீட்டை சுற்றி சுவர் கணக்கில் வராது!! தண்ணி தொட்டி கணக்கில் வராது!! இதெல்லாம் extra என்று சொல்லுகிறார் கான்ட்ராக்டர்!!

நீங்கள் முன்னமே பேசி இருக்க வேண்டும்!!

முதலில் இதெல்லாம் சொல்லவில்லை!!

இதற்காகத்தான் என்னைப் போன்ற ஒரு இன்ஜினியர் இடம் நீங்கள் கட்டுமான பொருட்கள் கூலி போன்ற கணக்குகள் போட்ட Estimate, Stage payment போன்ற விஷயங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்படி ஸ்டிட்ரிக்கிட் ஆக நடக்க வேண்டும்!!

என்ன செய்வது??

இப்படித்தான் எல்லா இடங்களிலும், பேசிய தொகையை விட கூடுதலாக எப்படியோ வாங்கி விடுகிறார்கள்!!

நான் இதுவரை பலமுறை இதுபோன்று நடந்து பார்த்து விட்டேன். வீடு கட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை!!

நான் பார்த்ததில், பத்து பேரில் எட்டு பேர் பேசின தொகையை விட அதிகமாக கொடுத்து தான் வீட்டை முடித்துள்ளார்கள்.

ஏதாவது காரணம் சொல்லி முதலிலேயே பணத்தை வாங்கி விடுவது தான், இந்த அடிப்படை பிரச்சனைக்கே காரணம்.

ஆனால் பணம் கொடுக்காத, மோசமான owner களும் நாட்டில் உண்டு. ஆனால் அவர்களை காட்டி, கான்ட்ராக்டர்கள் தப்பிக்க முடியாது.

பெரும்பாலும் ஏமாறுபவர், கட்டுமானத்துறை பற்றி தெரியாத வீடு கட்டுபவராக தான் இருக்கிறார்.

எனவே நீங்கள் வீடு கட்டும் போது, உங்களுடைய மொத்த Project details என்னைப் போன்ற ஒரு இன்ஜினியரிடம் காட்டி, எந்த கட்டத்தில் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்கட்டுமான பொருட்கள் சரியாக போடப்படுகிறதா? என்று பண விஷயத்திலும், கொஞ்சம் கரராக நடந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் பணத்தை கொடுத்து விட்டால் திரும்ப வாங்க முடியாது இங்கே!!

நீங்கள் அவர்களை, வீட்டில் போய் தேடினால், அவர்கள் ஆளே கிடைக்க மாட்டார்கள்!!

அந்த காலத்தில் எல்லாம் செல்போன் கிடையாது. நான் அவர்கள் தங்கி இருக்கும் ஒரு பெரிய குடியிருப்புக்குள் சென்று தேடினால் கூட கிடைக்க மாட்டார்கள்.

உடனே நீங்கள் சொல்லலாம், "இப்போதுதான் செல்போன் இருக்கிறதே? செல்போனை வைத்து ஈசியாக பிடித்து விடலாம்??"

நீங்கள் வேலை கொடுக்கும் வரை, அந்த காண்ட்ராக்டர் உங்களுக்கு பல கால்கள், பலமுறை பேசியிருப்பார்.

ஆனால் பணம் நிறைய கொடுத்த பிறகு, யாருமே செல்போனை எடுக்க மாட்டார்கள். செல்போன் என்பது, தங்களுடைய வசதிக்காக தான். அடுத்தவர்களுக்காக அல்ல என்பது நமது நவீன கொள்கை. செல்போன் தொடர்பு கொள்ள முடியாது. ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கும். பணத்தை இழந்தவனுக்கு தான், இந்த செல்போன் என்பது வேஸ்ட் என்று நன்கு புரிந்து இருக்கும்!!

ஒரு படத்தில் " சோ "அழகாக ஒரு வசனம் சொல்லுவார்!!

படம் ஆயிரம் பொய் !

ஜெய்சங்கர் : எந்த குதிரையை வேகமாக ஓடும்?

சோ : குதிரையை விட மனிதன் வேகமாக ஓடுவான்!

ஜெய்சங்கர் : உளறாதே!! மனிதன் எப்படி அவ்வளவு வேகமாக ஓடுவான்?

