கேள்வி :
என் பதில் :
கல்லும் மண்ணும் உண்மையாகவே சுமந்து வீடு
கட்டியோர் ,
இந்தத்
தலைமுறையிலேயே அதிகம்
பேர்
இருக்க
வாய்ப்பில்லை. அதிகபட்சம் கடன்
வாங்கி,
கட்டுமான வல்லுனர் (என்று நம்பப்படும்!) ஒருவரிடம் ஒப்பந்தம் போட்டோ,
போடாமலோ, பல
தொழிலாளர்களைக் கொண்டு
வீடு
கட்டியிருக்கலாம். அல்லது,
ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை
வாங்கியிருக்கலாம். இதுதான் நிதர்சனம். நிற்க.
கல்லும் மண்ணும் சுமந்து கட்டியதோ, கடன்
வாங்கி
காண்டிராக்டர் மூலம்
கட்டியதோ, வீட்டை
வாடகைக்கு (அக்காலத்தில் 'ஒத்திக்கு' - தற்போது இது பரவலாகப் பயன்பாட்டில் உள்ளதாகத் தெரியவில்லை!) விட்டுவிட்டோமென்றால், பின்னர் அங்கு
நுழையும் போதெல்லாம், தங்களது வினாவிலுள்ள மாதிரியான நிலைதான் பெரும்பாலும்.
பொதுவாக வீட்டுச் சொந்தக்காரருக்கும், வாடகைதாரருக்கும் உள்ள
உறவானது ஏன்
அமெரிக்க-ரஷ்யா
உறவு
மாதிரியோ, ச்சைனா-தாய்வான் உறவு மாதிரியோ இருக்கிறது… எதனால்
துரியோதனன்-கர்ணன்
மாதிரியோ, கிருஷ்ண பரமாத்மா-அர்ஜுனன் மாதிரியோ இருப்பதில்லை என்பதை
ஆய்வு
செய்தால், முனைவர் ஆவது
திண்ணம்.
அடியேன் கோவையில் ..வாடகைதாரராகவும் சில
வீடுகளில் வசித்துள்ளேன். தற்போது வாடகைக்கு விடப்பட்டிருக்கும் ஒரு
அடுக்கக வீட்டின் சொந்தக்காரராகவும் இருக்கின்றேன். அட
ஒரே
ஒரு
வீடுதாங்க.. மொத்த
அடுக்ககமும் என்னோடதா இருந்தா, இங்க
பதிலெழுதுவதற்கெல்லாம் நேரமிருக்குமா என்ன!
வாடகைக்கு வசித்த
இடங்களில், ஒரே
ஒரு
வீட்டில் மட்டும்தான், அதன்
சொந்தக்காரர்கள் (அதே வீட்டின் மாடியில் வசித்தனர்) கிட்டத்தட்ட எங்களது பெற்றோரைப் போல
நடந்து
கொண்டனர் (உரிமையோடு அவ்வப்போது வீசும் வசவுகள் இல்லாமல்). அந்த
உரிமையாளர் அருகில் இருந்த
ஒரு
மனையை
எனக்கு
வாங்கித் தருவதற்கு முன்வந்தபோது, எதிர்காலம் பற்றிய
தொலைநோக்குப் பார்வை
அப்போது இல்லாத
காரணத்தால், அவ்வரிய வாய்ப்பைக் கோட்டை
விட்டேன். மற்ற
வீடுகளில் எல்லாம், உரிமையாளருடனான உறவு
ஸ்ட்ரிக்ட்லி டிரான்ஸாக்ஷனல்தான். ஆனால்
யாருடனும் பஞ்சாயத்தெல்லாம் செய்ததில்லை; சுமுகமான தொடர்புதான்.
என்னுடைய வீட்டில் வசிக்கும் வாடகைதாரரை நான்
சந்திப்பது, வாடகை
ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும், புதிதாகக் குடிவருவோராக இருந்தால் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகவும்தான் (கேஷ் டீலிங் செய்யும் பலர் இன்னமும் இந்த டிஜிட்டல் யுகத்தில் கூட உள்ளனர் - அடியேன் சில ஆண்டுகளுக்கு முன்பே மைக்ரேட் ஆகிவிட்டேன்). அனாவசிய அலைபேசி உரையாடல்கள், வாட்ஸாப் பரிமாற்றங்களெல்லாம் அவர்களுடன் வைத்துக் கொள்வதில்லை.
