கேள்வி : பங்குச்சந்தை ஒரு இலாபகரமான தொழிலாக இருந்தும், பல வருடங்கள் இத்துறையில் அனுபவம் வாய்ந்த பெரும்பாலான பங்கு தரகர்கள் ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்து பெரும் பணக்காரர்கள் ஆவது இல்லை?
என் பதில் :
அப்படி ஒன்றும் இல்லை, பொதுவாக ஓரளவு பணம் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் தான் தான் பணக்காரன் என்று எல்லேரிடமும் பெறுமையாக காட்டிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டு எதாவது விஷேசத்திற்கு வருபவர்கள் கழுத்து நிறைய நகைகளை மாட்டிக்கொண்டு வறுவார்கள் அவர்கள் ஓரளவுக்கு பணம் உள்ளவர்கள் middle class மக்கள். ஆனால் உண்மையான பணக்காரர்கள் கழுத்தில் ஒரே ஒரு Chain மட்டும் போட்டுக்கொண்டு வறுவார்கள் அலட்டிக்கொள்ளமாட்டார்கள்.
பொதுவாக நீங்களே ஒரு தொழிலில் இருந்து உங்களுக்கு பணம் வந்துகொண்டே இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் வருமான வரி கட்ட வேண்டி வரும் அப்பொழுது என்ன நினைப்பீர்கள் நான் இத்தனை வருடம் உசுர குடுத்து கஷ்டப்பட்டு உழைப்பை போட்டு எப்படி இலகுவாக சம்பாரிப்பது என்ற முறையை நான் கண்டுபிடித்திருப்பேன்? நான் எவ்வளவு நஷ்டப்பட்டிருப்பேன் அப்பொழுதெல்லாம் இந்த அரசு அய்யோ பாவம் ரொம்ப நஷ்டபட்டுவிட்டான் இவருக்கு ஊக்கதொகை கொடுப்போம் என்று கொடுத்ததா? அப்பொழுது எல்லாம் கண்டுக்காத அரசுக்கு இப்பொழுது நான் நன்றாக சம்பாரிக்கும் பொழுது அரசாங்கம் வந்து Easy-யாக வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்கி விடுவதா என்று எல்லோறுக்கும் தோன்றும் அதுவும் பஙகுச்சந்தையில் இருக்கின்றவருக்கு புரியும் நஷ்டம் என்றால் எப்படி இருக்கும் என்று. அதுவும் உண்மையான தினசரி வர்த்தகருக்கு புரியும். வரி என்ற பெயரில் பிடுங்கிவிடுவார்களே என்ற அச்சத்தில் மிகவும் அமைதியாகி விடுவார்கள்.
ஏழை என்ற தோற்றத்தை காண்பிக்க தொடங்கிவிடுவார்கள். பணம் கையில் இருப்பதால் அக்கம் பக்கத்தினர் வந்து கடன் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். இல்லை என்றால் மனஸ்தாபம் ஏற்படும். இன்னும் நிறைய பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளது. அது பணக்காரர் ஆகும்பொழுது புரியும். ஆகவே பெறும்பான்மையாக பங்குச்சந்தையில் நிறைய பணம் ஈட்டுபவர்கள் வெளியே தன்னை காட்டிக்கொள்ள விரும்புவது இல்லை. ஏனென்றால் பங்குச்சந்தையில் சம்பாரிப்பவர் என்றாலே பொதுவாக சூதாட்டம் என்று கூறுபவர்கள் அதிகம் ஏதோ சுழ்ச்சி செய்து அடுத்தவர் பணத்தை பிடுங்குபவர்கள் என்ற எண்ணம். ஆகவே தான் யாராக இருந்தாலும் பங்குச்சந்தையில் இருந்து சம்பாரித்த பணத்தை தனக்கென்று வேறு சிறு தொழில்களை துடங்கி அதில் இருந்து லாபம் வருவதாக காட்டிக்கொள்வார்கள்.