சோ : டேய்! நீ ஒரு மனிதனிடம் கடன் கொடுத்துப் பார். பணத்தை வாங்கிக் கொண்டு அவன் எவ்வளவு வேகமாக ஓடுகிறான். ( பல வருடங்கள் முன்னே சோ சார் சொன்ன விஷயம் )

நீங்கள் ஒருவர் உங்கள் கண்ணில் இருந்து மறைய வேண்டும், அவர் கண் காணாமல் போக வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், அவருக்கு பணம் நிறைய கொடுத்து பாருங்கள்!

கடைசியில் சாவி வாங்கும் பொழுது,95% பணம் தான் ஒரு கான்ட்ராக்டர் உங்களிடம் வாங்கி இருக்க வேண்டும். 5% Retention Amount என்று ஒரு செக்யூரிட்டி டெபாசிட் போல், உங்களிடமே இருக்க வேண்டும்.

எனக்கு பரிபூரண திருப்தி, என்று நீங்கள் மனதார நினைத்த பின் தான் கடைசியில், ஒரு தட்டில் துணிமணிகளுடன், ஏன் ஸ்வீட் பழங்களுடன் கூட அந்த, பிடித்த வைத்த பணத்தை கொடுக்கலாம்.

Retention என்பது சில சமயம் ஒரு ஆண்டு கழித்து கூட கொடுக்கலாம்எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்த பின்பு கொடுப்பதுதான் இந்த பணம்!!

ஆனால் பெரும்பாலும், கட்டுமானத்துறையில் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. கடைசியில் ஏமாறுபவர் நுகர்வோராக தான் இருக்கிறார். கொஞ்சம் விழிப்புணர்வு தேவை. அதற்குத்தான் என்னைப் போன்ற ஆட்கள் தேவை என்று சொல்கிறேன். இதைப் படிக்கும் நீங்கள், வீடு கட்டுவதற்கு வெறும் படம் மட்டும் போட்டால் பத்தாது, பணம் எப்படி கொடுக்க வேண்டும் என்று முதலிலேயே திட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் நினைத்தபடி உங்கள் கனவு இல்லத்தை கட்ட முடியும்.

நான் முதலிலேயே சொன்னேன் அல்லவா, 80 களில் ஒரு சதுர அடி 200 ரூபாய் க்கு வீடு கட்டினார்கள். இன்று ஒரு சதுர அடி 2000 ரூபாய்க்கு வீடு கட்டுகிறார்கள். Trend, Fashion, டெக்னாலஜி கட்டுமான தொழில்நுட்பம் கட்டுமான பொருட்கள் எல்லாம் மாறிவிட்டது.

ஆனால், அன்று இருபது ரூபாய் ஏமாற்றியவர்கள் , இன்று இரண்டு லட்ச ரூபாய் ஏமாற்றுகிறார்கள். இந்த Trend மட்டும் நம் நாட்டில் மாறவே இல்லை. Moral Science என்ற அடிப்படைக் கல்விக்கு, தென் கொரியா போன்ற நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கிறது.

ஆனால் நம் நாட்டில் ஒண்ணாம் கிளாஸ் படிக்கும் குழந்தை செல்போன் வைத்துக் கொண்டு விளையாடுகிறது.

செல்போன் தயாரிக்கும் தென்கொரியா குழந்தை, சுத்தம் சுகாதாரம், நேர்மை பற்றி அடிப்படைக் கல்வி கற்கிறது. நம் கல்வித் திட்டத்தில், எது முக்கியமோ அதை படிக்காமல், இன்ஜினியரிங் படித்து எந்த பயனும் இல்லை.

எவ்வளவு வசதி இருந்தாலும், குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற பணத்தாசை நம்மிடையே இன்னும் மறையவில்லை. அன்று, சுவற்றுக்குப் பின்னால் மங்காத்தா என்று சீட்டாட்டம் ஆடியவர்கள் இன்று Online Rummy ஆடுகிறார்கள். அன்று இரண்டு ரூபாய்க்கு குப்பை சினிமா காட்டியவர்கள் இன்று 2000 ரூபாய்க்கு அதே குப்பை கதையை சினிமாவாக காட்டுகிறார்கள்நல்ல விஷயங்கள் மட்டும்தான் மாறிவிட்டது. மோசமான விஷயங்கள் மாறவே இல்லை!! அப்படியே வேறு ரூபத்தில் உள்ளது!!!

