வடமதுரை ஒன்றியம் சுக்காம்பட்டி அரண்மனையார் அவர்களின் இல்ல திருமண விழாவில் 12 மதனகம்பங்கள் நாட்டி....
மண்பானைகள் கலையங்கள் கொண்டு சுந்தலுபெந்தாநாயக்கர் வைத்து சாங்கியங்கள் செய்து...தேவலோக பெண்கள் சாலிபாடல்கள் பாடி
உற்றார் உறவுகளோடு உருமி ஓசைகள் முழங்க மணமக்களை வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துக்கள் தெரிவித்தவுடன் விதவிதமான விருந்தோம்பல் வைத்தாலும்.... கண்ணுக்கு விருந்தாக மிகவும் மகிழ்ச்சியை உண்டாக்குவது ராஜகம்பளத்தார்களின் வேஷம்தான் முக்கியமானது ... ஆடுபவர் இளைஞர்கள் என்றாலும் மதனியார்கள் கொழுந்தியாக்கள் செய்யும் சேட்டையும் ஆட்டமும் அருமை என்றாலும்....கிணறு வெட்டி கிணற்றுக்கு அருகில் குழந்தை தொட்டில் அமைத்து அதற்கு பூஜைகள் செய்து வணங்கி வருவது கொடி கொடி வம்சமும் தலைத்து ஓங்கி வளர்ந்து தொட்டிய ராஜகம்பளத்தார்களின் பாரம்பரியமும் பண்பாடும் கலாச்சாரமும் காப்பாற்றி கம்பு தானிய போல் வளர்ந்து வரவேண்டும் என்று கம்பும் கம்பில் கிளறிய வெல்லமும் கலந்து பொதுமக்களுக்கு வழங்கி திருமண விழாவை நிறைவு செய்யும் வேஷம் காலங்காலமும் கடைபிடித்து வரும் சமுதாயம்தான் ராஜகம்பளம்....
வாழ்க வளமுடன்🍋👍🙏🥰🤝👍📚📚📚✍️✍️✍️
தகவல் :அய்யலு கிறிஸ் ..PC தங்கவேல் .
Comments
Post a Comment