கேள்வி : கணினி துறையும் ..மருத்துவத்துறையும் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்
மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எந்தெந்த வகையில் எதிர்காலத்தில் பயன்படுமென எண்ணுகிறீர்கள்? அதற்கு மருத்துவ மாணவர்கள் எவ்வாறு தயாராக வேண்டும்?
·என் பதில் :
அறிவியலை அதன் அடிவேர் வரை சென்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு மிகவும் அதிகம்.
இன்றய நவீனநிரலாக்க
மொழியான பைதான் துணை கொண்டு நினைத்த ஒன்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுற்பதில் செய்ய முடியும் என நான் நினைக்கிறேன்.
இதனால் பல இதய நோயாளிகள் பலன் பெற முடியும்.
செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படும் பொழுது சில வினாடிகளில் இது இவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு தெரியவரும். அதே சமயத்தில் அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கபடும்.
அவர் இருக்கும் இடத்திற்கு மீட்பு குழுக்கள் தானாகவே வந்து நோயாளியை ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு
அழைத்து செல்ல முடியும்.
மேலும் மருத்துவர்கள்
மருத்துவமனையில் இருந்தவாறே நோயாளியின் இதய துடிப்பினை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். இவை அனைத்துமே நோயாளிக்கு மாரடைப்பு ஏற்ப்பட்ட சில வினாடிகள் ஒன்றன் பின் ஒன்றாக தனிச்சயாக பிறரின் தூண்டுதல் இல்லாமல் செயற்கை நுண்ணறிவால் நடத்தி காட்ட முடியும்.
மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் நோயாளிகளை பார்க்காமலே
மருத்துவம் செய்யும் காலம் விரைவில் வர இருப்பதால் மருத்துவ மாணவர்களும்
இந்த புதிய தொழில்நுட்பங்கள் பற்றி நிறைய படிக்க வேண்டும்.
நன்றி ...
நேற்று இரவு சென்னையிலிருந்து உடுமலைப்பேட்டை புகைவண்டி பயணத்தில் உடுமலை வென்சப்பட்டி கணினி பொறியாளர் தம்பி சரவணகுமார் (HCL ) நம் சமுதாயம் இன்றைய தலைமுறையில் கல்வி ,வேலைவாய்ப்பு ,வாழ்வியல் சார்ந்து நிகழ்வுகளை பற்றி கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681...
Comments
Post a Comment