நிறைய பங்குச்சந்தையில் சம்பாதிப்பவர்கள் சந்தையை புரிந்து கொண்டு சம்பாதிக்கும் ஆட்களுக்கு தெரியும். 10வருடம் ஆகியும் பங்குச்சந்தையில் சம்பாதிக்காத ஆட்கள் உண்டு. இவர்கள் தனக்கென்று ஒரு வட்டம் போட்டுக்கொண்டு 1வாரம் நல்ல வருமானம் பாரத்ததும் இது தான் பங்குச்சந்தை என்று புரிந்துகொண்டேன் இந்த முறையை யாருக்கும் சொல்ல கூடாது என்றும் அடுத்தவர்கள் செய்வது எல்லாம் பொய் என்றும் நான் சரியான முறையை கண்டுபிடித்துவிட்டதாக நினைத்து தான் தான் பங்குச்சந்தையின் கடவுள் என்றும் என்னுவார்கள்.
அடுத்தத 2வது வாரம் நஷ்டம் ஆகும் என்ன ஆயிற்று என் சம்பாதிக்கும் முறைக்கு? அதனை சரி செய்யலாம் என்று ஆராய்ச்சியில் இறங்கி அதை புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். மறுபடியும் 1 வாரம் கழித்து அவர் முறை லாபத்தை தரும் அப்பாடி அதான பார்த்தேன் என் முறையாவது தோற்பதாவது என்று பித்திக்கொள்வார்கள். இப்படியே மாரி மாரி லாபம், நஷ்டம் என்று வருடக்கடைசியில் கணக்கு போட்டால் நஷ்டத்தில் தான் இருப்பார்கள். இந்த முறையை சரி செய்யலாம் என்று வருடக்கணக்கில் குண்டாசட்டியில் குதிரை ஓட்டுவார்கள் அதன் புரிதல் இல்லாமல். நாலு பேர் என்ன செய்கின்றார்கள் என்று நாமலும் அதை செய்து பார்த்து சரியான முறை எது என்ற விதத்தை கற்றுக்கொள்ளலாம் என்று முன் வருவது இல்லை.
இது தான் சரியான முறை என்று வேறு இல்லவே இல்லை என்று அந்த சிறு வட்டத்திற்குள்ளயே தான் இருப்பார்கள் இவர்களுக்கு வருமானம் வருவது போல் இருக்கும் ஆனால் மாதம் கடைசியிலோ இல்லை வருடக்கடைசியிலோ பார்க்கும்பொழுது நஷ்டத்தில் தான் இருப்பார்கள். இவர்களால் 40வருடம் ஆனாலும் சம்பாதிக்க முடியாது. பங்குச்சந்தையில் நஷ்டம், லாபம் தரக்கூடிய எல்லா முறைகளையும் கற்க வேண்டும் அப்பொழுது இந்த நேரம் தவறான சமிக்கையை மார்க்கெட் காட்டுகின்றது இந்த நேரத்தில மார்கெட்டில் நுழையக்கூடாது என்று தெரிந்து தவிர்க்க வேண்டும்.
சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தனக்கு மார்கெட் எப்படி போனாலும சம்பாதிக்கும் திறமை உள்ளது என்று தவறான நேரத்தில் மூக்கை நுழைத்து மூக்குடைபடுவது. அதை அடுத்தவர்க்கு தெரியாமல் பார்த்துக்கொள்வது. எடுத்துக்காட்டு நான் உப்பு விற்க போனேன் மழை வந்தது நான் பொறிகடலை விற்க போனேன் காற்று வந்து எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விட்டது என்று கால நிலையின் மேல் பழி போடுவது. ஏன் மழையும், காற்றும் வருடம் முழுவதும் ஒரு நாள் விடாமல் வருகின்றதா என்னா? அதற்கென்று சில காலங்கள் உள்ளது அந்த காலங்களை தவிர்த்துவிடுங்கள்.