அன்று, ஐந்து பைசா ஏமாற்றியவர்கள் இன்று ஐந்து லட்சம் ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றுபவனை விட ஏமாறுபவர்கள் மீது தான் தவறு என்று சொல்வது ஓரளவு உண்மைதான்.நீங்கள் ஏமாற கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு

ஏமாற்றுபவர்களை நாம் திருத்த முடியாது, ஆனால் நாம் ஏமாறாமல் உஷாராக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக பள்ளியில் ஏமாந்தால், கல்வி காலி. திருமணத்தில் ஏமாந்தால் நிம்மதி இல்லை. வீடு கட்டும் விஷயத்தில் ஏமாந்தால் சொத்து இல்லை. இந்த காலத்தில் சொத்து இல்லை என்றால் ஒருவரும் மதிக்க மாட்டார்கள்.

நீங்கள் சொந்தமாக உங்களுக்கென்று ஒரு வீடு கட்டுவது அவசியம். தேவையில்லாத விஷயத்தில் பணத்தை செலவு செய்து, நாமே அடுத்தவருக்கு தேவையில்லாமல் அதிகம் கொடுத்து, பணத்தை ஏமாறக்கூடாது. மற்ற பொருட்கள் வாங்கும் போது ஏமாந்தால், உங்களுக்கு நஷ்டம் சில ஆயிரங்கள் மட்டும் தான். ஆனால் வீடு கட்டும் போது ஏமாந்தால் அது லட்சங்களில் மாறும். அதில் இன்னொரு வீடு கட்டலாம். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி!

நீங்கள் நினைத்த வீட்டை கட்டி, வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்!!

சுவையான Trivia தகவல் வழக்கம் போல் ::

நான் ஒரு இன்ஜினியர் மட்டுமல்ல ஒரு ஆசிரியரும் கூட. ஆசிரியர் என்று சொல்வதில் சந்தோஷப்படுவேன். ஒரு ஆசிரியராக இடையில் கேட்ட இரண்டு கேள்விகளுக்கு விடை இதோ ::

ஒரு கன அடி தண்ணீர் எவ்வளவு லிட்டர்?

28.3 லிட்டர்கள்!

ஒரு ஏக்கருக்கு எவ்வளவு சென்டுகள்?

100 சென்ட்!!

கூடுதல் தகவல். ஒரு சென்ட் 435.6 சதுர அடிகள். எப்படி வந்தது? அந்த காலத்தில் ஒரு பிரிட்டிஷ் Survey chain நீளம் 66 அடி! ஒரு செயின் 66 x 66=4356 10 சதுரமாக அளக்கும் போது வரும் அளவு 43560 சதுர அடிகள் = ஒரு ஏக்கர்!

நாம் ஏன் முறுக்கிய கம்பி RTS Steel பயன்படுத்துகிறோம்?


கான்கிரீட்டுக்கும் கம்பிக்கும் பிடிமானம் அதிகமாக இருக்கும். முன்பு MS rod வழுவழுப்பான இரும்பு கம்பிக்கு Hook போட வேண்டும். அந்த காலத்தில் எல்ஐசி கட்டிடம் இதில் தான் கட்டப்பட்டது. ஆனால் இன்று, நாம் உபயோகப்படுத்தும் கம்பிகள், Ribbed Tor Steel என்ற முறுக்கு எறிய கம்பிகள்!


நன்றி உங்கள் கனவு இல்லம் நிறைவேற ..வாழ்த்துக்கள் 

சிவக்குமார் VK 

வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் .

Sivakumar.V.K



Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

 

