https://youtu.be/BLkN1yoy2wk
இசை என்பது போதை தரும் விசயம்...அதில் நம்மை மூழ்கிகிடக்க பழகிவிட்டால், வெளிவருவது என்பது சற்றுக் கடினமான விசயமே...
( மேலெழுந்த வண்ணமே உள்ளது)
பொத்தம் பொதுவாக, நமது இனத்தவர்களுக்கு, இசைமீது தீராத பிரியமுண்டு...
ஒரு தாலாட்டு பாடாலானாலும் சரி, மெட்டுக்கட்டி பாடும் கும்மிப் பாடலாகட்டும், வழிவழியாய் பாடப்படும் சாங்கியப் பாட்டுகளாகட்டும், ஒயிலாட்ட ,சேர்வைப் பாடல்கள் ஆகட்டும் படிப்பறிவு துளியும் இல்லாத பல பல பெரியவர்கள் /பெண்கள் இன்றளவும் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. இளைஞர்கள்/இளைஞிகள் பழைய லெவலுக்கு பாட முடியவில்லை என்றாலும், சிறப்பாக முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... பழையனவற்றையாவது பாடி மகிழத்தான் செய்கிறார்கள்..
காரணம்...
உறுமி இசையும், உறுமி இசையோடு கூடிய தப்பும் துடும்பின் இசையும், தேவராட்ட சலங்கை இசையையும் கம்பளத்தான் என்பவன் தாயின் கருவறையிலே கேட்டு மகிழ்ந்து விடுகிறான்... அதனால்தான் தொட்டல்களுக்கும், சேர்வைப் பலகைகளுக்கும், சேவண்டிக்கும் அவன் கிருகிறுத்துப் போகிறான்../போகிறாள்..
இசையாலும் இறைவனை மகிழ்விக்க முடியும், மயக்கி பெற முடியும் என்று எண்ணங் கொண்டிருப்பதால்...... ஆராவாரமும் அங்கலாய்ப்புகளும், ஏசலும், பூசலும் நிறைந்த அரசியலை, நெருங்க அச்சப்படுகிறார்கள் என்பதே உண்மையும்கூட...
உருட்டல்களும், சுருட்டல்களும், மிரட்டல்களும் மிக்க அரசியலை அனுகுவதற்கு கம்பளத்தார்கள் மிரளுகிறார்கள்...
இது ஒருபக்கமிருக்கட்டும்
மேற்கண்ட சூழல்கள் இல்லாத, நகர வாழ்க்கை ஒட்டி வாழ்பவர்களின் குழந்தைகள் அமைப்பிற்குள் நுழைந்து அரசியல் கற்றுக் கொள்ளலாமென முன் வந்தால்... அமைப்பினரோ.... ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து, பெரிய ஆளாகி, அப்புறமா அமைப்புக்கு வா ...அப்பதா பதவி அது இது னு வழிகாட்டாறேனு மேலும் குழப்பிடறாங்க...
அரசியல் கட்சிலே இணைந்து, பாடுபட்டு பணி செய்து, பதவி வாங்கி, பெரியாளாகி,,, அமைப்புக்குள்ளே வந்து சமுதாய சேவைங்கற பேர்ல, மீண்டும் அரசியல் விழிப்புணர்வு செய்ய சொன்னா...??? அமைப்புக்கு சேவை செய்வார்களா ??? தான் சார்ந்த அரசியல் கட்சிக்கு சேவை செய்வார்களா னு சொல்லுங்க பார்க்கலாம்...
குறைபட்டுக்கிறதவுட குறை எங்குருக்குனு நமக்கு நாமே பரிசோதித்து கொள்ள வேண்டிய தருணமிதுவே...
🙏🏼🙏🏼🙏🏼
கே .என் .நாகராஜ் ..அவர்களுக்கு நன்றிகள் பல ....
Comments
Post a Comment