ஏற்ற காலத்தில் ஏற்ற தொழிலை செய்யங்கள் லாபம் வரும். எப்பொழுதும் அவசரம் தான் நான் இன்றைக்கே பணக்காரன் ஆகவேண்டும் தினமும் கண்டிப்பாக லாபம் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதம். இது தான் சந்தைக்கோ அல்லது தொழிலிற்கோ ஆகாத பிடிவாத குணங்கள். இந்த காலங்களில் அமைதி காக்க வேண்டும் அப்பொழுது தான் சுயக்கட்டுப்பாடு வரும். சரியான காலத்தில் சரியான முதலீடு மூலமாக சம்பாதிக்க முடியும் அதை விட்டு விட்டு பங்குச்சந்தையில் சம்பாதிக்க முடியாதவர்கள் நடந்து முடிந்த செய்திகளை தங்களது Youtube சேனல்லி போட்டு சந்தையில் சம்பாதிக்க முடியாமல் செய்திகளை கூறி அனைவரையும் தங்களது சேனலை தினமும் பார்க்க வைத்து சமபாரிப்பார்கள். அவர்கள் சொல்லும் செய்தியை பார்த்து அடுத்த நாள் அந்த பங்கை வாங்குவது பின் நஷ்டம் தான். செய்தி என்பது நடந்து முடிந்ததை கூறுவது. முடிந்ததை வைத்து என்ன செய்ய முடியும்? சந்தையில் என்ன நடக்கின்றது என்பது அறிவை வளர்ப்பதற்கு தேவை இந்த முடிந்து போன செய்திகள். ஆனால் பங்குச்சந்தையில் சம்பாரிப்பதற்கு தேவை நடக்க போரதை முன்கூட்டியே தெரிந்து முதலீடு செய்து ஏறின பின்பு விற்று லாபம் பார்ப்பதே சரியான முறை.
இதை சொன்னால் அதெப்படி செய்திகள் வருவதற்கு முன்பே தெரிந்துகொள்வது? இவன் முட்டாளா இருக்கானே என்று தான் என்னை எல்லோரும் கூறுவார்கள். ஏனென்றால் ஒரு 15 வருடத்திற்குள் தொழில்நுட்பத்தில் அவ்வளவு மாற்றம். இன்று டீவி செய்திகள் தான் உலகம் காலையில் டீவியை போட்டால் 24 மணி நேரமும் டீவி. இதில் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு சேனலை ஆரம்பித்து இஷ்டத்திற்கு செய்திகளை மாற்றி மாற்றி பொய் புழுகுவது இது தெரியாத மக்கள் இது தான் உலகம் என்று மூளையில் பதிவு செய்துகொண்டனர். சற்று யோசித்துப் பாருங்கள் நமது அப்பா அம்மா காலத்தில் இப்படியா டீவிக்கு அடிமையாக இருந்தார்கள்? முதலில் அவர்கள் காலத்தில் டீவி என்பது குறைவு.
பொதிகை சேனல் மட்டும் தான் அப்பொழுது இருந்தவர்களுக்கு அறிவு இல்லாமலா இருந்தது? ஆயுள் காலமும் நீடித்திருந்தது. ஆனால் இன்று எல்லாத்திற்கும் டீவியை பார்ப்பது ஏன் சாப்பிடும் சாப்பாட்டிற்கு கூட டீவியில் சொல்லுவதை தான் சாப்பிடும் நிலை இன்று ஆகிவிட்டது என்ன சொல்லி என்ன செய்ய? பேசினால் பேசிக்கொண்டே போவேன். டீவி செய்தியை வைத்து உங்களால் சம்பாதிக்க முடியாது.
நீண்ட ஆயுளையும் பெற முடியாது. ஒரு மனிதனை 3மாதம் ஒரு பழக்கத்தை தொடரந்து செய்ய வைத்தால் அவன் தானாகவே இது உண்மை என்று மனதில் தானாக பதிந்துவிடும் அவனே மாறி விடுகின்றான். பங்குச்சந்தையில் பணக்காரர் ஆனவர்கள் உண்டு வெளியே காட்டிக்கொள்வது இல்லை இது தான் என் பதிவு..
நன்றி..
சிவக்குமார் VK
Comments
Post a Comment