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் சரித்திரச் சான்று

கேள்வி : ஜமீன்தார்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? பதில் : Subramanian A முன்னாள் ஓய்வு பெற்ற தொழில் அலுவலர்/தொழில் துறை பாரசீக மொழியில் ஜமீன் என்றால் பூமி என்றும் தார் என்றால் உடையவர் என்றும் பொருள் அதனால் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு நிலஉடமையாளர் என்று அர்த்தம். இந்தியாவை அண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தாம் கைப்பற்றிய நாடுகளில் நில வசூல் செய்ய , கர்நாடகம், (கர்நாடகா இல்லை ) (மெட்ராஸ், ஆற்காடு, கடலோர ஆந்திரா, கர்நாடகாவின் தெற்கு பகுதியான சித்தூர், கோலார், தென் ஒரிஸ்ஸா, பாலக்காடு ஆகிய பகுதி ) வருடம் தோறும் ஆற்காடு நவாபையும், மற்றும் குத்தகை தாரர்களையும் நம்பி இருந்தது. மொத்த குத்தகை தொகையை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விட்டது. ஏலம் எடுத்த கான் சாஹிப், தீர்த்தரப்ப முதலியார் போன்றோர் 72 பாளையங்களை சேர்ந்த பாளையக்காரர்களிடம்" கிஸ்தி "வசூல் செய்து ஆங்கில கம்பெனியாருக்கு அளித்தனர். மீதத்தை தாம் எடுத்து கொண்டனர். அவர்கள் வரியை வசூல் செய்ய ஆங்கிலேயர் படை அனுப்பி உதவினார். அந்த செலவையும் அவர்களிடமிருந்து பெற்றனர். முதலில் ஆற்காடு நவாப் தான் நாயக்கர் மன்னர்களிடமிருந்து வரி வசூலித்தார். (முகலாய பேரரசரின் பிரதிநிதி என்று கூறி ) பின்னர் சில வருடங்களில் அவர் ஆங்கில கம்பெனியில் வாங்கிய கடனும், போர் செலவுகளுக்கும் அதிகரிக்கவே, ஆங்கில கம்பெனியார் கர்நாடத்தில் வரி வசூலிக்கும் உரிமையை மிரட்டி வாங்கி கொண்டனர். பல நாயக்கர் மன்னர்கள், புலித்தேவர், அழகு முத்து கோன், கோபால நாயக்கர், வீரபாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரர், ராமநாதபுரம் சேதுபதி , ஆங்கிலேயருக்கு முதலில் கிஸ்தி வசூல் செய்து கொடுத்த யூசுப் கான் என்ற கான் சாஹிப் முதலியோர் ஆங்கிலேயரின் வரி வசூலிக்கும் உரிமையை எதிர்த்து போர் தொடுக்கவே லார்ட் காரன்வாலிஸ் திட்டத்தின் படி ஆங்கில இயக்குனர் சபை ( Board of directors ) 1790 ஆண்டு உத்தரவு படி முதலில் 10 வருடத்திற்கும் ,1793 முதல் நிரந்தரமாகவும் ஜமீன்தார் என்ற பதவி உருவாக்கப்பட்டு முதலில் வங்காளத்தில் அமல்படுத்த பட்டு வரி வசூல் செய்யும் பொறுப்பு அவர்களிடமே சில நிபந்தனைக்கு உட்பட்டு வழங்கப்பட்டது. உதாரணமாக வங்காளத்தில் ராஜ் சஹாஹி ராஜ் ஜமீன் 33670 சதுர கிமீ பரப்பளவு உடையது. பீகாரின் கீல்வாட் யாதவ ஜமீன் 22445 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. வங்காள ஜமீன்தார்கள் டாக்கா மற்றும் பங்களாதேஷ் பொறியியல் பல்கலை கழகத்தையும் நிறுவினார். பலர் முதலாம் சுந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு அல்லலுற்றனர். பின்னர் கர்நாடகத்தில் இந்த ஜமீன்தாரி முறை 1802 ஆம் ஆண்டில் இருந்து நீட்டிக்கப்பட்டது . ஒரு ஜமீன்தார் கட்டவேண்டிய தொகை நஞ்சை, புஞ்சை, காடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் என கணக்கிட பட்டு வருடம் தோறும் " பேஸ்குஸ் ", "சானட் "என்று அழைக்க பட்ட தொகை நிர்ணயம் செய்ய பட்டது. வருடம் தோறும் கலெக்டர் முன்னிலையில் வசூல் விபரம் சரி ("ஜம்மா " ) பார்க்கப்பட்டது. ஜமீன்தார்கள் மக்களிடம் பெரும் தொகை