வாடகைக்கு விட்ட
வீட்டில் ஏதேனும் பழுதானால், மின்
பணியாளர், தச்சர்,
கொத்தனார், குழாய்
சரிசெய்பவர் போன்ற
வல்லுனர்களைப் பல
வருடங்களாக அறிந்து, செவ்வனே பயன்படுத்திய அனுபவம் உள்ளவரென்பதால், வாடகைதாரருடனான தொடர்பையெல்லாம் இல்லத்தரசியிடம் ஒளட்சோர்ஸ் பண்ணிவிட்டேன். ஒப்பந்தமும் அவர்
பெயரில்தான்; வாடகையும் நேராக
அவரது
வங்கிக் கணக்கிற்கே போய்விடும் என்பதால், அவரும்
ஆர்வத்துடன் இதை
எதிர்கொள்வதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்
தெரிவிக்கின்றன!
வாடகைக்கு விடும்வரைதான் அது
நம்முடைய இல்லம்.
விட்டபின்னரும் அதை
நாம்
வசிக்கும் இல்லமாகவே கருதி,
அதன்
மீது
பற்றுவைப்பதுதான் பிரச்சினைக்கு காரணம்.
வாடகைதாரர் குடியிருக்கும்வரை அது
அவருடைய இருப்பிடம் என்று
நமக்கு
நாமே
நினைவூட்டிக் கொள்ள
வேண்டியது அவசியம்.
அத்தகைய தெளிவு
சொந்தக்காரரிடம் இல்லாவிட்டால், எப்போதாவது அந்த
வீட்டிற்குச் செல்ல
வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் கூட,
சொந்த
வீட்டைப் போல
அங்குமிங்கும் புகுந்து புறப்பட்டு, 'ஐயோ, என்னங்க இது.. இது பூஜை அலமாரி ஆச்சே.. இதுல போயி என்னத்தையோ குப்பை மாதிரி குமிச்சு வெச்சிருக்கீங்க..' என்றெல்லாம் டென்ஷன் ஆகிவிடுவோம்.
குடியிருப்பவர் இறை
நம்பிக்கை அற்றவராக இருந்தால், அவருக்கு பூஜை
அறையும், தேவையற்ற பொருட்களைக் குவித்து வைக்கும் சரக்கு
அறையும் வெவ்வேறல்ல. அல்லது,
அவர்கள் பூஜை
அறைக்கு பதிலாக
சின்னதாக ஒரு
பூஜை
அலமாரியை வேறெங்காவது வைத்திருக்கலாம். அவர்களுக்கு எது
சரிப்பட்டு வருமோ,
அதைத்தானே அவர்கள் கடைப்பிடிப்பார்கள்.
உதாரணமாக, வீட்டைப் புதிதாக ஒருவருக்கு வாடகைக்கு விடும்
முன்னர், அங்கு
மராமத்து வேலைகளைச் செய்யும் சில
நாட்கள் / வாரங்களுக்கு, நாங்கள் வழிபடும் தேவியின் திருவுருவப் படத்தை
அங்கு
வைத்து,
தினசரி
விளக்கேற்றி வைப்பது எங்களது வழக்கம். ஒரு
வாடகைதாரரிடம்,
'நீங்கள் வழிபடாவிட்டாலும், தேவியின் படத்தை, ஹாலில் உள்ள ஷோகேஸ் உள்ளாவது வைத்துக் கொள்ள முடியுமா?,' என்று
கேட்டபோது, அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்கள் வீட்டைக் காலி
செய்தபோது, தேவியின் திருவுருவப் படம்
அந்த
ஷோகேஸில்தான் இருந்தது.
அதற்குப் பின்னர் வந்த
ஒரு
இளைய
தம்பதியினர், 'ஓ, மிகவும் அழகாக உள்ளதே இந்த தேவியின் திருவுருவம்.. நாங்கள் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டுமென்றால் ஏதேனும் குறிப்பாகச் செய்ய வேண்டுமா!' என்று
எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு,
அவளை
வழிபடவே செய்தனர். இருவரையுமே நாங்கள் எவ்விதத்திலும் கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
நன்றி ..வணக்கம்
உங்கள் கனவு இல்லம் வாடகை வீட்டில் இருந்து ..உங்கள் சொந்த வீடாக மாற வாழ்த்துக்கள் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
Comments
Post a Comment