Posts

கரைவழி நாடும் நாகரீகமும் - உருவான விதம்

 கரைவழி  நாடும் நாகரீகமும் - உருவான விதம் அனைவருக்கும் அன்பு வணக்கம்.  2022 ஏப்ரல் 16 க்குப் பிறகு மீண்டும் ஒரு மண்சார்ந்த பெருநூல் வெளியிட்டு விட்டோம். அனைத்தையும் ஆவணப்படுத்தும் நாம் இந்த  கடந்த இரண்டாண்டு நிகழ்வுகளையும் கொஞ்சம் அசைபோடுவோம்.  நூலைப்பற்றியும், நல்ல மனிதர்களைப்பற்றியும் கணக்கு வரவு செலவுகளையும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில்  கடந்த  ஐந்து ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். இது  ஆறாவது ஆண்டு  2024 கரை வழி நாடும் நாகரீகமும்.  கடந்த 2022 செப்டம்பர் 5 ஆம் நாள் தலைவர் திரு. குமாரராஜா இல்லத்தில்  சில கசப்பான நிகழ்வுகளுடன்  கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தென்கொங்கின் தொன்மங்கள் எனது பெயரில் வரவேண்டும் மற்ற பெயரில் வரக்கூடாதெனவும் இறுதியாக உறுதி செய்ப்பட்டு  பல்வேறு மன நெருக்கடிகளுக்குப் பிறகு நூல் வெளிவந்துவிட்டது.  அதற்கடுத்த சென்னை தொல்லியல் துறை அலுவலகத்தில் முதன்மைக் கண்காணிப்பாளராக திருமதி. மூர்த்தீஸ்வரி இருக்கும்போது அவர்தான் இந்த அமராவதி நதிக்கரையினைப் பற்றியும் இங்குள்ள கல்வெட்டுகள் குறித்தும், இந்த நதிக்கரையிலிருந்து உருவான நாகரீகத்தைய

குமணனின் சரித்திரத்தைப் படித்தது முதல் அதற்கான பணி

ஏப்ரல் 14, சித்திரை 1  திட்டமிட்ட பயணம், திட்டமிட்டவாறே நடந்தது.  சகோதரர் பிரதீப்புக்கும், உடன்பிறப்பு மூர்த்தீஸ்வரிக்கும் நன்றிகள். குமணனின் சரித்திரத்தைப் படித்தது முதல் அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் அல்லது விரைந்து எழுது வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், குமணன் குறித்தான முழுமையான தரவுகள் கிடைக்காமல்  எழுதுவது  சற்று சிரமமாக இருக்கும். இருந்தது.  கடந்த  2023 அக்டோபரில்  கூக்கால் சென்ற போது அங்கிருக்கும் சில நண்பர்கள் இதுபோன்று இங்கு  சித்திரை 1 ஆம் நாள் இங்கிருக்கும் பாப்பிலியப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.  இந்தப் பகுதி மக்கள் அந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவர் என்றும், அன்று ஒரு நாள் மட்டும் அங்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும்  தகவலாக அறிந்தோம். அது முதல் சித்திரை 1 கூக்கால் போகவேண்டும் என்ற எண்ணமிருந்து வந்தது. கடந்த கிழமை ஆனைமலை சென்றபோதும்,  அடுத்த கிழமை சித்திரை 1 எனவே, நாம்  கூக்கல் செல்லவேண்டும் பிறகு போகலாம் என்று பேசிவிட்டு வந்தோம்.  இந்தக் குமணன் பயணத்தில் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று மனம் விரும்பியது. இது கடந்த 2021, 22ல

ஆன்மீக பயணம் ..சென்றாய பெருமாள் கோயில் ..கம்பளசொந்தங்களுடன் ..

Image
  ஒரு இனியமையான இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் ஆன்மீக பயணம் .. சென்றாய பெருமாள் கோயில்  .. கம்பளசொந்தங்களுடன் .. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோ.காமாட்சிபுரத்தில் பழைமையான சென்றாய பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. விழாவில் ஊரின் அருகே உள்ள பெருமாள் மலையில் இருந்து வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இரண்டாவது நாள் தேவராட்டம், காவடியாட்டம் என ஆட்டம் பாட்டத்துடன் பெருமாள் வீதி உலா அழைத்துச் செல்லப்பட்டார். மூன்றாவது நாள் ராஜகம்பள சேவை விளையாட்டுகள் நடந்தன. இதையடுத்து நடந்த மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பெருமாள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று விடைபெற்றுகொள்வதாகக்கூறி மலையை நோக்கிப் புறப்பட்டார். ஆனால் பெருமாள் மக்களோடு மக்களாகத் திருவிழாவில் ஆட்டம் பாட்டத்தில் மகிழ்ந்ததால் மலையேறத் தயக்கம் காட்டுவதாகவும், அதனால் பெருமாளை வலுகட்டயாமாக பக்தர்கள் மலையேற்றுவதாகவும் கூறப்படும் நிகழ்வுடன் திருவிழா முடிந்தது. நேற்று பணி ஒய்வு பெற்ற புள்ளியியல் துணை இயக்குனர்    மேனாள் மு .சீனிவாசன் அவர்களை சந்தித்