வரியாக வசூல் செய்து ஆங்கிலேயருக்கு குறைந்த தொகையே கட்டினர். பலர் அந்த தொகையை கூட கட்ட வில்லை. ,(உம். அழகாபுரி பட்டினம் என்ற தற்போதைய தென்காசி மாவட்ட சுரண்டை) ஜமீன்தார்களில் பாக்கி வைத்தவர் தனிப்பட்ட சொத்துகள், ஜமீன்கள் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. (சிங்கம்பட்டி பழைய அரண்மணை) ஆனால் பல ஜமீன்கள் வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் முகலாயர் காலம் முதலே இருந்தனர். அவர்கள் பிராமின், மைதிலி பிராமின், ராஜ்புத், பூமிகார், முஸ்லீம் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். முன்னர் இருந்த நாயக்கர்கள் பெரும்பாலும் ஜமீன்தாரராக மாற்ற பட்டனர், அவர்களிடமே நிலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது அவை "ஜமீன்" நிலங்கள் என்று அழைக்கப்பட்டனர். சில உயர் சாதியினருக்கு வழங்க பட்ட நிலம் "அயன் " நிலங்கள் என்று அழைக்கப்பட்டது. அதனால் தான் கிராமங்கள் முன்னால் ஜமீன் மற்றும் அயன் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டது. அயன் கிராமங்களில் ஜமீனுக்கு குத்தகை கொடுக்க வேண்டாம் , நில வரி மட்டும் அரசுக்கு கொடுத்தால் போதுமானது. ஜமீன்தார்கள் படை வைத்து இருக்கும் உரிமை, சிவில், கிரிமினல் வழக்குகளில் விசாரித்து தீர்ப்பு சொல்லும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை பறிக்க பட்டது. ஆனாலும் இந்த உத்தரவு பெயர் அளவிற்கு மட்டுமே இருந்தது. ஆங்கிலேயருக்கு தெரிந்தும் தெரியாமலும் ஜமீன்தார்களின் நீதி பரிபாலனம் நடந்து வந்தன. சாதி பிரச்சினையில் ஜமீன்தார் முடிவே இறுதி தீர்ப்பு. மதுரை பகுதியில் ஏற்கனவே பாளையங்கள் இல்லாததால் அவை ஏலம் விடப்பட்டன. அதில் வேடுவ நாயக்கர் ஒருவரும், ஐந்து கப்பிலிய கவுண்டரும், அனுப்ப கவுண்டரும் ஜமீன்தாரர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர். இவர்களால் பாரம்பரிய நாயக்க ஜமீன்தார்கள் போல மக்களிடம் செல்வாக்கை பெற முடியவில்லை. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து பட்டா வழங்கவும், எல்லா கிராமத்திலும் நில கணக்குகளை பேண "கர்ணம்" நியமனம் செய்யவும் விதிகள் ஏற்படுத்த பட்டது. பெரும்பாலும் வடக்கே மிக அதிகம் வன்னியர், இடையில் பெரும்பாலும் நாயக்கர்கள், தெற்கில் மறவர்கள் ஜமீன்தாரராக நியமனம் செய்ய பட்டனர். தேனி மாவட்டத்தில கோம்பை போன்ற ஜமீன்களில் கவுடர் போன்ற சிறு ஜாதியினரும், உடையார் சாதியினரும் ஜமீன்தார் ஆக்கப்பட்டனர். ஜமீன்தார் இல்லாத இடங்களிலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியதாக கைப்பற்ற பட்ட பாளையங்கள் ஏழாயிரம்பண்ணை, நாகலாபுரம், (இந்த பாளையத்தின் இளைய ராஜா திரு சௌதிரபாண்டியன் என்பவர் தான் ஆங்கிலேயரால் கட்டபொம்மனுக்கு ஆதரவு தெரிவித்தார் என குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் மன்னிப்பு கோரினால் விடுதலை செய்ய படுவார் என்ற நிபந்தனை வைக்கப்பட, "ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்பதை விட மரணமே மேல் " என்று கூறி தூக்கில் ஏறியவர் என்பது நினைவுகூற தக்கது. இந்த ஊர் விளாத்திகுளம் புதூர் அருகில் உள்ளது. ), கோலார் பட்டி நிலங்களை ஏலம் மூலம் வைக்கப்பட்டு மிட்டாதார் என்ற புது நிலவுடமையாளர்கள் உண்டாக்கப்பட்டனர். மேல்மாந்தை, சொக்கம்பட்டி, சுரண்டை