உடுமலை வரலாறு is
feeling
grateful with Kumararaja
Thirumurthi in Udumalpet, India.
·
பல்லடம் வட்டாட்சியருக்கு
உடுமலை வரலாற்று வெளியீடான தென்கொங்கின் தொன்மங்கள் நூல் பரிசளிப்பு
திரு. விஷ்ணுகண்ணன்
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தோற்றுவாய்களில்
ஒருவர். கடந்த 2016 முதல் தொடர்ந்து பயணிப்பவர்களுள்
முதன்மையானவர்.
2017 – 18 ஆம் ஆண்டுகளின் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூலுக்காக குறிச்சிக்கோட்டை
வருவாய் ஆய்வாளரக இருக்கும் போது தளிஞ்சி மலைப்பகுதியில் உள்ள கோட்டைச் சிதிலங்களையும் அங்கிருக்கும் கற்சிற்பங்களையும்
ஆவணப்படுத்த உதவியவர்,
தளி எத்தலப்ப மன்னர் சார்ந்த ஆவணங்களைத் தொகுக்கவும். அரசு அதிகாரிகளை முறையாக அணுகவும் ஏற்பாடு செய்து கொடுத்தவர்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பணிகளைத் தொடர்ந்து நெறிப்படுத்தி வரும் நெறியாளர்களுள் ஒருவர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவினையும் கண்ணுற்று கருத்துத் தெரிவிக்கும்
கருத்தாளர்.
2018 மே 19 ல் வெளியிட்ட தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர் நூலுக்கு அணிந்துரை வழங்கிய வரலாற்று ஆய்வாளர்.
தளி கோட்டை குறித்தும், சிதிலமடைந்த நினைவுச்சின்னங்கள் குறித்தும் உரிய அரசு ஆவணங்களில் பதியச் செய்தவர்.
தம் அரசுப்பணியோடு
வரலாற்றுப்பணிகளுக்கும் முக்கியத்துவம்
கொடுக்கும் முகாமையான பங்களிப்பாளர்.
உடுமலை வரலாற்று நூலுக்கு நல்லதொரு வாழ்த்துரை வழங்கியவர்.
உடுமலையில் தலைமையிடத்து
துணை வட்டாட்சியராக
இருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றி தற்போது பல்லடத்தில் வட்டாட்சியராகப்
பணியாற்றி வருகிறார்.
பல்வேறு பணிச்சுமைகளுக்கும் இடையிலும் இன்று தென்கொங்கின் தொன்மங்கள் நூலினைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
உடுமலை வரலாற்று நடுவத்தின் பணிகளுக்குத் தொடர்ந்து இவரைப்போன்ற அரசு அலுவலர்கள் துணையிருப்பதால்தான் வரலாற்றுப்பணிகள்
தொடர்ந்து நடைபெற ஏதுவாக உள்ளது.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பணிகளுக்கும்,
நடுவத்தின் பொறுப்பாளர்களுக்கும் தொடர்ந்து நல்லாதரவு நல்கி வரும் வட்டாட்சியர்
விஷ்ணு கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும்
தெரிவித்துக்கொள்வோம்.
உடுமலை வரலாறு 09.06.2022
Comments
Post a Comment