கேள்வி : நடுத்தர மக்கள் திருமணத்தில் செய்யும் தவறுகள் என்னென்ன?
என் பதில் :
நடுத்தர மக்கள் திருமணத்தில் செய்யும் மிக பெரிய தவறு தன்னை விட வசதியான வரனை தேடுவது தான்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம். நாங்க தான் கஷ்டப்படுற வாழ்க்கை வாழ்றோம். பொண்ணாவது போய் நல்லா வாழட்டும் என்பதே.
அப்படி தன் தகுதியை மீறிய வரன் பார்க்கும் போது, தன்னிடம் இருக்கும் எல்லாத்தையும் துடைத்து கொடுத்துவிட்டு போதாக்குறைக்கு கடனையும் வாங்கி வைத்து தாம்தூம் என்று திருமணத்தை நடத்தி விட்டு அப்பறம் கஷ்டப்படுவது.
தகுதிக்கு மீறி ஆசைப்படும் போது அதில் சில பிரச்சனைகளும் வர தான் செய்யும். சரியான மரியாதை கிடைக்காது. ஆண்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.
பையன் வெளிநாட்டில் வேலை பாக்குறான், கை நிறைய சம்பாதிக்கிறான், கார் வைச்சிருக்கான், சொந்த வீடு இருக்கு. இப்படியெல்லாம் சொல்லிட்டா போதும் உடனே கலர் கலராக கனவு காண வேண்டியது. பையனை பத்தி விசாரிக்குறதை கூட விட்டுட்டு கட்டி கொடுத்துட வேண்டியது.
சிலர் ஏமாற்று பேர் வழிகளாக கூட இருப்பார்கள். ஏற்கனவே திருமணம் ஆனதை கூட மறைத்து திருமணம் செய்து கொள்வார்கள்.
சிலர் ஆசைக்கு பெண் வீட்டில் தானாகவே முன் வந்து வரட்சணை தருவார்கள். தன் மகள் போற இடத்தில் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதற்காக. அப்படி இஷ்டப்பட்டு தருவதில் தவறில்லை. ஆனால் சில பேர் வரதட்சணை வேண்டும் என்று திருமணத்திற்கு முன்னே பயங்கரமாக நச்சரிப்பார்கள். அப்படி ஒரு வரனை வேண்டாம் என்று விட்டுவிட்டு வேறு வரனை பார்ப்பது நல்லது.
நடுத்தர குடும்பம் செய்யும் மிக பெரிய தவறு. அவசர அவசரமாக செய்யும் திருமணம். பொண்ணுக்கு வயசாகிட்டே போகுது, சொந்தக்காரங்க கேட்குறாங்க, ஊர் என்ன சொல்லும்ன்னு அவசரமாக செய்யும் திருமணம்.
தாமதமாக திருமணம் செய்வதில் தவறில்லை. தவறானவரை திருமணம் செய்தால் வாழ்க்கை முழுக்க கஷ்டம் என்பதை உணர வேண்டும்.
நன்றி ..
Comments
Post a Comment