நடுவர்குறிச்சி ஆகிய ஜமீன்கள் ஆங்கிலேயருக்கு துரோகம் இழைத்தனர் என கருதி அவைகள் மிட்டவாக மாற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. முன்னர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி சீமை பாளையக்காரர்கள், ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் 1801 ஆம் ஆண்டுக்குள் அடக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பாளையக்காரர்கள் பலர் ஒருவருக்கு ஒருவர் பகைத்து கொண்டு ஆங்கிலேயர்க்கு உதவி சக பாளையக்காரரை ஆங்கிலேயர் தோற்கடிக்க உதவினர். ஜமீன்தார்களின் குழந்தைகள் கல்வி கற்க சென்னையில் ஒரு உறைவிட பள்ளி நிறுவப்பட்டது. அதில் ஆங்கிலேயருக்கு அடிபணிய ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது. பெரிய பரப்பளவு நிலங்களை ஏலம் எடுத்த சில மிட்டாதாரர்கள் ஜமீன்தார் போல அதிகாரம் செய்யலாயினார். தஞ்சை மாவட்டத்தில் இவ்வாறு ஏலம் எடுத்த "பண்ணைகள் " கூலி தொழிலார்களுக்கு மிக குறைவான கூலி அளித்தனர். எதிர்ப்போரை கட்டி வைத்து அடித்து சாணிப்பால் கொடுத்து கொலை செய்தனர். கூலி தொழிலாளர்கள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் 1968 ஆம் வருடம் டிசம்பர் 25 ஆம் நாள் தலித் மக்கள் 44 பேரை குழந்தை, பெண்களுடன் சேர்த்து ஒரு குடிசையில் பூட்டி தீ வைத்து கொலை செய்தனர். கீழ்கோர்ட்டில் சிலர் தண்டிக்கப்பட்டாலும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் அவர்களை " சமூக அந்தஸ்தில் மதிப்பு மிக்கவர்கள் அதனால் இந்த கொலையை பண்ணையாளர் செய்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதி " விடுதலை செய்யப்பட்டனர். கொலைக்கு முக்கிய காரணமான கோபாலகிருஷ்ணன் நாயுடு மட்டும் பாதிக்க பட்ட மக்களால் சில வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்ய பட்டார். அது ஒரு பெரிய துயர் சம்பவம். கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முதல்வர் அண்ணா (தி மு க பதவி ஏற்ற புதிதில் ) அவர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். உப்பு, வெடியுப்பு, தனி மனித வருமானம், வேலை சம்மந்தமான வரிகள் ஆங்கிலேயரால் நேரடியாக வசூல் செய்யப்பட்டன. நெல்லை சீமையில் தாமிரபரணி கரையில் உள்ள சுடலை மாடன் கோவிலில் ஆடு பலியிட்டு வேண்டுதல் செய்யும் போது அந்த ஜமீன்தாரரருக்கு அந்த ஆட்டின் ஒரு தொடை இறைச்சியை கொடுக்கவேண்டும் என்றும், மற்றோரு ஜமீனுக்கு சொந்தமான சாஸ்தா கோவிலில் விழாக்களில் கோவிலில் ஆடு, கோழி வெட்ட கோவிலுக்கு குத்தகை பணம் என்ற பெயரில் எழுதப்படாத சட்டமாக பெரும் தொகை வசூலிக்கப்பட்டது. பெரும்பாலும் அந்த இடத்தில் உள்ள ஆதிக்க சாதியினராக ஜமீன்கள் இருந்ததால் அவர்கள் சாதி அடியாட்களை கொண்டு மக்களை அவர்கள் மிரட்டியும் கொடுமையும் செய்தனர். நிலவரியை வசூல் செய்ய கடுமையான முறைகளை பயன் படுத்தவும், வரி செலுத்தாத விவசாயிகள் நிலத்தை எடுத்து கொள்ளவும், ஏலம் விடவும் ஜமீன்தார்கள் அதிகாரம் பெற்றனர். நாயக்க மன்னர்களின் கோட்டைகள் கம்பெனி உத்திரவால் ஏற்கனவே இடித்து தள்ளப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனை 1799 அக்டோபர் மாதம் கயத்தாறில் தூக்கில் இடுவதை பார்க்க வருமாறும் அவ்வாறு வருவதற்கு முன்னர் தாமாகவே கோட்டைகளை இடித்துவிட்டு வருமாறு மேஜர் பானர்மன் உத்தரவு