கேள்வி : கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் சாமானிய மனிதர்களின் வீடு கட்டும் கனவு என்ன ஆகும்?
கண்டிப்பாக பாதிக்கப்படும் தான்.
ஆனால்
விலையேற்றம் என்பது
தவிர்க்கமுடியாதது.. இந்த
விலையேற்றம் கட்டுமான பொறியாளர்களையோ அல்லது
தொழிலாளர்களையோ சார்ந்தது இல்லை,
இது
அரசின்
கொள்கை
முடிவுகள் மற்றும் புறக்காரணிகளால் மட்டுமே நிர்மாணிக்கப்படுகிறது.
உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் 2020இல்
ஒரு
கொத்தனாரின் சம்பளம் 750இல்
இருந்து 900வரை
இருந்தது ..இன்று
அதே
கொத்தனாரின் சம்பளம் 1000ரூபாயை
தொட்டுவிட்டது. கையாள்
சம்பளமும் அதேபோல
800 Rs தாண்டிவிட்டது.. இதுபோதாது என்று
செங்கல் ,மணல்,
சிமெண்ட் என
அனைத்துமே தங்கள்
பங்கிற்கு விலை
ஏற்றத்தை கண்டிருக்கின்றன.
இந்த
சூழ்நிலையில் வீட்டிற்கான கட்டுமான செலவுகள் நிச்சயமாக அதிகரிப்பதில் எந்த
ஆச்சரியமும் இல்லை.
தற்போதய சூழலுக்கு ஏற்ப
வீட்டின் ஒரு
சதுர
அடிக்கு 2000ரூபாய்
முதல்
3500 ரூபாய்
வரைக்கும் கட்டுமானத்தின் தரம்
மற்றும் வீடு
உரிமையாளரின் தேவைக்குஏற்ப விலை
நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது.
தமிழில் ஒரு
பழமொழி
உண்டு
.."ஏறிய
விலைவாசிகள் இறங்கா"..
அதற்கு
ஏற்ப
சரியான
முறையில் திட்டமிட்டு உங்கள்
கட்டுமான வேலைகளை தொடங்குங்கள்.. பொருட்களின் விலை
குறையும் என்று
காத்திருப்பது உங்கள்
விருப்பம்..
கடைசியாக ஒரு
பழமொழியை சொல்லி
முடிக்கிறேன் ..
"காற்றுஉள்ளபோதே தூற்றிக்கொள்"
நன்றி ....கனவு இல்லம் நிறைவேற ...
சிவக்குமார் VK
Comments
Post a Comment