இட்டார் , பாளையக்காரகள் அவ்வாறே பயந்து தமது கோட்டைகளை இடித்து விட்டு கட்டபொம்மனை தூக்கிலிடுவதை காண புறப்பட்டனர். . ஜமீன்தார்களை மேற்பார்வையிட, பேஸ்குஸ் கணக்கிட்டு வசூல் செய்ய கலெக்டர் நியமனம் செய்ய பட்டார். ஜமீன்தார்கள் மக்களை கசக்கி பிழிந்தனர், சிறு தவறுக்கு கூட மக்கள் கடுமையான முறையில் தண்டிக்க பட்டனர். நிலம் பறிக்கப்பட்டது, ஆடம்பரம், சூதாட்டம்,அடாவடித்தனம் மிகுந்தது. பலர் பெண்கள் மீது காமம் கோண்டு அழிந்தனர் ( தேனீ மாவட்ட ஜமீன் ) .விவசாய மக்களுக்கு பெரும்பாலும் வைக்கோலே மிஞ்சின. ஜமீனின் மக்கள் தமது வீட்டிற்கு திருமணம் என்றால் சிறிது பணம் சுருள் வைத்து அழைப்பதும், அவர் பட்டம் ஏறும்போதும் பட்ட காணிக்கை வழங்குவதும், கோவில்களில் முதல் மரியாதை அளிப்பதும் கட்டாய படுத்த பட்டது. சில ஜமீன்களில் மழை வேண்டி ஆடுகளை ஜமீன்தாருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. பல ஜமீன்கள் அவர்களின் ஆடம்பரத்தில், பெண் மோகத்தில், சூதாட்டம், குதிரை பந்தயம் போன்ற வற்றில் ஈடுபட்டு தானாக அழிந்தன. சில ஜமீன்கள் தமிழை வளர்த்தனர், கோவில்கள் எழுப்பினார்கள், சிலர் பள்ளிகள் கட்டி கல்விக்கு உதவினர். அந்த காலத்தில் ஜமீன்தாரை பற்றி குறை சொல்லொவோ, எதிர்த்து பேசவோ மக்கள் அஞ்சினர். ஜமீன்தார்கள் முன்னர் ஒரு போலியான உயர்வு நவிற்சியில் (myths) மக்களை நம்ப வைத்து பயமுறுத்தி வைத்து இருந்தனர். ஆனாலும் ஜமீன்தார் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகும் பல கிராமங்களில் அவர்கள் முக்கிய நபர்களாக உள்ளனர். 1804 ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகில் விருபாக்ஷியில் ஆங்கிலேயருக்கு எதிராக கோபால நாயக்கர், லட்சுமி நாயக்கர் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு போர் முழக்கம் செய்து பழனியை கைப்பற்றினர். பல இந்தியா அதிகாரிகள், அரசு கச்சேரிகள் தாக்கப்பட்டன.ஆங்கிலப்படை வரவழைத்து எழுச்சி அடக்கப்பட்டது. 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். லட்சுமி நாயக்கர் தனது மச்சான் மையவாடி பாளையக்காரரால் ரு 1500 பரிசுக்காக காட்டி கொடுக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆயக்குடி பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உதவி தனது ராஜ விசுவாசத்தை காட்டிக்கொண்டார். சொந்தங்களே துரோகிகள் ஆயினர். கைது செய்யப்பட்ட பலர் மலாக்காவிற்கு மருது சகோதர்களின் சொந்தங்கள் (72 பேர்) போல நாடு கடத்தப்பட்டனர். இந்த கொடுமையான ஜமீன்தாரி நடைமுறை மெட்ராஸ் மாகாணத்தின் 1947 ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின் படி 1949 இல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். உழுதவருக்கு நிலம் சொந்தம் ஆக்கப்பட்டது. ஆனால் நிலத்தில் நேரடி உழவு செய்யாத ,குத்தகை கொடுத்து நிலத்தை இழந்த , பார்பனர்கள் நிலத் திற்கான நஷ்ட ஈடு பெற்று.ஜாமிந்தார் ஒழிப்பில் லாபம் அடைந்தனர்..நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் சமதர்ம நோக்கில் இயற்றப்பட்ட முதல் சட்டம் இது தான் என அறிய முடிகிறது. தகவல் : The Role of zamindars in Tamilnadu : The historical study. By Dr C. Jeyaveeragandhi. Introduction of Zamindari system.

மலப்புழா அணையும் திப்புக் கோட்டையும்🥰